குட்டையை குழப்பிய ரஜினி.. குடியை இளையராஜா விட்டது எப்போ.. பிரபலம் சொன்ன அந்த விஷயம்

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, இளையராஜா பீர் குடித்துவிட்டு போட்ட ஆட்டத்தை பற்றி பேசி இருந்தார். அரசு விழாவில் ரஜினி, குடியை பற்றி பேசியது பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பத்திரிக்கையாளர் குபேந்திரன், இளையராஜா குடியை எப்போது நிறுத்தினார் என்பது குறித்து BWTamil 360 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அரை பாட்டில் பீரை குடித்துவிட்டு இளையராஜா ஆட்டம் போட்டார் என்பது தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக பேசப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தை முதலில் ஆரம்பித்தது இளையராஜா தான், இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி எனக்கு ஃபோன் செய்து, நாம் செய்த அட்டகாசம் அனைத்தையும் சொல்லி விடுவேன் என மிரட்டினார் என இளையராஜா பேசிக் கொண்டு இருக்கும் போதே, ரஜினி சென்று மைக்கை வாங்கி, ஜானி மியூசிக் கம்போசிங்கின் போது, அரை பாட்டில் பீரை குடித்துவிட்டு, நடிகைகளை பற்றி கிசுகிசு பேசினார் என அனைத்தையும் உளறி குட்டையை கிளப்பி விட்டார். இந்த விஷயத்தை இளையராஜா தொட்டு இருக்கவே கூடாது. அப்படியே தொட்டு இருந்தாலும் ரஜினி அதை பற்றி பேச வேண்டாம் என மறுத்து இருக்க வேண்டும்.

Ilaiyaraaja Rajinikanth Beer

குடியால் வந்த சண்டை: இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி, அடுத்தது பாலூட்டி வளர்த்த கிளி, மூன்றாவது படம் பத்ரகாளி. மூன்றாவது படமான பத்ரகாளி திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் வாலி எழுதினார். அதில் இரண்டு பாடல்கள் பாட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அப்போது, சென்னை மகாலிங்கபுரத்தில், இதை கொண்டாடுவதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், அனைவரும் சரக்கு அடித்துக்கொண்டு, இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார்கள். அப்போது சில, வாக்குவாதங்கள் ஏற்பட்டு கைகளைப்பாகி அது சண்டையாக மாறி உள்ளது. அன்றிலிருந்து தான் இளையராஜா குடித்து விட்டால், இசை கருவியை கையில் தொட மாட்டேன் என முடிவு எடுக்கிறார். இந்த தகவலை வாலி அவர்கள் தன்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அவரை மாற்றிய பாடல்: ஆனால், அதன் பிறகும் இளையராஜா குடித்து இருக்கிறார். அதன் பிறகு நடந்த விஷயத்தை தான் ரஜினி தற்போது மேடையில் பேசி இருந்தார். இளையராஜா குடியை நிறுத்தியது 82ஆம் ஆண்டுக்கு பிறகு தான். கே.சங்கர் இயக்கத்தில் தாய் மூகாம்பிகை என்ற திரைப்படத்தில் 'ஜனனி ஜனனி' என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலை பாட வேண்டியவர் யேசுதாஸ். ஆனால், அந்தப் பாடலின் பதிவின் போது அவரால் வர முடியாமல் போய்விட்டதால், அந்த பாடலை இசைஞானி இளையராஜாவே பாடி இருந்தார். அந்தப் பாடலை கேட்டா வாலி, நீ பாடியதே நன்றாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டாம், படத்தில் நீ பாடியதே இருக்கட்டும் எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்தப் பாடல் படத்தில் வைக்கப்பட்டு, பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அந்த படம் தான் இளையராஜாவை மாற்றுகிறது. தாய் மூகாம்பிகை படம் வெளியாகி பாடல் ஹிட்டான பிறகு, இளையராஜா அனைவரையும் ரயிலில் தாய் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்று அந்தப் பாடலை பாடினார். அதன்பிறகு தான் இளையராஜா குடிப்பதையே நிறுத்தி விட்டு, தனது தோற்றம் என அனைத்தையும் மாற்றிக்கொண்டார்.

ரஜினிக்கு இதே வேலை தான்: அனைவருக்கும் இளம் வயது விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சிலாயிப்பு இருக்கத்தான் செய்யும், அப்படித்தான் ரஜினி பேசியதை கேட்டு இளையராஜா சற்று தடுமாறிவிட்டார். இளையராஜாவின் அனைத்து பாடல்களையும் நாம் ரசிப்போம். ஆனால் சிம்போனியை ரசிக்க முடியுமா என்றால், அது இசை கலைஞர்கள், இசையை நன்றாக உள்வாங்கியவர்களால் மட்டும் தான் முடியும். அப்படி ஒரு வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்து இருக்கும் போது, ரஜினி, இளையராஜாவிடம் சிம்போனி பற்றி கேட்டு இருந்தால் அது மிகப்பெரிய விஷயமாக வந்திருக்கும். ஆனால், இசைவெளியிட்டு விழாவில் பேசுவது போல ஒரு அரசியல் விழாவில் ரஜினி பேசியது தவறு, ரஜினிக்கு எப்போதும் இதே வேலை தான் என பத்திரிக்கையாளர் குபேரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X