»   »  தேவைப்பட்டால் கவர்ச்சி: கோபிகா

தேவைப்பட்டால் கவர்ச்சி: கோபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Gopika

இதுவரை நான் கவர்ச்சியாக நடித்ததில்லை. ஆனால் தேவைப்பட்டால் நிச்சயம் கிளாமராக நடிப்பேன் என்று கூறியுள்ளார் கோபிகா.

ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா.

இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.

இந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜின் சொந்தப் படமான வெள்ளித்திரை படத்தில் செம கிளாமராக நடித்துள்ளாராம் கோபிகா. இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியுள்ளதாம்.

அதுகுறித்து அவரிடமே கேட்டபோது, வெள்ளித்திரையில் ஒரு பாடல்காட்சி தான் படமாக்க வேண்டும். வெளிநாடுகளில் சென்று படமாக்க
வேண்டும் என்றால் அங்கு பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் மூணாறில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை என்றாலே கவர்ச்சி தானா. வேறு எதுவும் தெரியாதா. இதுவரை எந்த படத்திலும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று யார் சொன்னது.

நடிகை என்றாலே கவர்ச்சி என்ற மாயையிலிருந்து ரசிகர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கு எனக்கு வெள்ளித்திரையில் அமைந்துள்ள வேடம் பெரிதும் உதவும் என்றார்.

வெள்ளித்திரையில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேனா, இல்லையா என்பதை கடைசி வரை கோபிகா கன்பர்ம் செய்யவே இல்லை. இருந்தாலும் படத்தில் அவரது கேரக்டர் கிளாமராக வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் படம் குறித்து அறிந்தவர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil