»   »  'சிம்பு இசையில் பாடியிருக்கேன்..!' - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் பேட்டி #Exclusive

'சிம்பு இசையில் பாடியிருக்கேன்..!' - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் பேட்டி #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே 53-வது நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடைசி வரை பங்கேற்று இரண்டாவது ரன்னர்-அப்பாக வெற்றி பெற்றவர் ஹரிஷ் கல்யாண்.

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ், 'பொறியாளன்', 'வில் அம்பு' உட்பட சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்ட ஹரிஷ் கல்யாண் இப்போது இயக்குநர் இளன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

புதுப் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கீங்க..?

புதுப் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கீங்க..?

இளன் சார் டைரக்ட் பண்ற படம். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்கில் இந்தப் படம் உருவாகுது. அவர் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். அவரோட கம்போஸிங்ல ஒரு படத்திலேயாவது நடிக்கணும்ங்கிறது கனவா இருந்துச்சு. இப்போ அந்தக் கனவு நிறைவேறியிருக்கு. யுவன் சார் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் செமயா வந்துடும்னு நினைக்கிறேன்.

எந்த மாதிரியான கதை இது?

எந்த மாதிரியான கதை இது?

சென்னைப் பின்னணியில் நடக்கிற கதைதான் இந்தப் படம். எமோஷன்ஸ், லவ் எல்லாம் கலந்த நகரத்து காதல் படமாக இருக்கும். படத்தின் கதை பிடிச்சதும் நடிக்க ஓகே சொல்லிட்டேன். ரைசா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. இந்தப் படத்தோட ஷூட்டிங் இன்னும் பத்து நாள்ல ஆரம்பிச்சிடும்.

ரைசா உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறது பற்றி?

ரைசா உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறது பற்றி?

நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நாள்லேயே ரைசா எலிமினேட் ஆகிட்டாங்க. அதனால், பிக்பாஸ் வீட்டுக்குள் எங்களுக்கு ரொம்ப பழக்கம் இல்ல. பிக்பாஸ் முடிஞ்ச்சதுக்கு அப்புறம் எல்லோரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். ஏற்கெனவே நல்லாத் தெரிஞ்சு அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்கிறவங்களோட நடிக்கிறோம்ங்கிறது எங்க ரெண்டு பேருக்குமே அட்வான்டேஜா இருக்கும்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு முன்னாடி... வெளியில் வந்ததுக்கு அப்புறம்... கேரியர் மாற்றம் எப்படி இருக்கு?

பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு முன்னாடி... வெளியில் வந்ததுக்கு அப்புறம்... கேரியர் மாற்றம் எப்படி இருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதில் கலந்துக்கிட்ட எல்லோருக்கும் மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சிருக்கு. சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் ரொம்ப பெருசா தெரியாதவங்களையும் இப்போ மக்களுக்கு நல்லா தெரியுது. பிக்பாஸ் மூலம் நல்ல ரீச் கிடைச்சிருக்கு. அது எங்களோட கேரியருக்கு கண்டிப்பா நல்லதுதான். அடுத்து பண்ணப்போற படங்களுக்கும் இது ஆதரவா இருக்கும்.

சினிமாவில் என்னவா இருக்கணும்னு ஆசை?

சினிமாவில் என்னவா இருக்கணும்னு ஆசை?

நல்ல நடிகரா ரசிகர்களிடமும், சினிமாத்துறையிலேயும் பேர் வாங்கணும். மக்களையும், ரசிகர்களையும் என்டர்டெயின் பண்ணனும். மியூசிக்லேயும் ஆர்வம் இருக்கு. ஆனா, எல்லாத்தையும் இப்பவே பண்ண முடியாது. என் இடத்தைப் பிடிச்சிக்கிட்டு அதுக்கு அப்புறம் எல்லாத்திலேயும் இறங்கணும். கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடக்கும்.

சினிமாவில் நடிப்பு தாண்டி..?

சினிமாவில் நடிப்பு தாண்டி..?

நான் பாடல் எழுதியிருக்கேன். ஆல்பம் சாங்ஸ் பாடியிருக்கேன். நானே மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கேன். சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைச்சா இங்கேயும் அதையெல்லாம் தொடர்ந்து பண்ணுவேன். ஒரு ஆல்-ரவுண்டரா சினிமாவில் ஜெயிக்கணும்ங்கிறதுதான் என் லட்சியம்.

புதுப் படத்தில் பாட வாய்ப்பிருக்கா?

புதுப் படத்தில் பாட வாய்ப்பிருக்கா?

இந்தப் படத்தில் பாடுவேனானு தெரியலை. அதை டைரக்டர் தான் முடிவு பண்ணனும். சந்தானம் சார் நடிக்கிற 'சக்க போடு போடு ராஜா' படத்துல சிம்பு சார் மியூசிக்ல ஒரு டைட்டில் சாங் பாடியிருக்கேன். அந்தப் பாடல் அடுத்த வாரத்துல ரிலீஸ் ஆகும். சினிமாவில் பாடகரா அறிமுகமாகியிருக்கிறதும் சந்தோஷமா இருக்கு. இதன் மூலமா இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்.

English summary
Harish Kalyan, who is well known actorafter the Biggboss show, has now been signed to act in Ilan's direction. And tha latest information is Harish is singing a song in Simbu's music in Santhanam's 'Sakka podu podu raja' film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X