»   »  திருமணம் எப்போது? கோபிகா பேட்டி

திருமணம் எப்போது? கோபிகா பேட்டி

Subscribe to Oneindia Tamil

எப்போது கல்யாணம் என்று கேட்டால் இப்போதைக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் கோபிகா.

ஆட்டோகிராப் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கோபிகா தற்போது சிம்புவுடன் தொட்டி ஜெயாஉட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த முதல் மலையாளப் படம் ஒரு தோல்விப் படம் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் இந்தப் படத்தைப்பார்த்துத்தான் கோபிகாவுக்கு சேரன் ஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப்படத்தின் அமோக வெற்றி கோபிகாவுக்கு தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

அவருடன் ஒரு மினி பேட்டி....

எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். அப்பா ஆன்டோ, அம்மா டெஸ்ஸி, தங்கை க்ளினி, பாட்டி ஏலியாஸ் என ஒரு சிறியகுடும்பம். வீட்டில் நான் செல்லப்பிள்ளை. சினிமாவுக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது.

ஆனால் எப்படியோ நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் சில படங்கள் ஓடிவிட்டால் போதும், உடனே அடுத்த கேள்வி திருமணம் எப்போதுஎன்பது தான்.

எனக்கு இப்போதைக்கு திருமண ஆசை இல்லை. ஆனாலும் இரண்டு வருடங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று எனதுபெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன்.

நிச்சயமாக எனது திருமணம் காதல் திருமணமாக இருக்காது. எனது பெற்றோரின் விருப்பப்படித்தான் நடைபெறும்.

ஆட்டோகிராப் வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் அதை மறுக்க முடியாது.

என்னுடைய முதல் படமான ப்ரணயமணித்தூவல் தோல்வியடைந்த போதிலும் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் சேரன் எனக்குஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார்.

வாழ்க்கையில் பணம், புகழ் மட்டும் இருந்தால் எல்லாம் கிடைத்து விடாது. இவை எப்போது வேண்டுமானாலும் நம்மைவிட்டுப்போய்விடும். ஆனால் வாழ்க்கையை விட்டுவிட்டால் அது நமக்கு திரும்ப கிடைக்காது.(தத்துவம்...?)

சமீபத்தில் எனது வீட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவம்..

தூத்துக்குடியிலிருந்து ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நான் வீட்டில் இல்லை. பாட்டி மட்டுமேஇருந்துள்ளார்.

அவர்கள் எனது பாட்டியிடம், என்ன பாட்டி சவுக்கியமா? என்று கேட்டுள்ளனர். இதைக்கேட்டவுடன் எனது பாட்டிக்கு கோபம்வந்துவிட்டது.

ஏனென்றால் பாட்டி என்றது அவருக்கு பட்டி என்று கேட்டுள்ளது. பட்டி என்றால் மலையாளத்தில் நாய் என்று அர்த்தம். அதன் பிறகுஅவர்கள் விளக்கமாக சொன்ன பிறகு தான் பாட்டிக்கு புரிந்தது.

தினமும் தமிழ்நாட்டிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வருகின்றனர் என்றார்.

பேட்டியை முடிக்கும்போது, மலையாளப் படங்களில் நடிப்பதை விட தமிழில் நடிப்பதில் ஏராளமான செளகரியங்கள் உள்ளன என்றுகோலிவுட்டுக்கு ஐஸ் வைக்கவும் அவர் தவறவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil