twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெய்வங்களும் மனுசங்களும் இணைந்து தான் வாழ்கின்றனர்.. கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ்க்ளூசிவ்!

    |

    சென்னை: ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்த ரெளத்திரனாக கர்ணன் படத்தை இயக்கி உள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் பேட்டி வெளியாகி உள்ளது.

    தனுஷ், ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன், நட்டி நட்ராஜ், யோகி பாபு என ஏகப்பட்ட திறமையான நடிகர்களை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ்.

    சாய்பல்லவி நடித்துள்ள படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு... ரசிகர்கள் அப்செட்!சாய்பல்லவி நடித்துள்ள படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு... ரசிகர்கள் அப்செட்!

    திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கும் கர்ணன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விரிவாக பேசியுள்ள பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.

    எங்க ஊரு கதை

    இன்னமும் ஏராளமான கிராமங்களில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் திண்டாடி வரும் நிலை உள்ளது. பொதுவெளியில் மலம் கழிக்க இரவு நேர இருட்டை எதிர்பார்த்து எத்தனையோ அக்கா தங்கைகள் காத்துக் கிடக்கும் அவலம் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. கர்ணன் திரைப்படத்திலும் அப்படியொரு அடிப்படை வசதிக்காக, மக்களின் உரிமைக்காக போராடும் கதை தான். எங்க ஊரு கதை என இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

    கர்ணன் – திரெளபதி

    கர்ணன் – திரெளபதி

    மகாபாரதத்தில் வரும் கர்ணன், திரெளபதி உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பெயர்களை நாயகனுக்கும் நாயகிக்கும் பயன்படுத்திருக்கீங்களே, இதன் மூலம் என்ன குறியீட்டை வெளிக்காட்ட விரும்புகிறீர்? என்கிற கேள்விக்கு சர்வ சாதாரணமாக விடை அளித்த இயக்குநர் மாரி செல்வராஜ், அந்த பெயர்கள் எல்லாம் இன்னமும் எங்கள் ஊரில் அண்ணனுக்கும், அக்காவுக்கும் சொந்தக்காரர்களுக்கும் வைக்கும் பெயர்கள் தான். நீங்க வேணா மொத்த லிஸ்ட்டையும் எடுத்துக் கொண்டு எங்க ஊருக்கு போய் பாருங்க, படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் நிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் என்றார்.

    தெய்வங்கள் குறியீடு ஏன்

    தெய்வங்கள் குறியீடு ஏன்

    சாமானிய மக்களின் வாழ்வில் தெய்வங்கள் ஒரு அங்கமாகவே மாறி இருக்கிறது. தெய்வங்கள் என்கிற பதத்திற்கு பல கோணங்கள் உள்ளன. நான் கர்ணனில் சொல்லி உள்ள தெய்வங்கள், உயிர் நீத்த நல்ல மனசுடைய மக்களைத் தான் கையாண்டு இருக்கிறேன். இன்னமும் பல ஊர்களில் குலசாமிகளாக முன்னோர்களை வழிபடும் பழக்கம் உள்ளது. தெய்வங்களும் மனுசங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து வாழ்ந்து வருகின்றனர். அதைத் தான் கர்ணன் படத்தில் கையாண்டுள்ளேன் என மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

    மதில்மேல் பூனை

    மதில்மேல் பூனை

    பரியேறும் பெருமாள் படத்தில் யார் மனதும் புண்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து மதில்மேல் பூனையாக இருந்த மாரி செல்வராஜ், கர்ணனில் இப்படி இறங்கி அடிக்க காரணம் என்ன? என்கிற கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், கர்ணன் கதைக்கு அப்படியொரு திரைக்கதை தேவை என்பதை உணர்ந்து கொண்டு தான் இப்படி இந்த படத்தை இயக்கி உள்ளேன். படத்தில் நடித்த நடிகர்களும் எனது உலகத்தை புரிந்து கொண்டு நடித்துள்ளனர்.

    தாணுவின் தியாகம்

    தாணுவின் தியாகம்

    50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்கிற உத்தரவுக்கு பின்னர் கலைப்புலி தாணு சார் என்ன சொன்னார்? எனும் கேள்விக்கு, கர்ணன் படம் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட தடைகள் வந்து கொண்டே இருந்தன. கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்டு மீண்டும் படப்பிடிப்பு நடத்த போனால், மழை வாட்டி எடுத்தது. அத்தனை தடைகளிலும் பக்க பலமாக இருந்தார் தாணு சார். அரசின் இந்த அறிவிப்பு வந்த பிறகும் இப்படியொரு படத்தை திரையரங்குகளில் தான் மக்கள் கொண்டாட முடியும் என்பதை அறிந்து கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ரிலீஸ் செய்ய சொன்னார்.

    தனுஷின் நடிப்பு

    தனுஷின் நடிப்பு

    பரியேறும் பெருமாள் படத்தின் கதையே தனுஷுக்காகத் தான் எழுதினேன். கர்ணன் படத்தின் கதையை கேட்ட உடனே அவருக்கு பிடித்துப் போனது. ஒரு பெரிய நடிகர் என்கிற எந்தவொரு இதுவுமின்றி, அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு நடித்தார். வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பில் இருந்தாலும், தொடர்ந்து செல்போன் மூலம் நாங்கள் இருவருமே தொடர்பில் இருந்து கொண்டே தான் இருக்கிறோம். அவர் அருகில் இல்லை என்கிற உணர்வே இல்லை எனக் கூறியுள்ள மாரி செல்வராஜின் முழுப் பேட்டியை கண்டு ரசியுங்கள்!

    English summary
    Director Mari Selvaraj talks a lot about Karnan movie and explains why he add about God metaphors visuals in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X