»   »  ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தால் அஜீத்தை வைத்து இயக்குவேன்!- கவுதம் மேனன்

ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தால் அஜீத்தை வைத்து இயக்குவேன்!- கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அஜீத்தை வைத்து இயக்குவேன் என்றார் இயக்குநர் கவுதம் மேனன்.

திருவண்ணாமலையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கவுதம் மேனன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருப்பது, பேசுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குநர். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படங்களை இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மன நிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்கு ஏற்ப படம் எடுக்க வேண்டும்," என்றார்.

பின்னர் அவரிடம் மாணவ மாணவிகள் சில கேள்விகளைக் கேட்டனர். அவற்றுக்கு கவுதம் மேனன் அளித்த பதில்கள்:

விஜய்யுடன்

விஜய்யுடன்

கேள்வி: விஜய்யை எப்போது இயக்குவீர்கள்?

பதில்:இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்திப்படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.

கமல் சாரிடம் 15 நிமிடங்களில் ‘வேட்டையாடு விளையாடு' கதையைச் சொல்லி படத்தை இயக்க சம்மதம் பெற்றேன்.

படிப்பு இல்லேன்னா...

படிப்பு இல்லேன்னா...

கேள்வி: மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குநர் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது?

பதில்: மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு இல்லை என்றால் திரைப்பட இயக்குநர் என்ற அந்தஸ்து இல்லை. கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கஷ்டம்.

பிடித்த நடிகை

பிடித்த நடிகை

கேள்வி: உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்?

பதில்: தமிழ் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போதுதான் சரியான மொழி உச்சரிப்பைப் பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3 மொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் நடிகை த்ரிஷாவையும் பிடிக்கும்.

அஜீத்

அஜீத்

கேள்வி: ஹாலிவுட் படம் இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்வு செய்வீர்கள்?

பதில்: அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் என் தேர்வு அஜீத்தான்.

என்னை அறிந்தால் 2

என்னை அறிந்தால் 2

கேள்வி: மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2-ம் பாகம் இயக்குவீர்களா?

பதில்: விரைவில் என்னை அறிந்தால் 2-ம் பாகம் இயக்குவேன்.

நட்புதான்

நட்புதான்

கேள்வி: நட்பு-காதல் இவற்றில் எது சிறந்தது?

பதில்: வாழ்க்கையில் நட்புதான் சிறந்தது.

English summary
Director Goutham Menon says whether he got chance to direct a Hollywood movie, he would prefer Ajith as hero in that movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil