Exclusive: வயதில் சிறியவராக இருந்தாலும் நடிப்பில் குரு…. தனுஷை பாராட்டிய ஜீவா ரவி!
சென்னை : இல்லத்தரசிகள் கொண்டாடும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஜீவா ரவி.
இவர், ரஜினியின் மகள் இயக்கிய 3 திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக நடித்து பெயர் எடுத்து வெற்றி வாகை சூடி வரும் ஜீவா ரவி தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கேள்வி : தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு வந்தது.
பதில் : நான் அப்போ, விஜய் டிவியில கனாக்காணும் காலங்கள் சீரியலில் பிஸியா நடிச்சிட்டு இருந்தேன் அப்போதுதான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தனுஷ் அவர்களே நேரடியாக அழைத்து பேசினார். பின்னர், 10 ஆயிரம் ரூபாய்க்கான செக்கை கொடுத்தார். சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த தருணம் என்றார்.
கேள்வி : தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் எப்படி இருப்பார்?
பதில் : 3 படத்தினுடைய ஹீரோவும் டைலாக் ரைட்டரும் அவர் தான். ஷூட்டிங் 7 மணிக்கு ஆரம்பிக்குதுனா, தனுஷ் 6 மணிக்கு எல்லாம் அங்க இருப்பாரு, தனுஷ் வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் தான் குரு. அந்த படத்தில் கற்றுக்கொண்ட நிறைய விஷயங்கள் இப்போ வரைக்கும் எனக்கு கை கொடுக்கிறது. மேலும், ஒரு காட்சியை சிறப்பாக நடிச்சி முடிச்சிட்டோம்னா தயங்காமல் பாராட்டக்கூடியவர் தனுஷ் என்று ஜீவா ரவி கூறினார்.
கேள்வி : ஜீவா திரைப்படத்திற்கு பிறகு ரவீந்திரன் என்ற ஜீவா ரவினு மாற்றியதற்கு என்ன காரணம்
பதில் : நான் ஒரு கிரிக்கெட் வீரர் Tamilnadu under19ல கிரிக்கெட் விளையாடி இருக்கேன், என்னுடைய கோச் கபில்தேவ் டெல்லி வரை சென்று விளையாடி இருக்கிறேன் ஒரு சில காரணங்களால் என்னால் அதற்குள் போகமுடியல. அந்த கதாபாத்திரம் என் மனதை தொட்டதால் என் பெயரோடு ஜீவா படத்தின் பெயரை இணைத்துக்கொண்டேன் என்று கூறினார்.
கேள்வி : கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம்
பதில் : கத்தி படத்தில் கலெக்டரா நடித்தேன், விஜய்யுடன் நடிக்க போறோம் என்று ஒரு வித பதற்றம் இருந்தது. ஆனால், விஜய் இயல்பா வந்து முதுகில் தட்டி என்ன கலெக்டர் சார் என்றார். மேலும், விஜய் ரொம்ப பேசமாட்டாரு அமைதியா இருப்பாருனு சொல்வாங்க, ஆனால் அப்படி இல்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்குற அனைவரிடத்திலும் அழகா பேசுவாரு. அந்த படம் எனக்கு மறக்க முடியாத படம் அவரிடம் நிறையபேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார்.


Click it and Unblock the Notifications











