twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நான் ஆசைப்பட்டு பண்ணின ரொமான்டிக் காமெடி, ஓ மை கடவுளே...' ஹீரோ அசோக் செல்வன் ஆஹா தகவல்

    By
    |

    சென்னை: 'சினிமாவுல நிறைய பணம் சம்பாதிக்கணுங்கற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. நல்ல கதைகள்ல நடிக்கணும். வித்தியாசமன கேரக்டர்கள் பண்ணணும், இதுதான் எனக்கு ஆசை. இப்ப காதல் கதைகள் அதிகம் வர்றதில்லை. அதனால் இந்தப்படம் பண்ணலாம்னு தோணுச்சு. எனக்கு பிடிச்சு, ஆசைப்பட்டு பண்ணின படம் இது என்கிறார் நடிகர் அசோக் செல்வன். அவர் ஆசைப்பட்டுப் பண்ணிய அந்தப் படம், 'ஓ மை கடவுளே'.

    அசோக் செல்வன் ஜோடியாக, ரித்திகா சிங் நடிக்கிறார். வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

    விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருக்கிறார். அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி படத்தை வெளியிடுகிறது. படம் பற்றி அசோக்செல்வனிடம் பேசினோம்.

    என்ன மாதிரியான கதை?

    என்ன மாதிரியான கதை?

    காதல் கதைதான். திரைக்கதை புதுசா இருக்கும். நிறைய காதல் கதைகளை பார்த்திருப்போம். அதுல இருந்து இது வித்தியாசமானதா இருக்கும். காதல் கதைகளுக்கு தமிழ் சினிமால எப்பவுமே வரவேற்பு இருக்கும். இன்றைய மாடர்ன் காதல், கல்யாணத்தை பேசற படம்ங்கறதால, இந்தப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும்னு நம்பறேன்.

     ரித்திகா சென் எப்படி படத்துக்குள்ள வந்தார்?

    ரித்திகா சென் எப்படி படத்துக்குள்ள வந்தார்?

    நிறைய ஹீரோயின்கள் காதல் கதைகள் பண்ணியிருக்காங்க. அப்படி யாரும் இல்லாத பிரெஷ்சான ஒரு முகம் தேவைப்பட்டது. அதுக்கு ரித்திகா பொருத்தமா இருந்தாங்க. இறுதிச்சுற்று படத்துல அவங்க நடிப்பு எல்லோருக்குமே பிடிச்சிருக்கும். எங்களுக்கும் அது மைன்ட்ல இருந்தது. அதனால அவரை நடிக்க கேட்டோம். சம்மதிச்சார்.

     விஜய் சேதுபதியை கடவுளாக்கிட்டீங்க?

    விஜய் சேதுபதியை கடவுளாக்கிட்டீங்க?

    கடவுள்னா, தலையில கிரீடம் வச்சுகிட்டு புராண படங்கள்ல வர்ற மாதிரின்னு நினைச்சுடாதீங்க. இயல்பாதான் இருப்பார். ஆனா, அவர் கடவுள். அவரோட அசிஸ்டென்ட்டா ரமேஷ் திலக் வருவார். சூது கவ்வும் படத்தில் இருந்தே விஜய் சேதுபதி அண்ணா பழக்கம். நான் நல்லா வரணும்னு நினைக்கிறவங்கள்ல அவரும் ஒருவர். கதையே கேட்காம நடிக்க சம்மதிச்சார்.

    இயக்குனர் அஷ்வத் உங்க நண்பராமே?

    இயக்குனர் அஷ்வத் உங்க நண்பராமே?

    ஆமா. நாங்க குறும்படத்துல ஒர்க் பண்ணியிருக்கோம். 9 வருஷமா ரெண்டு பேரும் ஒண்ணாவே டிராவல் பண்ணிட்டிருக்கோம். என்னை எப்படி காண்பிக்கணும்னு அவனுக்குத் தெரியும். அந்தளவுக்கு அவனை முழுமையா நம்புகிறேன். லியான் ஜேம்ஸ் இசை அமைச்சிருக்கார். ராட்சசன் தயாரிப்பாளர் தில்லிபாபு சார் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்ததுல எங்களுக்கு பெருமை. வரும் 14 ஆம் தேதி படம் ரிலீஸ். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்

    English summary
    Actor Ashok Selvan said, 'I am sure Oh My Kadavule will be an engaging Rom-Com and audiences will walk out of theatres with smile on their faces”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X