»   »  'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு!'

'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமெடி கிங் கவுண்டமணியிடம் கால்ஷீட் வாங்குவது எவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவருக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே காமெடி பண்ண ஓகே சொல்வார்.

49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று ஹீரோவாக இப்போதும் பிஸி. இடையில் வாய்மை பட்த்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வாய்மை இயக்குனர் அ.செந்தில் குமாரிடம் கவுண்டமணி பற்றி கேட்டோம்.


"பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் அழைத்தே வராத கவுண்டமணியை எப்படி மீண்டும் நடிக்க வச்சீங்க?"


"அவர் நடிக்க முடியாதுனு சொல்லி யாரையும் அவாய்ட் பண்ணலை. அவருக்கு பிடிச்சா மாதிரி கேரக்டர் யாரும் சொல்லலை. நான் சொன்ன இந்த டாக்டர் பென்னி கேரக்டர் அவரை கவர்ந்ததால தான் ஓகே சொன்னாரு. ஓகே சொன்னதோட மட்டும் இல்லாம படத்துல அவர் பேசற பன்ச் டயலாக்ஸ்லயும் ரொம்ப கவனம் எடுத்து பேசினாரு. அவரோட என்ட்ரி டயலாக்கே 'ஐ அம் கமிங் பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்' தான். படத்தை ஆலமரமா தாங்குறதே கவுண்டமணி சார் தான்!"


'Goundamany have equal mass to Rajinikanth'

"கவுண்டமணி பன்ச்னாலே அரசியல் இருக்குமே?"


'அது இல்லாம இருக்குமா? நாம சிச்சுவேஷன் சொல்லிட்டா போதும் சார்... அவர் எடுத்து விடற பன்ச்ல இன்னிக்கு நாட்டு நடப்பை செம கலாய் கலாய்க்கிற மாதிரி பன்ச்களா வந்து விழும். இன்னிக்கு இருக்கற அரசியல்வாதிகள் எல்லாரையுமே வாரிருக்காரு. ஒரு ஸீன்ல ஊர்வசி மேடத்துக்கு பசி தாங்க முடியாம வேலைக்காரி கொண்டு வந்த பழைய கஞ்சி குடிச்சுடுவாங்க. இதுதான் சமத்துவம்னு ஊர்வசி சொல்வாங்க. அதுக்கு கவுண்டமணி சார் 'மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டாத்தான் சமத்துவம். பள்ளத்தை வெட்டி மேட்டுல போட்டா அது சவக்குழி, பணக்காரன்களும், அரசியல்வாதிகளும் ஏழைகளோட கஞ்சியை கூட விட்டு வைக்க மாட்டேங்கறீங்களே? வீடு வீடா போயி நீ கஞ்சி குடி, நாடே கஞ்சிக்கு வழி இல்லாம அலையட்டும். பழைய கஞ்சியை புடுங்கி குடிச்சா சமத்துவமா? இருக்கறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கலைனாலும் பரவாயில்லை. அவங்ககிட்டேருந்து புடுங்காதீங்க', னு பன்ச் அடிப்பாரு.


'Goundamany have equal mass to Rajinikanth'

ஒரு ஸீன்ல அவர் சொன்ன டயலாக்கை வேற ஒரு ஸீன்ல மனோஜ் சொல்லுவாரு. அதை பார்க்கிற கவுண்டமணி சார் 'ஆமா, எல்லாரும் என்னையே காப்பி அடிங்க. சொந்தமா யோசிக்காதீங்க'ம்பாரு.


அரசியல் டயலாக்கையெல்லாம் அவர் பேசும்போது நான் கூட கொஞ்சம் பயந்துகிட்டு 'சார், பன்ச் பேசி முடிச்சுட்டு பொதுவாத்தான் சொன்னேன்னு ஒரு டயலாக் பேசிடுங்க சார்னு சொல்வேன். அதுக்கே அவர் ஏன்பா இதை சொல்லியே ஆகணுமா? அப்படியே இருக்கட்டுமே!'னு சொல்வார். படத்தையே காலி பண்றா மாதிரி கூட டயலாக் விட்டுடுவாரு. அவர் ஆடியன்ஸ் சைட் தான் எப்பவுமே''.


"கவுண்டமணி ஸ்பாட்ல எப்படி?"


"அவரோட டெடிகேஷனை பார்த்து நான் வியந்துருக்கேன். இந்த டயலாக்ஸ் எல்லாமே ஆன் த ஸ்பாட்ல அவர் பேசினது. என்னா நாலேட்ஜ் அவருக்கு தெரியுமா? இப்ப கூட அவ்ளோ புக்ஸ் படிக்கிறாரு. அதே மாதிரி சின்னவங்க, பெரியவங்கனு பார்க்காம எல்லாருக்குமே மரியாதை கொடுத்து பழகுவாரு. அரசியல்வாதிகள் பத்தி பேச ஆரம்பிச்சா அவ்வளவு ஆவேசமாயிடுவாரு. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அவருக்கு தெரியாத விஷயமே இல்லை. அவ்ளோ விரிவா பேசுவாரு. அவர் அடிக்கிற நக்கல்ல கூட ஒரு மெசேஜ் இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார் கவுண்டமணி. ரஜினி சாருக்கு சமமான மாஸ் அவருக்கும் இருக்கு. அது இந்த படம் மூலமா இன்னும் அதிகமாகும்''.

English summary
Vaaimai movie director Senthil Kumar's interview about Goundamani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil