காந்தி கண்ணாடி படத்தையும் கேபிஒய் பாலாவையும் விஜய் டிவி புறக்கணித்ததா?.. இயக்குநர் ஷெரிஃப் ஓபன் டாக்!

சென்னை: சிவகார்த்திகேயன், புகழ் என விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த பலரையும் விஜய் டிவி கொண்டாடிய நிலையில், கேபிஒய் பாலா மற்றும் காந்தி கண்ணாடி படத்தை விஜய் டிவி புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காந்தி கண்ணாடி படத்தின் இயக்குநர் ஷெரிஃப் பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

"பணத்து மேல ரியல் லைஃப்ல ஆசைப்படாத நபர், படத்துல பணத்துக்காக என்ன வேணா செய்ற மாதிரி நடிச்சிருக்காரு!" இயக்குநர் ஷெரீஃப், 'காந்தி கண்ணாடி’ படத்தில் கேபிஒய் பாலா கதாபாத்திரத்தைப் பற்றி இப்படிச் சொன்னது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Gandhi Kannadi Director Sheriff On KPY Bala and Gandhi Kannadi movie issues
Photo Credit:

விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா நடித்த 'காந்தி கண்ணாடி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களைச் சந்தித்தது. படம் ரிலீஸுக்கு முன்பே விமர்சனம் வந்ததற்கான காரணம் என்ன? விஜய் டிவியே பாலாவுக்கு ப்ரொமோஷன் பண்ணலையா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

காந்தி கண்ணாடி படத்துக்கு என்ன பிரச்சனை?: இதுகுறித்து இயக்குநர் ஷெரீஃப் பேசுகையில், "விஜய் டிவியில் எல்லாருமே நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். படம் யார் சாட்டிலைட் உரிமை வாங்கியிருக்காங்களோ, அவங்கதான் பிரையாரிட்டி கொடுப்பாங்க. நம்ம படத்துக்கு அவங்க பயங்கர சப்போர்ட் பண்ணாங்க" எனக் கூறினார்.

மேலும், படம் வெளியாகுறதுக்கு 15 நாள் முன்னாடிதான் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணோம். அதனால, ஏற்கனவே ஷெட்யூல் போட்டிருந்த படங்களுக்கு முன்னுரிமையை விஜய் டிவி கொடுத்திருக்கலாம். இதுல பாரபட்சம் எதுவும் இல்லை என்றும் ஷெரீஃப் விளக்கினார். மேலும், விஜய் டிவி பாலாவை ஏன் கொண்டாடவில்லை என்பதற்கு பாலா பிரதர் சரியான பதிலை தருவார் என்றே நம்புகிறேன் என்றார்.

பாலாவுக்கு ஏன் அப்படியொரு கேரக்டர்: படத்தின் கதை பற்றி ஷெரீஃப் கூறுகையில், பாலா நிஜ வாழ்க்கையில் பணத்துக்கு ஆசைப்படாதவர். ஆனால், படத்தில் பணத்துக்காக எதையும் செய்யத் துணியும் கதாபாத்திரம். நிஜத்துக்கும், கதைக்கும் வித்தியாசம் இருக்கணும். இல்லனா பிரச்சார படமாயிடும் என்றார்.

ரிலீஸுக்கு முன்னாடியே நெகட்டிவ் ரிவ்யூஸ்: படத்துக்கு வந்த விமர்சனங்கள் குறித்து ஷெரீஃப், "படம் 5ம் தேதி ரிலீஸ். ஆனா, 3ம் தேதியே ரிவ்யூ வருது. அதுவும் வேற படத்தோட நெகட்டிவ் ரிவ்யூஸை கட் பண்ணி நம்ம படத்துக்கு ரிவ்யூவா போட்டாங்க. படம் பார்க்காமலேயே விமர்சனம் பண்ணுவது கஷ்டமா இருந்தது" என்றார்.

சம்பளம் வாங்காம பாலா நடிச்சாரா என்ற கேள்விக்கு, "அவர் அட்வான்ஸ் வாங்கித்தான் வீடு கட்டிக் கொடுத்தாரு. மீதி சம்பளத்தை படம் சக்சஸ் ஆன பிறகு வாங்கிக்கலாம்னு சொன்னாரு. தயாரிப்பாளர் தரேன் சொன்னாலும், பாலா வேணாம்னு சொல்லிட்டாரு" என்றார் ஷெரீஃப்.

பாலாவுக்காக படம் பார்க்கணுமா?: "பாலா நல்லது பண்றாரு, அதுக்காக படம் பார்க்கணுமா?"னு சிலர் கமெண்ட்ஸ் போடுறாங்க. நாங்க எங்கேயும் பாலாவுக்காக படம் பாருங்கன்னு சொல்லல. படம் நல்லா இருந்தா மக்கள் தானா பார்ப்பாங்க. குடும்பத்தோட வந்து படம் பார்க்குறாங்க. சிலர், ரெண்டாவது, மூணாவது தடவைகூட பார்க்குறாங்க எனக் கூறினார் ஷெரீஃப்.

படத்துக்கு வந்த தடைகள் பற்றிக் குறிப்பிட்ட ஷெரீஃப், நாகர்கோவில்ல முதல் நாள் ஷோவே இல்லை. போஸ்டர் கிழிச்சாங்க. இதெல்லாம் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காத்தான் பார்க்கிறேன். படம் நல்லா ஓடிக்கிட்டு இருக்கு. நாங்க ரொம்ப ஹாப்பியா இருக்கோம் என்றார்.

இறுதியாக, இயக்குநர் ஷெரீஃப், மக்கள் தியேட்டரில் கை தட்டும்போதும், கிளைமாக்ஸில் ரியாக்ட் பண்ணும்போதும், அதை ஓரமா நின்னு பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காகத்தான் தியேட்டருக்கு வருகிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X