For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுந்தர்.சி பாடிய இரண்டு பாடல்கள்... எந்த படம், என்ன பாட்டு ? பிரத்தியேக பேட்டி

  |

  சென்னை: சினிமா என்பது ஓட்டப்பந்தயம் மாதிரி.இன்னும் சொல்ல போனால் ரயில் பயணம் மாதிரி. தற்போது ரஜினியுடன் நட்பில் பெரிதாக இல்லை என்றும், படம் முடிந்தவுடன் நட்பும் முடிந்து விடும்,ஷூட்டிங் வந்தால் தான் ரீஸ்டார்ட் ஆகும் என்று நடிகரும், இயக்குநருமாகிய சுந்தர்.சி. தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறுகையில், இளையராஜாவை விட எனக்கு இளம் இசையமைப்பாளர்கள் தான் எனக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்றார். இளையராஜா இசைக்கு நான் ரசிகன் மட்டுமே இப்போதைக்கு என்று தெரிவித்து உள்ளார் .

  கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே?

  அது மட்டும் அல்லாமல் மக்கள் தொடர்ந்து தியேட்டருக்கு வருவது சினிமாத்துறையை வாழ வைக்கின்றனர் என்று பெருமிதத்துடன் தெரிவித்து நமக்காக ஒரு ஸ்பெஷல் பேட்டி கொடுத்து உள்ளார் .

  முதல்விதை

  முதல்விதை

  கேள்வி: பட்டாம்பூச்சி திரைப்படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?

  பதில்: எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கக்கூடிய முதல் சைக்கோ திரில்லர் படம் பட்டாம்பூச்சி. தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை சைக்கோ திரில்லர் படங்கள் அவ்வப்போது தான் வெளிவருகிறது. இதுவே ஒரு காரணம், இப்படத்தை நாங்கள் தயாரிப்பதற்கு. மேலும் இயக்குநர் பத்ரியின் கதை தான் இப்படத்தின் மையக்கரு மற்றும் முதல் விதையும் கூட. அதாவது ஒரு சிறிய புள்ளியில் தொடங்கும் கதை, வேறு எங்கும் செல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை.

  கேள்வி: பட்டாம்பூச்சி திரைப்படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?

  பதில்: எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கக்கூடிய முதல் சைக்கோ திரில்லர் படம் பட்டாம்பூச்சி. தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை சைக்கோ திரில்லர் படங்கள் அவ்வப்போது தான் வெளிவருகிறது. இதுவே ஒரு காரணம், இப்படத்தை நாங்கள் தயாரிப்பதற்கு. மேலும் இயக்குநர் பத்ரியின் கதை தான் இப்படத்தின் மையக்கரு மற்றும் முதல் விதையும் கூட. அதாவது ஒரு சிறிய புள்ளியில் தொடங்கும் கதை, வேறு எங்கும் செல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை.

  தாழ்வு மனப்பான்மை

  தாழ்வு மனப்பான்மை

  கேள்வி: உங்களுடைய கதாபாத்திரம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: நான் ஏற்கனவே போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். போலீஸ் என்றாலே கம்பீரமான, தவறை தட்டிக்கேட்கின்ற கதாபாத்திரமாக அமையும். ஆனால் இப்படத்தில் வரும் போலீஸ்காரர் குழப்பமான மனரீதியில், அதாவது தாழ்வு மனப்பான்மை மிக்கவர். சுருக்கமாக சொல்லப்போனால் போலீஸ் துறையில் ஆர்வமில்லாதவர். போலீஸ் துறையில் டெஸ்க் ஜாப் விரும்பக்கூடியவர். ஒரு சாதாரண கேசில், இரண்டு கேள்வி கேட்டு, அதன் பதிலை ரிப்போர்ட் ஆக தயார் செய்து கொடுத்தால் போலீஸ் டெஸ்க் ஜாப் உறுதியாகி விடும் என்ற நிலைமை அவருக்கு. இந்த சூழ்நிலையில் தான் அந்த சாதாரண வழக்கை கையில் எடுக்க, அது பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது. வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்டு இருந்ததால் நான் நடித்தேன் என்றார்.

  எது டிரெண்டிங்

  எது டிரெண்டிங்

  கேள்வி: சமீப காலமாக லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றோர் இரத்தம் மற்றும் வன்முறையுடன் படம் எடுக்கிறார்கள்? நீங்களும் அதே முறையை பின்பற்றுகிறீர்களா?

  பதில்: மற்றவர்களை பற்றி தெரியாது. இப்படத்தில் Adult Content கிடையாது. வன்முறை, ரத்தம் இருக்கும். என்னை பொறுத்தவரை நான் மற்ற எதையும் பார்ப்பதில்லை. கதை நன்றாக இருக்கிறதா? ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை மட்டுமே பார்ப்பேன். இதுமாதிரியான கதைகள் டிரெண்டிங்கில் இல்லையென்றால், உடனே தயாரிப்பேன். உதாரணமாக அரண்மனை படம் பண்ணும்போது, அப்பொழுது அது மாதிரியான கதைகள் இல்லை. 7 வருடங்களுக்கு முன்னர் தான் சந்திரமுகி வெளிவந்தது. பின்னர் காஞ்சனா போன்ற படங்களும் வந்தது. பட்டாம்பூச்சி முழுமையான சைக்கோ திரில்லர் படம். காதல், காமெடி எதுவும் கிடையாது. முதல் சீனிலிருந்து கடைசி வரைக்கும் கதையானது எக்ஸ்பிரஸ் மாதிரி செல்லும் என்றார்.

  என்னுடைய இயக்கத்தில் அடுத்தபடம் Feel Good Movie ஆக தான் இருக்கும். நான் கொரோனா காலக்கட்டத்தில் நான் அதிகமாக Feel Good Movie படங்களை தேடி தேடி பார்த்தேன். சமீபத்தில் பட்டாம்பூச்சி போன்று படங்கள் வரவில்லை.

  நான் குழப்புவேன்

  நான் குழப்புவேன்

  கேள்வி: நீங்கள் ஏன் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றவில்லை?

  பதில்: நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். அவர் ஸ்டைல் மற்றும் சிந்தனை வேறு , அதனால் என்னவோ, என்னால் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் இயக்கிய படங்களில் பெரும்பாலும் வளரும் இசையமைப்பாளர்களை கொண்டு இசையமைத்துள்ளேன். குறிப்பாக சிற்பி, வித்யாசாகர், கார்த்திக்ராஜா, யுவன்சங்கர், ஹிப்பாப், இமான் போன்றோர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஏன் இவர்களுடன் பணிபுரிகிறேன் என்றால், அவர்கள் இசையமைக்கும்போது நானும் சென்று குழப்புவேன். ஆனால் இளையராஜாவிடம் இது போன்று என்னால் செய்ய முடியாது. காலம் வரும்போது கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார் சுந்தர் சி.

  முதல் சீன் பிடிக்கும்

  முதல் சீன் பிடிக்கும்

  கேள்வி: பட்டாம்பூச்சி படத்தில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்ன?

  பதில்: நடிகர் ஜெய் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த கதாபாத்திரமானது புத்திசாலியா, முட்டாளா, சைக்கோவா என்று கண்டுபிடிக்க முடியாது. மேலும் இப்படத்தில் வரும் முதல் சீன் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் தூக்குத்தண்டனை கைதியின் கடைசி ஆசை பொதுவாக உறவினர்களை பார்ப்பது, நல்ல சாப்பாடு சாப்பிடுவது போன்றவையாகும். ஆனால் இப்படத்தில் தூக்குத்தண்டனை கைதியின் கடைசி ஆசை, பத்திரிகை நிருபரை சந்திக்க வேண்டும் என்பார். அங்கிருந்து தான் கதை ஆரம்பமாகும். பத்திரிகையாளரை எதற்காக சந்திக்க வேண்டும் என்பது தான் சுவாரஸ்யம் . இன்னும் சொல்லப்போனால் படம் முடியும் போது ரசிகர்கள் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் .

  சினிமாவின் வெற்றி

  சினிமாவின் வெற்றி

  கேள்வி: உங்களுக்கு பிடித்த வசனம் என்ன?

  பதில்: இயக்குனர் பத்ரி வசனம் எழுதியிருக்கிறார். படத்துல என்னுடைய கதாபாத்திரத்திற்கு வசனம் குறைவு. படத்தின் டிரெய்லரில் வரக்கூடிய வசனம் ரொம்ப பிடிக்கும். மேலும் யார் நல்லவன், கெட்டவன் என்ற வசனமும் ரொம்ப பிடிக்கும் என்றார் சுந்தர் .சி

  கேள்வி: விக்ரம் பட வெற்றி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  பதில்: எந்த தமிழ் படம் ஓடினாலும் நான் சந்தோஷப்படுவேன். ஏனென்றால் ஒவ்வொரு படமும் நன்றாக ஓடும்போது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். கொரோனா காலக்கட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. ஒரு சில பேர் கூறுகையில், ஓடிடி வந்து விட்டது, இனிமேல் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். வீட்டிலிருந்து படம் பார்த்து பழகிவிட்டார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து தியேட்டருக்கு வருவது சினிமாத்துறையை வாழ வைக்கின்றனர். விக்ரம் படம் வெற்றி கமல், லோகேஷ் மற்றும் சினிமாவின் வெற்றியாகும் என்றார்.

  பிளான் செய்வதில்லை

  பிளான் செய்வதில்லை

  கேள்வி: நடிகர் கமலஹாசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவீர்களா?

  பதில்: அன்பே சிவம் படத்தில் நானும், கமல்ஹாசனும் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் பிளான் செய்து வாழ்வது கிடையாது. வாழ்க்கை எவ்வாறு செல்கிறதோ அதில் நான் பயணிக்கிறேன். அதனால் தான் என்னவோ, இத்தனை வருடம் சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இப்பொழுது இந்த நிமிஷம் நான் நினைப்பது என்னவென்றால் "பட்டாம் பூச்சி" ரசிகர்களை சென்றடைய வேண்டும். படத்தை வாங்குபவர்கள் சந்தோஷமடைய வேண்டும். அடுத்து என்னுடைய அடுத்த படமான காபி வித் காதல் மட்டுமே பற்றியே யோசிக்கிறேன் இப்போதைக்கு என்றார்.

  ரஜினியுடன் நான் தொடர்பில் இல்லை

  ரஜினியுடன் நான் தொடர்பில் இல்லை

  கேள்வி: ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜெயில் குத்து என்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

  பதில்: ஜெயில்குத்து என்பது ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு எந்தவிதமான சம்பந்தம் இல்லை. தற்போது நான் ரஜினியுடன் தொடர்பில்லை. சினிமா என்பது ஓட்டப்பந்தயம் மாதிரி. படம் முடிந்தவுடன் நட்பு தொடருவது சிரமம். புதுப்படம் ஆரம்பிக்கும்பொழுது புது நண்பர்கள் உருவாகுவார்கள் அவ்வளவு தான்.

  வருஷம் 16 திரைப்படம்

  வருஷம் 16 திரைப்படம்

  கேள்வி: நீங்கள் எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டீர்கள்?

  பதில்: நான் கோயம்புத்தூரில் இருக்கும்பொழுது, வருஷம் 16 திரைப்படத்தை நான் நண்பர்களுடன் பார்க்க சென்றேன். அப்படத்தில் வரும் கதாநாயகியை பார்த்து, இந்த மாதிரி பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று குஷ்புவை பார்த்து கூறினேன். அதே மாதிரி என் வாழ்க்கையில் நடந்து விட்டது. அப்பொழுது நான் சினிமாத்துறைக்கு வரவில்லை .

  கேள்வி: பட்டாம்பூச்சியில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சியின்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டதா?

  பதில்:பட்டாம்பூச்சி படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகரை சில காலங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினேன். இப்பொழுது மிகப்பெரிய இடத்துக்கு போய் விட்டார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சில ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொஞ்சாமாது மென்மை இருக்கும். ஆனால் ராஜசேகரிடம் ஸ்டண்ட் ரஃப் ஆக இருக்கும். பட்டாம்பூச்சி படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது நிறைய காயங்கள் ஏற்பட்டது .

  இரண்டு பாட்டு பாடின சுந்தர்.சி

  இரண்டு பாட்டு பாடின சுந்தர்.சி

  கேள்வி: சினிமாத்துறையில் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார்?

  பதில்: நடிகர் சத்யராஜ், இயக்குனர் பி.வாசு., இரவிக்குமார் ஆகியோரை பார்த்து சினிமாத்துறை சார்ந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அதன் வெளிப்பாடே வீட்ல விசேஷம் பட விழாவில் நான் பேசிய வார்த்தைகள். நான் ஏற்கனவே இரண்டு பாட்டு பாடியிருக்கிறேன். அது எந்த பாட்டு எந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். இனிமேல் பாட வேண்டாம் என்பது இப்போதைய மனநிலை . சினிமாவில் பிளான் செய்து நான் எதுவும் செய்வதில்லை. சினிமா என்பது போட்டி நிறைந்த உலகம். master of all ஆக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதில்லை என்றார் சுந்தர் சி . மேலும் அவர் கூறுகையில், சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

  இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/BnkhgivjAyQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகரும், இயக்குநருமாகிய சுந்தர்.சி. இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  Do you know the Movie name and songs sung by Sundar C ? Reveals in Exclusive interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X