செல்வராகவனுக்கு என்னாச்சு? கல்லறையை உடச்சிட்டு வெளியே வந்திருக்கேன்.. இப்படி பேச காரணம் அதுவா?

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுவிடுகிறது. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தனுஷ் நடிப்பில் உருவான படமான நானே வருவேன் என்ற படம் தான். இந்த படத்திற்கு பின்னர் இவரது இயக்கத்தில் இன்னும் படங்கள் வெளியாகவில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படி இருக்கையில், அவரது சமீபத்திய பேட்டி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, உங்களுக்கு நடந்த விஷயங்களில் மிகவும் மோசமான சம்பவமாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை அவரைப் பேட்டி எடுத்த தொகுப்பாளினி கேட்டார். அதற்கு அவர் உடனே, " வரும், இன்னும் 6 மாதத்தில் வரும். இப்போது ஒன்று நடந்து விட்டது. அது அடுத்த ஆறு மாதத்திற்குள் உங்களுக்கு தெரியவரும். இவ்வளவு வலியுடன் நான் எப்படி மற்ற விஷயங்களை செய்து வருகிறேன், எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நானே என்னை பலமுறை கேட்டு வருகிறேன்.

Fans Getting Shock And Confusion About Selvaraghavan Talks He Faced Literally Death Recent Interview

கல்லறை: குறிப்பாக எப்படி நீ ( செல்வராகவன் செல்வராகவனை சுட்டுக் காட்டுகிறார்) ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப எழுந்து வருகிறாய். எத்தனை முறை வீழ்ந்தாலும் அத்தனை முறையும் எழுந்து வருவது எப்படி என்று கேட்டு வருகிறேன். எனக்கு எனது வேலை மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வேலை கொடுக்கும் ஆசுவாசத்தால் ஓடிக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான் எத்தனை முறை வீழ்ந்தாலும் இன்னொரு முறை நிற்கலாம் என்ற நம்பிக்கை அங்கிருந்துதான் வருகிறது என்று நினைக்கிறேன்.

ஷாக்: ஏற்கனவே கல்லறை எல்லாம் கட்டி, பூசி, பூச்செண்டு எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டார்கள். நான் அதிலிருந்து உடைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதுவும் கடந்த நான்கு, ஐந்து தினங்களுக்கு முன்னர் தான் நான் வெளியே வந்திருக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா என்று மிகுந்த வலியுடன் பேசுகிறார். செல்வராகவன் இவ்வாறு பேசியது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

Fans Getting Shock And Confusion About Selvaraghavan Talks He Faced Literally Death Recent Interview

காரணம் என்ன?: சில இணையவாசிகள் செல்வராகவனின் இந்த துயரத்திற்கு காரணம் அவரது மனைவி கீதாஞ்சலி தான் என்று கூறி வருகிறார்கள். அதாவது இவர்கள் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஆனால் ரசிகர்கள் இந்த கமெண்ட்டை யூகத்தின் அடிப்படையில் தான் தெரிவிக்கிறார்கள். செல்வராகவனோ அல்லது அவரது தரப்பில் இருந்தோ, கீதாஞ்சலி செல்வராகவன் தரப்பில் இருந்தோ இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. மேலும் சில ரசிகர்கள், செல்வராகன் இப்படி ஒரு துயரத்தில் இருக்க கூடாது, எதுவாக இருந்தாலும் அது சீக்கிரம் சரியாக வேண்டும் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X