பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா‘ முதல் ‘லவ்‘ வரை.. நெட்ஃப்ளிக்ஸில் தரமான 6 புதிய வெப் தொடர்கள்!

சென்னை: சமீப காலமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன் வீட்டில் இருந்தபடியே படத்தை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் புதிய ஆறு தொடர்கள் வெளியாக உள்ளது.

ஸ்டீபன்: அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' வெப் தொடர் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது. சீட் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் தமிழ் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் "குற்றத்திற்கு அப்பால் அதன் பின்னால் இருக்கும் மனிதனைப் பார்க்கும் ஒரு படமாக 'ஸ்டீபன்' உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் அன்பானவராக அதே சமயம் பாதிப்படைந்த ஒருவராகவ
கோமதி ஷங்கர் நடிக்கிறார். ஒரு வழக்கில் கில்லரை மதிப்பிடும் மனநல மருத்துவரை சுற்றி இந்தக் கதை நகர்கிறது.

Netflix OTT New web series Netflix OTT
Photo Credit:

லவ்: தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1 மற்றும் மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி உள்ள வெப் தொடர் தான் 'லவ்' காதல், காமெடி கலந்த இந்த புதிய வெப் தொடரில், அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார்.

மேட் இன் கொரியா: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் 'மேட் இன் கொரியா'. இத்தொடரை ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்குகிறார். இந்தக் கதையில் 'ஸ்க்விட் கேம்' புகழ் பார்க் ஹை-ஜினுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார். துரோகத்தால் கொரியாவுக்கான கனவுப் பயணம் தடம் புரண்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

Netflix OTT New web series Netflix OTT
Photo Credit:

லெகஸி: ட்ரிபிள்ஸ் வலைத் தொடர் மற்றும AMMU திரைப்படத்தின் இயக்குனர் சாருகேஷ்சேகர் இயக்கி இருக்கும் புதிய வெப் தொடர் 'லெகசி'. இது தமிழ் தொடரில் மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக், குல்ஷன் தேவையா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த குடும்ப கேங்ஸ்டர் நாடகம் வாரிசு உரிமையை மையமாகக் கொண்ட கதைக்களமாக அமைந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இதுவரைதமிழ் வலைத் தொடருக்காக செலவிட்ட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தொடர் இதுவாகும்.

தக்ஷகுடு: விஜய் தேவரகொண்ட தம்பி ஆனந்த் தேவரகோண்ட நடித்துள்ள படம் Thakshakudu ஓடிடி வெளியாக உள்ளது. 'மிடில் க்ளாஸ் மெலோடீஸ்' படத்தை இயக்கிய வினோத் அனந்தோஜு இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும், 'லாபதா லேடீஸ்' ஃபேம் நிதான்ஷி கோயல் நாயகி'யாக நடித்துள்ளார். இப்படத்தை சிதார டைன்ட்மென்ட்ஸ், ஃபார்ச்யூன் ஃபோர் சினிமாஸ் பேனர்ஸ் தயாரித்துள்ளது

சூப்பர் சுப்பு: தெலுங்கு சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் ஒரு நகைச்சுவை தொடர் தான் சூப்பர் சுப்பு. அண்மை காலமாக, இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடாததால், சில நாட்களாக திரையில் தென்படாமர் இருந்த சந்தீப் கிஷன் சூப்பர் சுப்பு என்ற புத்தம் புதிய வலைத் தொடரின் மூலம் திரும்பி வந்துள்ளார். வேலைக்குத் தகுதியற்றவராக இருந்தாலும், ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் கல்வியைக் கற்பிக்கும் பணியில் எதிர்பாராத விதமாக சேருகிறார் சந்தீப் கிஷன். அதல் நடக்கும் அனுபவங்களே படத்தின் கதை.

More from Filmibeat

Read more about: netflix ott
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X