For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எந்த சீனையும் ‘கட்’ பண்ணல.. நல்லாவே ஃப்ரீ புரமோஷன் பண்றாங்க.. இரண்டாம் குத்து இயக்குநர் பேட்டி!

  |

  சென்னை: தியேட்டர்களில் முரட்டு வெற்றி பெற்றுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஹீரோவும் இயக்குநருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார், பல சர்ச்சையான கேள்விகளுக்கு சகஜமாக பதில் சொல்லி உள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

  ஆர்யாதான் என்ன HERO வா நடிக்க வச்சது | DIRECTOR SANTOSH P JAYAKUMAR CHAT PART-01| FILMIBEAT TAMIL

  கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

  தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் சந்தானத்தின் பிஸ்கோத் மற்றும் சந்தோஷின் இரண்டாம் குத்து படங்கள் ரிலீசாகி உள்ளன.

  சூரரைப்போற்று பார்த்தேன்.. சூர்யா அழும் இடங்களிலெல்லாம் கண்ணீர்விட்டேன்.. நடிகர் வடிவேலு உருக்கம்!

  தீபாவளி ரிலீஸ்

  தீபாவளி ரிலீஸ்

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. தியேட்டரில் சந்தானத்தின் பிஸ்கோத் மற்றும் சந்தோஷின் இரண்டாம் குத்து படங்கள் ரிலீசாகி உள்ளன.

  முரட்டு வெற்றி

  முரட்டு வெற்றி

  என்ன தான் ஆபாச படம் என்று முத்திரை குத்தப்பட்டாலும், தியேட்டர் ஓனர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கியது இந்த படத்தைத் தான். ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் குத்து படமும் முரட்டு வெற்றி பெற்றுள்ளது.

  இரண்டாம் குத்து இயக்குநர் பேட்டி

  இரண்டாம் குத்து இயக்குநர் பேட்டி

  இரண்டாம் குத்து படத்தில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் கலக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள கலக்கல் பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் ஹீரோவாக நடித்த அனுபவம் தொடங்கி, படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் அதனை எப்படி சமாளித்தேன் என ஏகப்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

  ஆர்யா தான் சொன்னார்

  ஆர்யா தான் சொன்னார்

  சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான கஜினிகாந்த் திரைப்படம் சந்தோஷுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், ஆர்யாவுடன் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இரண்டாம் குத்து படத்தில் தன்னை ஹீரோவாக நடிக்க தயாரிப்பாளர் கூறுகிறார் என ஆர்யாவிடம் சொன்னதற்கு, நான் ஆறு மாசமா இதைத்தான் சொல்றேன், நீயே நடி, நல்லா இருக்கும் என ஊக்கப்படுத்தினார் என்றார்.

  இலவச புரமோஷன்

  இலவச புரமோஷன்

  ப்ளூ சட்டை மாறன் பலூன் படத்திற்கு பேசிய விமர்சன வீடியோ கட் பண்ணி இரண்டாம் குத்து டீசரில் போட்டேன். அந்த படம் எதிர்பார்த்த மாதிரியே கிடைத்த ஏகப்பட்ட எதிர்ப்புகளால் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்நிலையில், இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே இலவச புரமோஷன் பிச்சுகிச்சு என கலாட்டா செய்துள்ளார்.

  ஒரு சீனும் ‘கட்’ பண்ணல

  ஏகப்பட்ட எதிர்ப்புகள், புகார்கள், வழக்குகளை சந்தித்து இந்த படத்தை ஏ சான்றிதழுடன் ரிலீஸ் செஞ்சிருக்கீங்க, சென்சாரில் ஏகப்பட்ட காட்சிகளை கத்தரித்து விட்டார்களா? என்கிற கேள்விக்கு ரொம்பவே கூலாக, மியூட் மட்டும் தான் சில வசனங்களை பண்ணாங்க, பெருசா எந்த சீனையும் ‘கட்' பண்ணல எனக் கூறும் இரண்டாம் குத்து படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் பேட்டியை மறக்காம பாருங்க!

  English summary
  Irandam Kuththu movie released on Diwali in several theaters. Irandam Kuththu director come hero Santhosh P Jayakumar gave us an exclusive interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X