»   »  கமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி

கமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கமல் ஹாஸன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இளம் நடிகை ஒருவர் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

Gautami doesn't agree with Kamal

நடிகையின் கடத்தலுக்கு சதித் தீட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக உலக நாயகன் கமல் ஹாஸன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது அவர் பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தி சேனல் ஒன்று நடிகை கவுதமியிடம் கேட்டது. அதற்கு அவர் கூறுகையில், இது வேதனையான விஷயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என்றார்.

English summary
Gautami said that it is not right for Kamal Haasan to mention the name of the actress who got molested in Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil