நீங்க ஒருத்தர் போதும்.. மொத்த ஹீரோயின்ஸ்க்கும் மார்க்கெட் போய்டும்.. மீனாட்சி சௌத்ரி ஹாட் போட்டோஸ்!
சென்னை: SIIMA Awards 2025 தென்னிந்திய அளவில் பிரம்மாண்டமாக நடக்கும் விருது விழாக்களில் ஒன்றாகும். துபாயில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், கடந்த ஆண்டு வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், நடிகை மீனாக்ஷி செளதரிக்கு லக்கி பாஸ்கர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வு விருதை வென்றார்.
மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி மாநில அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர், 2019ஆம் ஆண்டு வெளியான 'அவுட் ஆஃப் லவ்' என்ற இந்தி வலைத்தொடர் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய இவர், 'இச்சட்டா வாகனம் நிலுபராது', 'கிலாடி', மற்றும் 'ஹிட்: தி செகண்ட் கேஸ்' போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழில் விஜய் ஆண்டனி நடித்த திரில்லர் திரைப்படமான கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
நடிகை மீனாட்சி சௌத்ரி: இதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி மகனுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்கிற ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் ஒப்புக்கு ஒரு பாடலுக்கும், ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து ஆட்டம் போட்டு இருந்தார் மீனாட்சி சௌத்ரி.

க்யூட் போஸ்ட்: அந்த படத்தை தொடர்ந்து துல்கல் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் அதிக வசூலை அள்ளியதால், தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாது நடிகையாக மாறி இருக்கும் மீனாட்சி சௌத்ரி, துபாயில் நடைபெற்ற SIIMA Awards 2025 திரைப்பட விழாவில் கலந்து கொண்டு லக்கி பாஸ்கர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வு விருதை வென்றார். இந்த விழாவிற்கு மீனாட்சி சௌத்ரி மிகவும் அழகான உடையுடன் வந்து இருந்தார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் நீங்க ஒருத்தர் போதும்.. மொத்த ஹீரோயின்ஸ்க்கும் மார்க்கெட் போய்டும்... அவ்வளவு அழகாக இருக்கீங்க என மீனாட்சி சௌத்ரியை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











