ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோரும் செமயா கலாய்ப்பாங்க ... சார்பட்டா பரம்பரை நாயகி துஷாரா விஜயன் !

சென்னை : பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

Recommended Video

Shooting spot ல ரொம்ப கலாய்ப்பாங்க | Actress Dushara Vijayan chat | Filmibeat Tamil

இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் இப்படத்தின் ஹீரோயின் துஷாரா விஜயன்.

சார்பட்டா பரம்பரை பற்றிய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை துஷாரா விஜயன் சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார்.

புது வரவாக

புது வரவாக

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வருகை தந்துள்ள துஷாரா விஜயன் நடித்த சில திரைப்படங்களிலேயே இப்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக மாறியுள்ளார். போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு இப்போது சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

இயக்குனர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்த சார்பட்டா பரம்பரை பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு இப்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. நேற்று வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. வடசென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டையும் குத்துச்சண்டை குழுக்களையும் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

கண்முன்னே காட்டியது

கண்முன்னே காட்டியது

எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஆகாமல் உண்மையான குத்துச் சண்டையை கண்முன்னே காட்டியது போல இயக்குனர் பா ரஞ்சித் படத்தை கொடுத்துள்ளார். இதில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரைக்கு பிறகு இவருக்கு தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகி இருக்க இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றிய கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார்.

ஆர்யா

ஆர்யா

திண்டுக்கல்லை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடும்பத்தில் பிறந்த துஷாரா விஜயன். இப்போது சார்பட்டா பரம்பரை மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆகியுள்ளார். படத்தில் இவருடைய பெயர் மாரியம்மா . தன்னுடைய பாட்டியின் பெயரும் மாரியம்மா. படப்பிடிப்பில் ஆர்யா, கலையரசன், ஜான் விஜய் என அனைவரும் என்னை செமயாக கலாய்ப்பார்கள் நான் அதற்கெல்லாம் ரியாக்ட் பண்ண மாட்டேன்.பட் ஜாலியாக இருக்கும். மேலும் இந்த படத்தில் அனுப்பமாவின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. படத்தில் எனக்கு மாமியாராக இருந்தாலும் அம்மாவைப் போல மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவேன்.

கூட்டி செல்லமாட்டோம்

கூட்டி செல்லமாட்டோம்

நடிகர்கள் பாக்சிங் பயிற்சி எடுக்கும் போது நான் அருகில் இருந்து பார்த்து உள்ளேன். இதுவரை இதுபோன்ற விஷயங்களை நேரில் பார்த்தது இல்லை. நிஜமாகவே சார்பட்டா பரம்பரை குழுக்களில் இருந்த குத்துச்சண்டை வீரர்கள் நேரில் வந்து பயிற்சி கொடுத்தார்கள். அவர்களிடம் குத்துச்சண்டை போட்டியின் போது உங்களது மனைவி மந்தைகளை எல்லாம் கூட்டிச் செல்வார்களா என்று கேட்டேன். கூட்டி செல்லமாட்டோம் என தெரிவித்திருந்தார்காள் . ஆனால் படத்தில் இயக்குனர் ரஞ்சித் குத்துச்சண்டை போட்டியை காண அம்மா மனைவி என அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் காட்சி வைத்திருந்தார்.

என் அம்மா தான் ரோல் மாடல்

என் அம்மா தான் ரோல் மாடல்

இந்த படத்திற்கு பிறகு நடிப்பு என்று வந்துவிட்டால் சாக்கடையில் கூட இறங்கி நடித்து விடுவேன் அந்த அளவுக்கு நடிப்பில் மூழ்கிவிட்டேன். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நிறைய சென்னை பாஷையை கற்றுக் கொண்டேன். குறிப்பாக தவடா என்ற வார்த்தை மிகவும் புதிதாக இருந்தது. நான் திண்டுக்கல்லில் பிறந்த வளர்ந்த அங்கு பெரும்பாலும் வாங்க போங்க வார்த்தைகளை நான் அதிகம் பயன்படுத்துவார்கள். அதனால் டப்பிங்கில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. முதல் இரண்டு நாட்கள் எனக்கு தொண்டை வலியே வந்து விட்டது பிறகு படக்குழுவினர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து பேச வைத்தார்கள். படத்திலேயே மிக நாட்கள் டப்பிங் எடுத்துக்கொண்ட ஒரே ஆள் நான்தான். நிஜ வாழ்க்கையில் என்னுடைய அம்மா பிரேமா விஜயன் தான் என்னுடைய ரோல் மாடல். இவ்வாறு பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அந்த பேட்டியில் துஷாரா விஜயன் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X