சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா டைரக்டர் ஆகிட்டாரு.. ஆட்டிசம் குறைபாடு குறித்த பாடலை உருவாக்கியிருக்காரே!
சென்னை: சுந்தரி சீரியல் மூலம் பிரபலமான நடிகை கேபிரியல்லா தமிழ் ஃபிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் ஆட்டிசம் குழந்தைகளுக்காக இயக்கிய "மழலை தாயே" பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
சினிமாவில் பிஸியாக இருந்துகொண்டே, சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் ஆட்டிசம் குறித்த பாடல் ஒன்றை உருவாக்கியது ஏன் என்ற கேள்விக்கு கேபிரியல்லா, "என்னுடைய ஆன்லைன் வகுப்பில் பவித்ரா சேர்ந்த பிறகு, கேப் தியேட்டர் ஃபேக்டரிக்காக ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்னு நினைச்சேன்" என்றார்.

அந்த சமயத்தில் பாலா தான், "ஏன் நம்மளே ஒரு சாங் பண்ணலாம்?" என்று கேட்டதாகவும், வைக்கம் விஜயலட்சுமியை பாட வைத்தது அவருடைய யோசனை தான் என்றும் கேபிரியல்லா கூறினார். "அவங்க வாய்ஸ் கேட்ட உடனே, இந்த சாங் எல்லாருக்கும் பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை வந்துச்சு" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த பாடலில் நடித்த பவித்ரா குறித்து கேபிரியல்லா பேசுகையில், "அவங்களுக்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே சீரியல்ல நடிச்சிருக்காங்க. அவங்கள ஸ்பெஷலா ட்ரீட் பண்ணக் கூடாதுன்னு நான் நினைப்பேன்" என்றார்.
இசையமைப்பாளர் பாலா பேசுகையில், "கேபிரியல்லா கமர்ஷியலான விஷயங்களை தாண்டி நிறைய பண்ணனும்னு ஆசைப்பட்டாங்க. அவங்க ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும், இந்த பாட்டுக்காக நிறைய கஷ்டப்பட்டாங்க" என்று கேபிரியல்லாவின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
வைக்கம் விஜயலட்சுமி பாடல் பாடியது குறித்து கேபிரியல்லா கூறுகையில், "அவங்க கிட்ட ரெண்டு மூணு நாள் முன்னாடியே சாங் அனுப்பிடுவேன். அவங்க மனப்பாடம் பண்ணி பாடுவாங்க. அவங்க பாடும்போது, எனக்குள்ள ஒரு நிம்மதியான உணர்வு ஏற்படும்" என்று கூறினார்.
இந்த பாடலை பல பிரபலங்கள் பாராட்டியதாக கேபிரியல்லா தெரிவித்தார். "ரஞ்சித் அண்ணா கால் பண்ணி 'அந்த குட்டி நல்லா பண்ணியிருக்காங்க'னு சொன்னாங்க. மதுமிதா அக்கா என்கிட்ட அழுது பேசினாங்க. அவங்களுடைய வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது" என்றார்.
இனி வரும் காலங்களில் காதல் பாடல்களை தவிர்த்து, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பாடல்கள் உருவாக்குவீர்களா என்ற கேள்விக்கு கேபிரியல்லா, "கண்டிப்பாக இருக்கும். காதல் கூட காட்டலாம். இதுவும் ஒரு அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான காதல் தான்" என்று பதிலளித்தார்.
கடைசியாக கேபிரியல்லா கூறுகையில், "இந்த பாடல் ஒரு குறும்படம் போல இருக்கும். விஷுவல்ஸ் ரொம்ப அழகா இருக்கும். இதுக்கு சப்போர்ட் பண்ணுங்க" என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்த பாடல் வெற்றி பெற Filmibeat Tamil சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
பவித்ரா பேசும் போது தான் ஒரு விஜய் ரசிகை என்றும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உங்கள் பாட்டு ஹிட் அனதும் கூடிய சீக்கிரமே விஜய்யை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று தொகுப்பாளர் ஊக்கப்படுத்தினார். இவர்களது இந்த ஸ்பெஷல் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications











