»   »  கமல் மனதில் இன்னும் இருக்கிறாரோ மீனா...?

கமல் மனதில் இன்னும் இருக்கிறாரோ மீனா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் டிப்ளமேட்டிக்காக இருந்தது என்றாலும் கூட அதன் விடையை ஊகிக்க முடிந்தது - எளிதாகவே.

பாபநாசம் என்ற பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ள கமல்ஹாசன் மற்றும் படக் குழுவினர் சமீபத்தி்ல் வெற்றிக் கொண்டாட்டமாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.


வித்தியாசமான செட் போட்டு நடந்தது இந்த செய்தியாளர் சந்திப்பு. அந்த சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வி இது.


மீனா

மீனா

"மலையாளத்தில் வெளிவந்த திரிஷ்யத்திலும் மீனாதான் நாயகி. தெலுங்கிலும் அவரே நாயகி. ஆனால் தமிழில் மட்டும் அவர் நடிக்கவில்லை. மாறாக கெளதமி நடித்திருந்தார்.


யார் பெஸ்ட்

யார் பெஸ்ட்

இவர்களில் யார் சரியாக நடித்திருந்தார் என்று கேட்டபோது சாதாரண நடிகர்களுக்கே டிப்ளமேட்டிக்காகத்தான் பதில் சொல்ல தோன்றும்.


மீனா முகத்தைத் திருப்பிக் கொள்வாரே

மீனா முகத்தைத் திருப்பிக் கொள்வாரே

கமலும் அதேபோலத்தான் கூறினார். ஆனாலும் கூட மறைமுகமாக மீனாவையே பிடிக்கும் என்று அவர் கூறியதாகவே அவரது பதில் தெரிந்தது. "மீனாவைப் பிடிக்காது என்றால் அவர் முகத்தைத் திருப்பிக் கொள்வார்.


கெளதமியை சமாதானப்படுத்தி விடலாம்

கெளதமியை சமாதானப்படுத்தி விடலாம்

கெளதமியிடம் பிரச்சினை இல்லை. இவரை தினசரி பார்க்கிறேன். சமாதானப்படுத்தி விட முடியும். ஆனால் மீனாவை சமாதானப்படுத்த முடியாது" என்றார் கமல்.


மீனாதான் பெஸ்ட்

மீனாதான் பெஸ்ட்

கமல்ஹாசனின் இந்தப் பதிலில் தெரித்த சாராம்சம் மீனாதான் சிறப்பாக நடித்திருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாம். கமல்ஹாசனுக்கு உண்மையிலேயே மிகவும் நடித்த நடிகைகளில் மீனாவுக்கும் முக்கிய இடம் உண்டு.


அவ்வை சண்முகி

அவ்வை சண்முகி

அவ்வை சண்முகியில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பில் கலக்கியிருப்பார்கள். அதிலும் கமல்ஹாசனோடு சரியாக மல்லுக்கட்டியிருப்பார் மீனா.


பத்து படத்துக்கு சமம்

பத்து படத்துக்கு சமம்

இருவரும் இணைந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. முழுமையாக ஜோடி போட்டது அவ்வை சண்முகி மட்டுமே. ஆனால் பத்துப் படங்களுக்கு இணையான நடிப்பை இருவரும் அதில் கொட்டிருப்பார்கள். தெனாலியில் ஒரு ஸ்பெஷல் வேடம்.


அடுத்த படத்திற்கு ஜோடி போடலாம்

அடுத்த படத்திற்கு ஜோடி போடலாம்

மீனாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டே அவரை சமாதானப்படுத்துவது கடினம் என்று கமல் சொல்லியிருப்பார் போல. இப்போது என்ன, அடுத்த படத்தில் இணைந்து விட்டால் போகிறது...!


English summary
Kamal Haasan has indirectly said that Meena has acted well than Gowthami in Drishyam. Gowthami enacted the role of Meena in Tamil remake Papanasam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil