Kovai Sarala: முதிர் கன்னியாகவே வாழும் கோவை சரளா.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர் நடிகை கோவை சரளா. 1979 ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், இன்று வரை நீடித்து நிலைத்திருக்கிறார். சினிமாவில் பல சாதனைகள் செய்துள்ள நடிகை கோவை சரளா 63 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை இருக்கிறார். அதற்கான காரணத்தை கோவை சரளா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் நடிகைகளில் மிகவும் முக்கியமாவர் நடிகை கோவை சரளா. கவுண்டமணி, செந்தில், வடிவேலுடன் இணைந்து இவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை என்று சொல்லாம். தற்போது, கோவை சரளா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து இவர் செய்யும் நகைச்சுவை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. நகைச்சுவை மட்டுமில்லாமல் பிரபு சாலமன் இயக்கத்தில், செம்பி படத்தில், செம்பியின் பாட்டியாக சீரியஸான கதாபாத்திரமாக அவதாரத்தில் நடித்திருந்தார். செம்பி படத்தின் அஸ்திவாரமாக இருந்தது கோவை சரளாவின் நடிப்பு தான்.

Kovai sarala interview
Photo Credit:

நடிகை கோவை சரளா: இந்நிலையில், touring talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர்,திருமணம் செய்து கொள்ளாதது பற்றி மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று ஒரு நாளும் நான் வருத்தப்பட்டது இல்லை. கல்யாணம் செய்தவர்களை பார்த்து நான் சிரித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது எப்படி இருந்தாலும் மனிதன் தனியாக வாழ்ந்து தான் ஆகவேண்டும். கல்யாணம் செய்து கொண்டால் மட்டும் கடைசி வரை கணவரின் கைபிடித்துக்கொண்ட இருக்க முடியுமா. ஒரு இடத்தில் அவர் விட்டு சென்றுவிடுவார். ஓடி போகிறாரோ இல்லை, மேல போய்விடுவாரோ யாருக்கு தெரியும்.

இதுதான் காரணம்: இதனால், திருமணம் செய்யவில்லையே என்று நான் வருத்தப்பட்டதே இல்லை. சிறுவயதில் இருந்தே என்னை அறியாமல் ஆன்மிகம் என்னுள் இருந்து இருக்கிறது. இதனால், நான் ஏதாவது சாதிக்க வேண்டும், நான் தெருவில் நடந்து சென்றால் மற்றவர்கள் என்னை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தான் என் மனதிற்குள் இருந்தது. அந்த எண்ணம் இருந்ததால், மற்றம் எண்ணம் எனக்கு வரவே இல்லை. என் பார்வை முழுவதும் குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல சினிமாவிலேயே தான் இருந்தது என பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X