twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்!

    நடிகையர் திலகம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    சாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது..துல்கரின் சுவாரஸ்யமான பதில்!-வீடியோ

    சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை, நடிகர் ஜெமினி கணேசனால் தான் பாழானது என சொல்ல முடியாது என நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் 'நடிகையர் திலகம்'. தெலுங்கில் இந்தப் படம் 'மகாநடி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழில் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் அந்தளவிற்கு சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனாக இருவரும் படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

    Dulquer Salmaan interview to oneindia

    இந்நிலையில், நடிகையர் திலகம் படத்தில் நடித்த தனது அனுபவங்களை ஒன் இந்தியாவிற்காக அளித்த சிறப்புப் பேட்டியில் விளக்கமாகப் பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

    காதல் மன்னனாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

    அனைத்துமே ஸ்கிரிப்டில் இருந்தது. அதை அப்படியே என் நடிப்பில் கொண்டு வந்தேன். அதோடு ஜெமினி சாரின் குடும்பத்தாரும் எனக்கு பெரிதும் உதவினார்கள். ஜெமினி சாரின் மேனரிசம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். எப்போதும் அவர் துறுதுறுவென எதையாவது செய்து கொண்டே இருப்பார் எனக் கூறினார்கள். இது எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    சாவித்திரியின் வாழ்க்கை ஜெமினியால் பாதிக்கப்பட்டதா?

    அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு பிரச்சினையையும், அவரவர் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதில் தான் இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது, சாவித்திரியம்மா அவருடைய பிரச்சினையை அவருடைய பாணியில் எதிர்கொண்டிருக்கிறார். எனவே, சாவித்திரியம்மாவின் அனைத்துப் பிரச்சினைகளும் ஜெமினியால் தான் ஏற்பட்டது என எனக்குத் தோன்றவில்லை.

    Dulquer Salmaan interview to oneindia

    நடிகையர் திலகம் பட அனுபவம்

    ஆறு வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற படங்கள் கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. அதுவும் இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் வருவது ரொம்பவுமே அரிது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடந்தது. இத்தனை நாட்கள் அனைத்து நடிகர், நடிகையரும் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்ததுமே அரிது தான்.

    அப்பா மம்முட்டி பற்றி..

    நானும் அப்பாவும் ஒரே துறையில் வேலை பார்ப்பது என்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். இருவருமே கடினமாக உழைக்கிறோம்.

    English summary
    In an interview to Oneindia, actor Dulquer Salmaan shared his working experience in Nadigaiyar thilagam movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X