Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சரக்கு அடிச்சிட்டு தெளிவா பேசுங்க.. மிஷ்கின் சொல்லும் அட்வைஸ் யாருக்கு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித் படத்திற்கு புரோமோஷன் தேவையில்லை என்றும், அவரது உழைப்பின் பயனாகவே ரசிகர்கள் உருவாகியுள்ளனர் என்று குருதிஆட்டம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்.
வறுமையான சூழ்நிலையில் வளர்ந்த நான், கவிஞர் வைரமுத்து கூறுவதுபோல், இளமையில் உற்ற வறுமை தான் எனது செல்வம் என்றும், அது தான் எனக்குள் பக்குவத்தை ஏற்படுத்தியது என்றும், பிடித்தவர்களிடம் விவாதம் செய்யாமல், விட்டுவிடுவது சிறப்பு என்று கூறியுள்ளார்.
இது குறித்து நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
சோனி
லைவில்
வெளியானது
விக்டிம்
ஆந்தாலஜி..
வெங்கட்பிரபு,
பா
ரஞ்சித்,
ராஜேஷ்,
சிம்புதேவன்
மாயாஜாலம்!

சிவகார்த்திகேயனுக்கு தம்பி
கேள்வி: உங்களை எல்லோரும் சிவகார்த்திகேயன் தம்பி என்ற அழைக்க காரணம் என்ன?
பதில்: Itentity என்ற குறும்படம் மூலம், நடிகர் சிவகார்த்திகேயனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. விஜிபி முன்பாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் நான் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய குரலும், சிவகார்த்திகேயனும் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். அவரே என்னிடம் கூறுகையில், உங்கள் குரலில் சிறு மாற்றம் செய்தால் என்னுடைய குரல் வந்து விடும் என்பார். உங்களை மாதிரி நானும் மிமிக்ரி செய்வேன் என்று கூறினார். என்னை சினிமாத்துறையில் பல பேர் சிவகார்த்திகேயனின் தம்பி என்றும் அழைப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

ராசி இல்லாத எண்
கேள்வி: நீங்கள் இயக்கிய 8 தோட்டாக்கள் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: 8 தோட்டாக்கள் படத்தின் பெயரை ரிஜிஸ்டர் செய்யும்போது, 8 என்ற நம்பரானது ராசியில்லாத நம்பர் என்ற விபரம் எனக்கு தெரியாது. படம் வெளியிடுவதற்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. இருந்தபோதிலும் சென்டிமென்ட் பார்க்காமல் படத்தை வெளியிட்டோம். படம் வெற்றியடைந்தது. இப்படத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அழுத்தமான நடிப்பை நடித்திருந்தார். அன்று முதல் இன்று வரை என் மீதுள்ள அக்கறையின் காரணமாக எனக்கு போன் செய்து நலம் விசாரிப்பார். நான் குருதி ஆட்டம் படத்தின் டிரெய்லர், டீசர் போன்றவற்றை அவருக்கு அனுப்பினேன். அதை பார்த்த அவர், வித்தியாசமாகவும், நன்றாகவும் உள்ளது என்றார்.

பிடிச்சவங்க தான் முக்கியம்
கேள்வி: குருதி ஆட்டம் படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் எது?
பதில்: நமக்கு பிடிச்சவங்க தப்பு பண்ணினா, தப்பு முக்கியமா? பிடிச்சவங்க முக்கியமா? என்கின்ற வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்னை பொறுத்தவரை வாழ்க்கையில் பிடிச்சவங்க தான் முக்கியம். தவறு முக்கியமில்லை. பிடித்தவர்களுக்காக விட்டு கொடுப்பதில் தவறில்லை. பிடித்தவர்களுக்காக விவாதம் செய்யாமல் விட்டு விடுவது மிகவும் சிறப்பு என்றார்.

எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு
கேள்வி: உங்கள் FOA தோழர்கள் குறித்து நீங்கள் கூற விரும்புவது...
பதில்: விருகம்பாக்கம் கருமாரி தியேட்டர் அருகில் நான், லோகேஷ் கனகராஜ், அஸ்வின், அஸ்வத், கார்த்திக் யோகி, நித்திலன் ஆகியோர் அனைவரும் தங்கியிருந்தோம். அப்பொழுது அந்த ரூமை FOA என்று அழைப்போம். எங்கள் அனைவரையும் இணைத்தது நாளை இயக்குநர்கள் என்ற குறும்படம் தான். எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு எத்தனை பேர் கிடைக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக பயணித்து வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு படத்தை சிபாரிசு செய்வார்கள். அவ்வாறு உதவி செய்யும்பொழுது, அந்த படமானது நமது கதைக்கு பயன்படும் என்றார்.

