Don't Miss!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதல் கதைகளில் மட்டுமே நடிக்கும் ஹீரோ என்ற இமேஜை உடைக்கனும்… துல்கர் சல்மான் கலகல பேச்சு !
சென்னை : நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உள்ள, ஹே சினாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து பேட்டி அளித்துள்ள துல்கர் சல்மான், இத்திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படம் மார்ச் 3ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
கவனத்தை
ஈர்த்த
ப்ரோ
டாடி
படத்தின்
மேக்கிங்
வீடியோ...
எல்லாரும்
எவ்ளோ
ஜாலியா
இருக்காங்க
பாருங்க!

ஹே சினாமிகா
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ஹே சினாமிகா திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மார்ச் 3ந்தேதி ரிலீஸ்
இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 16-ந் தேதி வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பிருந்தா மாஸ்டர் எனது குரு
இத்திரைப்படம் குறித்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டிஅளித்துள்ள துல்கர் சல்மான், பிருந்தா மாஸ்டர் என்னுடைய பல படங்களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். அவர், என்னுடைய குரு, அவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தில் நான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால், இந்த படத்திற்கு பல மெனக்கெடல்களை செய்திருக்கிறேன் படம் எனக்கு பிடித்து இருக்கிறது. படத்தை பார்த்து எப்படி இருக்கு என்று நீங்களே சொல்லுங்கள்.

அந்த இமேஜை உடைக்க வேண்டும்
எனக்கு வரும் படங்கள் எல்லாம் ரொமான்ஸ் படமாகத்தான் வருகிறது. காதல் கதைகளில் மட்டுமே நடிக்கும் கதாநாயகன் என்ற இமேஜை உடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், கதை நன்றாக இருப்பதால் காதல் படங்களை தவிர்க்க முடிவில்லை. இருந்தாலும், எனக்கு த்ரில்லர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதேபோல, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் திரைப்படங்களை ரசித்து பார்ப்பேன். அவர்களில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று துல்கர் சல்மான் கூறினார்.