»   »  தமிழில் ஒரு அப்பர் படம்!

தமிழில் ஒரு அப்பர் படம்!

Subscribe to Oneindia Tamil

ஃபர்ஸ்ட் டைம் என்ற பெயரில், அட்டகாசமான ஒரு அப்பர் கிளாஸ் படம் தமிழில் வருகிறது.

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கில டைட்டில் கூடாது என்ற குரல்களுக்குப் பின்னர் தமிழக அரசு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று உத்தரவு போட்டது.

இதைத் தொடர்ந்து ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தொடங்கின. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஆங்கில டைட்டிலில் ஒரு படமும் வரவில்லை.

இந்தநிலையில் ஃபர்ஸ்ட் டைம் என்ற சுத்தமான ஆங்கிலப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன் சேஷாத்ரி கோமதம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமும் சேஷாத்ரிக்கு உண்டு. என்னங்க இது என்று சேஷாத்ரியிடம் கேட்டபோது படு உற்சாகமாக பேச ஆரம்பித்தார். இது முற்றிலும் வித்தியாசமான ஒரு படம். ரத்தம் கக்க வைக்கும் வன்முறை இதில் கிடையாது.

எல்லோராலும் விரும்பப்படும் ஒரு அழகான ஹீரோ, புத்திசாலியான, கவர்ச்சிமிகு ஹீரோயின். இவர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட அழகான கதைதான் ஃபர்ஸ்ட் டைம் என்றார்.

படத்தின் பி.ஆர்.ஓ.நிகிலிடம் கேட்டபோது, சென்னையை யாரும் இதுவரை இப்படிக் காட்டியதில்லை என்று கூறும் அளவுக்கு சென்னையை படு அழகாக இதில் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் சுத்தமான மேல் தட்டு, படித்த வர்க்கத்தினர்தான்.முற்றிலும் நவ நாகரீக மேல் தட்டு வர்க்கத்துக் கதை இது. படித்த, நகர்ப்புற நாகரீகத்தில் விருப்பம் கொண்டவர்களைக் குறி வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சத்யஜித்தான் ஹீரோ. படு ஹேண்ட்சமாக இருக்கிறார். அனுஜா அய்யர் நாயகி. படு க்யூட்டாக இருக்கிறார். அர்பன் வார்ப்புகள் என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது இவர்களது தோற்றமும்,ஸ்டைலும்.

எடிட்டிங் பி.லெனின், கலை தோட்டாதரணி, இசை அஸ்லம் முஸ்தபா, கேமரா ஃபெளசியா என பெரும் தலைகள் பல படத்தில் உள்ளன.சுத்தமான மெட்ரோ மூவி இது. இப்படி ஒரு படம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்று கூறப்படுகிறது.

ஏ சென்டர் படமாக இருந்தாலும் ஏ ரகமாக இல்லாமல் ஏ கிளாஸ் ஆக இருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil