அஜித்திற்கு வில்லனாக நடிக்க ஆசை...இதை யாரு சொல்லிருக்காங்க பாருங்க

சென்னை : இனி அஜித் நடிக்க போகும் ஏதாவது ஒரு படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக வளர்ந்து வரும் இளம் ரொமான்டிக் ஹீரோ ஒருவர் கூறி உள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

டைரக்டர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானிசங்கர், நாசர், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹாஸ்டல். இந்த படம் 2015ல் மலையாளத்தில் வெளிவந்த Adi Kapyare Kootamani என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்திற்கு போபோ சஷி இசையமைத்துள்ளார்.

இது தான் பட கதையா

இது தான் பட கதையா

இது பாய்ஸ் ஹாஸ்டலை மையமாகக் கொண்ட படம். இன்ஜினியரிங் காலேஜ் ஹாஸ்டலின் ஒரு பகுதி இடிந்ததால் மாணவர்கள் தற்காலிகமாக, நாசர் கட்டுப்பாட்டில் இருக்கும் வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. அங்கு நடக்கும் விஷயங்களை காமெடியாக சொல்லி உள்ள படம் தான் ஹாஸ்டல். இந்த படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாகிறது. இதில் அசோக் செல்வன் ஃபைனல் இயர் ஸ்டூடண்டாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாஸ்டல் படம் பற்றி...

ஹாஸ்டல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ஹீரோ அசோக் செல்வனும், ஹீரோயின் பிரியா பவானிசங்கரும் தமிழ் ஃபிலிமீட் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர். அதில், ஹாஸ்டல் படம் பற்றி கேட்டதற்கு, இது ஜாலியான காமெடி கலந்த படம். தற்போது அனைவரும் ரிலாக்சாக படம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைக்கிறார். அப்படி பட்ட படம் தான் இது என்றார் அசோக் செல்வன்.

அசோக் செல்வனுக்கு 4 ஹீரோயினாக

அசோக் செல்வனுக்கு 4 ஹீரோயினாக

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை படம் பற்றி பிரியாவிடம் கேட்டதற்கு, நான் வெளியூரில் இருந்து தற்போது தான் வந்தேன். அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை. அசோக் எனக்காக பிரத்யேகமாக படத்தை போட்டு காட்டுவார் என கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார் ஜாலியாக. மன்மத லீலை படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்ட போது, ஜாலியாக இருந்தது என்றார் அசோக் செல்வன். அப்போது குறுக்கிட்ட பிரியா, அடுத்த படத்தில் இவருக்கு 4 ஹீரோயின்கள் என்றார்.

 மன்மத லீலை பார்ட் 2 வருமா...

மன்மத லீலை பார்ட் 2 வருமா...


மன்மத லீலை பார்ட் 2 வருமா என அசோக் செல்வனிடம் கேட்டதற்கு, பொதுவாக ஒரு படம் நல்ல அளவிற்கு வரவேற்பை பெற்றால் அதன் இரண்டாம் பாகம் பற்றி அனைவரும் கேட்பது சகஜம் தான். அது போல தான் இதுவும். ஆனால் மன்மத லீலை பார்ட் 2 வருமா, வராதா என்பது பற்றி டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.

பிரியா சொன்ன சிம்பிள் பதில்

பிரியா சொன்ன சிம்பிள் பதில்

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, அவருக்கு வாழ்த்து சொல்லும் அளவிற்கு நாம் பெரிய ஆள் கிடையாது. இருந்தாலும் அவரது ரசிகர்களில் ஒருவராக, அவரது படங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். மற்றவர்களை போல் அவரது ரசிகையாக அவரது அடுத்தபடம் எப்போது வரும் என காத்திருக்கிறேன் என சிம்பிளாக முடித்து விட்டார் பிரியா பவானிசங்கர்.

அஜித்திற்கு வில்லனாக ஆசை

அஜித்திற்கு வில்லனாக ஆசை

அசோக் செல்வன் கூறுகையில், எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து பெரிய ஆளாக வளர நினைப்பவர்களுக்கு அவர் மிகப் பெரிய முன்னுதாரணம். மிகப் பெரிய நடிகர். அடுத்து செமயான படம் ஒன்று அவர் நடித்து வர போகிறது என்று தோன்றுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அவரது படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். வருங்காலத்தில் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை. அதுவும் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X