For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சந்திப்போமா?

  By Staff
  |

  கிராபிக்ஸ் படங்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க?

  கிராபிக்ஸை படங்கள்ல பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவற்றை கிரியேட்டிவாக பயன்படுத்தவேண்டும். தவறாக அதை யூஸ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  உதயா பத்தி சொல்லுங்களேன்?

  கொஞ்சம் சிரிங்களேன் மாதவன்..
  இது விஜய், சிம்ரன் ஜோடியா நடிக்கும் படம். இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை நடராஜன் சார் தயாரிக்கிறார்.உண்மையிலே இதுதான் என்னோட முதல் படம். நடராஜன் சார் பத்தி சில வார்த்தைகளை நான் சொல்லவேண்டும். எந்தவித குறுக்கீடும் இல்லாமல், சுதந்திரமாக என்னை படம் பண்ண அனுமதித்திருக்கிறார் நடராஜன்சார். அதற்காக அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

  என்னைப் பொறுத்தவரை நடராஜன் சாரை, மணி சாருக்கு சமமாக பார்க்கிறேன். முழுமையான சுதந்திரம்கொடுத்து படம் செய்ய ஊக்குவித்திருக்கிறார் அவர்.

  உதயா படம் முழுக்க, முழுக்க என்னோட சாயல்லதான் இருக்கும். விஜய் நடிப்பதால் கதையில் மாற்றம் ஏதும்செய்யவில்லை. ஒரு பாடலில், விஜய் டான்ஸ் ஆடாமல், அமைதியாக, பூக்களுக்கு மத்தியில் உட்கார்ந்தேபாடுவார். ரொம்ப அருமையான பாடல் அது. என்னோட டும் டும் டும் படத்துக்கு முற்றிலும் மாறுபட்ட படம்இது. உதயா, என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கொடுப்பதாக அமையும்.

  உங்களுக்கு என்று ஏதாவது கனவு இருக்கிறதா?

  அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சிந்தித்து, நிறைய யோசித்து, எதிர்பார்த்து பிறகு அது நடக்காமல் போய்விட்டால் ஏமாறுவதில் எனக்கு உடன்பாடில்லை. வரும், நிச்சயமாக வரும். வரும்போது அதை எதிர்கொண்டுசாதிக்க வேண்டும். இதுதான் நான்.

  Basically, நான் ஒரு சோம்பேறி. ஆனால், கொடுத்த நேரத்தில், அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும்திறமை உண்டு. எனக்கு சவால்கள்தான் பிடிக்கும். அவற்றை சந்தித்து சாதிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சவால்களை சந்திப்போம். மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார். இதில்தான் எனக்கு அதிக நம்பிக்கை.

  புது டைரக்டர்கள் முதல் படத்தோட காணாமல் போய் விடுகிறார்கள். ஏன் அப்படி?

  அதுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். படம் வர்த்தகரீதியாக பெரிய அளவில் ஓடாமல் போயிருக்கலாம்.

  பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள், தங்களது முதல் படத்திலேயே எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள். அதனால் அடுத்த படத்தில் தடுமாறுகிறார்கள்.

  சிலருக்கு முதல் படம் கொடுக்கும் வெற்றி, போதையைத் தந்து விடுகிறது. அதிலேயே மிதப்பதால், அடுத்தபடத்தில் வெற்றி கைநழுவிப் போய் விடுகிறது என்று நினைக்கிறேன்.

  ஒரு படம் பெரும் வெற்றி பெற்று விட்டால் பயம்தான் வருகிறது. அடுத்த படத்தில் அதை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற அச்சம் வந்து விடுகிறது. இதுதான் உண்மை.

  தமிழ் சினிமா எப்படி இருக்கு பெருமாள்?

  தமிழ் சினிமாவோட நிறை, குறைகளை அலசுற அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. ஆனால் தமிழ் சினிமாவும்,அதன் ரசிகர்களும் ரொம்பவும் பிளக்ஸிபிள் ஆனவர்கள். வளைந்து கொடுக்கக் கூடியவர்கள்.

  நல்ல விஷயத்தைக் கொடுத்தால் அதை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். எனவே, கிரியேட்டர்கள், ஒரேமாதிரியான விஷயத்தையே சொல்லிக் கொண்டிருக்காமல், வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

  ரசிகர்களை படைப்பாளிகள் அணுகும் முறையில்தான் அந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. அதே போல,ரசிகர்களும் திரைப்படங்களை அணுகும் விதத்தில் மாற்றம் வேண்டும். நல்ல படங்களை அதிகம் பார்த்துஊக்குவிக்க வேண்டும்.

  முந்தைய ரசிகர்களிடம் நல்ல விஷயங்களை ரசிக்கும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருந்தது.படைப்பாளிகளிடமும் அது இருந்தது. ஆனால் இப்போது அது மிஸ்ஸிங். அது மீண்டும் வர வேண்டும்.

  அழகம் பெருமாளின் ஆசைதான் நமது விருப்பமும். படைப்பாளிகளும், ரசிகர்களும் நல்ல விஷயங்களைகாதலிக்கத் தொடங்கினால், அது தமிழ் சினிமாவுக்குத்தான் நல்லது.

  நீண்ட நாள் நண்பரிடம் ரிலாக்ஸ்டாக பேசிய திருப்தியுடன் வீடடுக்கு நடையைக் கட்டினோம்.


  உதயா படப்பிடிப்பில் டைரக்டர் அழகம் பெருமாள்

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X