twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரீமிக்ஸ் செய்வது குற்றச் செயலாகும்-குல்ஸார்

    By Sudha
    |

    மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாறிக் கொள்வது அவசியம். அதேசமயம், பழமையான, பெருமை மிகுந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் அதைக் கெடுப்பதும், அதன் புகழைக் குலைப்பதும் ஒரு குற்றச் செயல் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் குல்ஸார்.

    ஆஸ்கர் விருது பெற்றவரும், சாகாவாரம் படைத்த பல பாடல்களை இயற்றிவருமான 74 வயதான குல்ஸார், கஜாராரே உள்ளிட்ட பாடல்களையும் எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், காலத்திற்கேற்ப மாறுவதில் தவறில்லை. நானும் அப்படித்தான். எனது சமீபத்திய பாடல்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

    அதேசமயம், கடந்து போன காலத்தை மாற்ற நான் முயிற்சிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்க வேண்டும். ரீமிக்ஸ்செய்கிறோம் என்ற போர்வையில் அதை குலைப்பதும், அழிப்பதும், சிதைப்பதும் ஒரு குற்றச் செயலாகவே நான் கருதுகிறேன்.

    நான் ஒருபோதும் எனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில்லை. இப்போதெல்லாம் டான்ஸுக்கு ஏற்ற பாடல்களைத்தான் விரும்புகிறார்கள். திரையுலக வரலாறை இப்போதைய தலைமுறையினர் அழித்து வருகின்றனர்.

    வெறுமனே டான்ஸ் ஆட ஒரு ட்யூன், ஒரு பாடல் இக்காலத்தவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதனால் பழைய பாடல்களை தங்களது இஷ்டத்திற்கு மாற்றி உருவாக்க முயன்று அதை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

    அஜந்தா, எல்லோராவில் உள்ள ஓவியங்களைப் பார்த்து மறுபடியும் வரைவது போலத்தான் இந்த ரீமிக்ஸ். ஒரிஜினல் எப்போதுமே ஒரிஜினல்தான். அதை மாற்ற முடியாது. மறுபடியும் உருவாக்க முடியாது என்றார் குல்ஸார்.

    English summary
    His shift towards songs like 'Beedi' and 'Kajrare' raised many eyebrows and Oscar-winning lyricist Gulzar says it is a reflection of changing times.
 But the 74-year-old song-writer is completely against one trend, that of remixing old songs, and he is not ready to listen to the excuse of changing times here. Gulzar feels that it is a crime against the cinematic history of India. "I am against remixing. The songs are now used only to dance. Who are you to temper with someone else's creation. I blame the present generation for destroying cinematic history. It is like repainting Ajanta and Ellora. They don't need a song to listen, they want to dance on the tunes and thus wreck havoc on the old songs", he said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X