»   »  'இந்த ஹீரோயினோட நடிக்கணும்' - பிக்பாஸ் ஹரிஷின் ஆசை இதுதான் #Exclusive

'இந்த ஹீரோயினோட நடிக்கணும்' - பிக்பாஸ் ஹரிஷின் ஆசை இதுதான் #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அமலாபால் நாயகியாக நடித்த 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், அதன்பிறகு 'பொறியாளன்', 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்று கடைசிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏராளம்... ரசிகைகளும்!

இப்போது ஒரு புதுப் படத்தில் நடிக்கவிருக்கும் ஹரிஷ், சினிமாவில் தான் சாதிக்க விரும்புவது என்ன, தனக்கு விருப்பமான இயக்குநர் யார், யாருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் என்பனவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

பிக்பாஸ் போட்டியாளர்களுடான உறவு எப்படி இருக்கு?

பிக்பாஸ் போட்டியாளர்களுடான உறவு எப்படி இருக்கு?

ஓரளவுக்கு எல்லோரும் எல்லோருடனும் அப்பப்போ பேசிட்டு இருக்கோம். நான் பிஸியா இருக்கிற மாதிரியே அவங்கவங்களுக்கு கிடைச்ச சான்ஸ் மூலமா எல்லோரும் பிஸியா இருக்காங்க. இதுக்கு மத்தியில் அப்பப்போ பேசிட்டு, மெசேஜ் பண்ணிட்டு எல்லோரும் நல்ல நண்பர்களா இருக்கோம். நேத்து நடந்த ஆரவ் பர்த்டே ஃபங்ஷன்ல எல்லோரும் சேர்ந்து கலந்துக்கிட்டோம். கொஞ்ச நாள்தான் சேர்ந்து இருந்தோம்னாலும் அதில் கிடைச்ச அனுபவங்கள் நிறைய. இந்த ஃப்ரெண்ட்ஷிப் நீடிக்கும்.

பிக்பாஸ் பாதியில் தான் கலந்துக்கிட்டீங்க... போறதுக்கு முன்னாடி உங்களுக்கு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?

பிக்பாஸ் பாதியில் தான் கலந்துக்கிட்டீங்க... போறதுக்கு முன்னாடி உங்களுக்கு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட்டுனு தெரியும். ஆனா, நாம அங்க போய் மக்கள்கிட்ட நல்ல பெயர் வாங்குவோமா, இந்தளவுக்கு ரீச் ஆவோமானுலாம் தெரியாது. பிக்பாஸ் முடிஞ்சு வெளியில் வரும்போது மக்கள்கிட்ட பாசிட்டிவ்வா வரவேற்பு கிடைச்சதுல சந்தோஷம். அங்கே இருக்கும்போது சிலமுறை வெளியே போய்டலாமனு யோசிச்சிருந்தாலும், கடைசிவரை அங்கே இருந்ததுல ரொம்ப ஹேப்பி.

சினிமாவில் லட்சியம்..?

சினிமாவில் லட்சியம்..?

'சிந்து சமவெளி' படத்தில் நடிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவா வரணும்னு நினைச்சுத்தான் உழைக்க ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கு இவ்வளவு காலம் தேவைப்படுது. வெற்றி எப்போ எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது. நிறைய போராட்டங்களுக்கு அப்புறம்தான் இந்த அளவுக்கே வாய்ப்பு கிடைச்சிருக்கு. அடிமனசுல என்ன இருக்கோ அது கண்டிப்பா நிறைவேறும்னு நம்புறேன். அது கொஞ்சம் கொஞ்சமா நடந்துக்கிட்டு வருது. ஆனா, சினிமாவில் நான் பண்ணவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

உங்களை கவனிக்க வச்ச படம் எதுனு நினைக்கிறீங்க?

உங்களை கவனிக்க வச்ச படம் எதுனு நினைக்கிறீங்க?

'வில் அம்பு' படத்தின் மூலம் எனக்கு ஓரளவுக்கு ரீச் இருந்தது. நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதுக்கு அப்புறம் 'பொறியாளன்' படம் நிறைய பேர் பார்த்துட்டு, 'நல்லா பண்ணிருக்கீங்க.. படம் நல்லா இருக்கு'னு மெசேஜ் பண்ணாங்க. ஆனா, அந்தப் படங்களால கவனிக்கப்பட்டதை விட இந்த 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால்தான் அதிகமா ரீச் ஆனேன்ங்கிறது நிஜம்.

எந்த ஹீரோயினோட நடிக்கணும்னு ஆசை?

எந்த ஹீரோயினோட நடிக்கணும்னு ஆசை?

எனக்கு ஆல்டைம் ஃபேவரிட் நயன்தாரா, த்ரிஷா ரெண்டு பேரும்தான். ஆனா, அவங்க சீனியர் நடிகைகள்ங்கிறதால நடிக்கிறது கஷ்டம். எனக்கு சமந்தா ரொம்ப பிடிக்கும். 'யே மாய சேஸாவே' படம் பார்த்ததுலேர்ந்து சமந்தா ஃபேன் ஆகிட்டேன். அவங்களும் இப்போ முன்னணி நடிகையாகிட்டாங்க. அவங்க கூட நான் நடிக்கணும்னு சொன்னா அது பேராசையா இருக்கும். நிறைய பேர் பேர் மைண்ட்ல வருது... ஆனா, எல்லோரும் சீனியரா இருக்காங்களே..! 'துப்பறிவாளன்' படத்துல நடிச்ச அனு இமானுவேல், ரெஜினா கஸாண்ட்ரா இவங்க கூட எல்லாம் சேர்ந்து நடிக்கணும்.

யாருடைய படத்தில் நடிக்கணும்னு ஆசை ?

யாருடைய படத்தில் நடிக்கணும்னு ஆசை ?

எனக்கு கௌதம் மேனன் சார் படத்தில் நடிக்கணும்னு ஆசை. கௌதம் மேனன் சாரை இதுவரைக்கும் மீட் பண்ணதில்லை. இனிமேல் அந்த சான்ஸ் கிடைச்சா நல்லாருக்கும். வெற்றி மாறன் சார், நலன் குமாரசாமி சார் படங்களில் எல்லாம் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவங்களோட ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல்லாம் பிடிக்கும். எந்தப் படத்துல நடிச்சாலும் சிறப்பான நடிகர்னு பேர் வாங்கணும். அவ்ளோதான்!

English summary
Harish Kalyan made his debut with the movie 'Sindhu Samaveli' and became famous by Biggboss show. Harish says, 'I want to play in Gautham Menon film. I like Samantha very much. Also I want to work with Anu Emanuel and Regina Cassandra'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X