ரங்கநாதன் தெருவில் வாங்கிய டிரஸ்
கேள்வி: ப்ரியா பவானி சங்கர் கதாபாத்திரம் குறித்து ....
பதில்: நான் படிக்கும்பொழுது இருந்த அரசு பள்ளி ஆசிரியர்களை மனதில் கொண்டு தான், நடிகை ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் அமைத்தேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய காஸ்ட்யூம் அனைத்தும் ரங்கநாதன் தெருவில் ரூ.100 முதல் 200க்கு வாங்கியவை தான். முதலில் அவர் கூறும்போது, ஏன் இப்படி என்றார். 5 நாட்கள் கழித்து இதுவும் வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஒதுக்கிய 15 நிமிடங்கள்
கேள்வி: நடிகை ராதிகா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: அனுபவ வாய்ந்த மூத்த நடிகையுமான ராதிகாவிடம் கதை சொல்ல சென்றபோது, அவர் படப்பிடிப்பில் இருந்தார். அப்பொழுது 15 நிமிடங்கள் மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டது. கதை கேட்ட 2 நிமிடங்களில் நான் இந்த கதாபாத்திரத்தை செய்து தருகிறேன் என்றார். படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். 5 நாட்கள் அவர் எதுவும் கூறவில்லை. நான் அவரிடம் கேட்டேன், எப்படியிருக்கிறது என்றேன். அவர் கூறுகையில், சமையல் எப்படியிருக்கிறது என்பதை சமைக்கிறவர்கள் கரண்டி பிடிப்பதை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்றார்.

கட்டை விரலில் காயம்
கேள்வி: படப்பிடிப்பின்போது நடிகை அதர்வாவிற்கு காயம் ஏற்பட்டது உண்மையா?
பதில்: நடிகர் அதர்வா, நடிகர் அஜித்தின் ரசிகர். அதனால் படங்களில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் கதையை தொந்தரவு செய்யாமல் வைத்துள்ளேன். படத்திற்கு வரும் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைய செய்யக்கூடாது என்பதற்காக. மேலும் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளின்போது நடிகை அதர்வாவிற்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டு பெயர்ந்து விட்டது. தையல்போட்டு கொண்டு வந்து படிப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதர்வாவிற்கு மட்டுமல்லாமல், வட்சன் மற்றும் நடிகை ராதிகாவிற்கும் காயம் ஏற்பட்டது. இதையாரும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு சிறந்த ஒத்துழைப்பு அளித்தனர். சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஸ்டார் படம் என்பதால் படம் ஓடுகிறது என்பார்கள். நடிகர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. நடிகர் அஜித், விஜய் ஆகியோர் ஒரே நாளில் உயர்ந்து விடவில்லை. 1990 முதல் உழைத்து வருகிறார்கள். உழைப்பின் பயனாகவே ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுக்கு புரோமோஷன் என்பது தேவையில்லாத ஒன்று என்றார்.

ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு பேசுங்க
கேள்வி: உங்கள் குருநாதர் இயக்குநர் மிஷ்கின் குறித்து நீங்கள் கூறவிரும்புவது?
பதில்: நான் இயக்குநர் மிஷ்கினிடம் அசிஸ்டெண்ட் இயக்குநராக பணிபுரிந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக இயக்குநர் மிஷ்கின் உதவி இயக்குநர்களிடம் கூறும்போது,ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்கள்; மனதில் பட்டதை தெளிவாக பேசுங்கள் என்பார். அவருடைய குழுவில் நான் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேன். மேலும் இயக்குநர் மிஷ்கினிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். குறிப்பாக சொல்லப்போனால் சண்டைக்காட்சிகளில் கூட எமோஷனல் இருக்க வேண்டும் என்பார். அது போல தான் இந்த குருதி ஆட்டம் ஆக்ஷன் படத்திலும் எமோஷனல் கண்டிப்பாக இருக்கும். மேலும் எனது படங்களில் என்னையறியாமலேயே இயக்குநர் மிஷ்கின் பயன்படுத்தும் இசையை பயன்படுத்தி விட்டேன் என்றார்.

அனைவர்க்கும் பிடிக்கும்
கேள்வி: படத்தின் பாடல்கள் குறித்து...
பதில்: இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. ரங்கா ராட்டினம் உள்பட நான்கு பாடல்கள் உள்ளது. என்னை பொறுத்தவரை ஒரு Hope பாடல் வைத்துள்ளேன். கொரோனோ காலக்கட்டத்திற்கு பிறகு இப்பாடலானது அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நிஜ கபடி வீரர்கள்
கேள்வி: கபடிக்கும், குருதி ஆட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
பதில்: மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் தான் கபடி ஆட்டம் சிறப்பாக ஆடப்படுகிறது. மேலும் குருதிஆட்டம் படத்தின் கதையானது கபடியை மையமாக வைத்து தான் செல்லும். இதற்காக நாங்கள் மதுரையில் கபடி Tournament நடத்தி, படப்பிடிப்பு நடத்தினோம். நடிகர் அதார்வா அணியில் உள்ளவர்கள் மட்டுமே நடிகர்கள். மற்றவர்கள் எல்லாரும் ஒரிஜினலான கபடிவீரர்கள். இன்னும் சொல்லப்போனால் நடுவராக பணிபுரிந்தவர் மாநில அளவிலான நடுவர் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/EB4D1YTCe8M இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். குருதிஆட்டம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி உள்ளார்.