»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் அறிமுகம் அப்படிங்கிறதால மாதவனை ஹீரோவா செலக்ட் செஞ்சீங்களா?

டும் டும் டும் படப்பிடிப்பில் பிஸியாக..
இல்ல. கதைக்கு அவர் பொருத்தமா தோன்றவே அவரை செலக்ட் செய்தோம். மேலும், மாதவன் இளம் ஹீரோ,புகழ் பெற்று வருகிறார், பெமிலியர் ஆனவர். So, அவரை தேர்வு செய்தோம். நிச்சயமாக கதைக்கு பொருத்தமாஇருந்த காரணத்தாலதான் அவரை தேர்வு செய்தோம்.

அதேமாதிரி, ஜோதிகாவும். அவரை வெறும் ஜோதிகாவா நாங்க பார்க்கல. எல்லோரும், ஜோதிகாவை கிளாமர்ஆர்ட்டிஸ்டா பார்த்து பழகிட்டாங்க. ஆனா, நான் ஜோதிகாவை அப்படிப் பார்க்கல. அவரை வித்தியாசமாக காட்டநினைத்தேன். பாவாடை, தாவணியில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்றபோது அவர் என் கண்களுக்குகங்காவாகத்தான் தெரிந்தார்.

உங்க பின்னணி கிராமம்ங்கறதால கிராமத்துக் கதையை செலக்ட் செய்தீர்களா?

இருக்கலாம். உதயா படத்தோட தொடக்கம் கூட கிராமத்துலதான் ஆரம்பிக்கும். நான் பிறந்தது கிராமத்துல. அந்தபாதிப்பு நிச்சயமாக இருக்கும். டும் டும் டும்ல, கிராமத்துப் பின்னணி இருந்தாலும் கூட நகரத்தையும் பாலன்ஸ்செய்திருக்கிறேன்.

நம்ம தமிழ் சினிமாவுல கிராமத்த இன்னும் சரியா காட்டல. காட்ட வேண்டியது நிறைய இருக்கு.

உங்களுக்குன்னு பாணி ஏதாவது கிரியேட் செய்ய எண்ணம் உண்டா?

பாணி என்று எதுவும் கிடையாது. ஒரே மாதிரி படம் செய்யக் கூடாது என்பது எனது எண்ணம். உதயா நிச்சயமாகடும் டும் டும்க்கு கான்ட்ராஸ்டான படமா இருக்கும். காதல், வன்முறை அப்படின்னு உதயா படமே மிகவும்வித்தியாசமா இருக்கும். டும் டும் டும் படத்துல பார்த்த மென்மை, காதல் எதுவுமே உதயா படத்துல இருக்காது.

வித்தியாசமான படங்கள் செய்ய ஆசைப்படறேன். ஒரு கிரியேட்டர்னா, ஒரே மாதிரி பாணியை உருவாக்கிக்கொண்டு உழலக் கூடாது. வெளிய வரணும், அப்பத்தான் உங்க சுயத்தை நீங்க இழக்க மாட்டீங்க. Liberty, Liberty,Liberty அதுதான் ஒரு படைப்பாளிக்குத் தேவையான விஷயம்.

டும் டும் டும் மியூசிக்முதல்ல தினா அப்புறம் கார்த்திக் ராஜான்னு முடிவானது. என்ன காரணம்?

மணி சாரோட மெட்ராஸ் டாக்கீஸ் டெலி சீரியல் ஒன்னுல (புன்னகை) தினா அப்படிங்கிறவர் நல்லா மியூசிக்போட்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே பார்க்கலாமே என்று அவரை அழைத்து பேசி அனுப்பினோம்.உடனே, தினாதான் டும் டும் டும் படத்தின் மியூசிக் டைரக்டர் என்று தவறாக பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. இதுதான் நடந்தது.

மணி ரத்னம் பாதிப்பு படத்துல நிறைய இடங்கள்ல இருக்கு இல்லையா?

இப்படி ஒரு பேச்சு எழுந்துள்ளதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். மணி சார்என்னோட குருநாதர். நிச்சயமா அவரோட பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதில் ஒன்றும் தவறில்லையே?.மேலும், ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்கிரிப்ட் செய்தோம். எனவே அவரோட சாயல் வந்திருக்கலாம்.

ரோஜா, பம்பாய் போல நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் செய்வீர்களா?

இல்லை. என்னோட படங்கள் உணர்வுகளை மையமாக வைத்துத்தான் இருக்கும். வர்த்தகரீதியான படமாகமட்டுமல்லாமல், கலைப் படமாகவும் அது இருக்கும். எளிமையான கருத்துக்களை மக்கள் மத்தியில் வைக்கவேண்டும். என்னோட படங்கள், கருத்துக்கள், உணர்வுகள் அனைத்தும் எளிமையாக சொல்லப்படும்.

ஒருவேளை தேவைப்பட்டால், ரோஜா, பம்பாய் போன்ற படங்களையும் செய்வேன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil