»   »  அரசியலுக்கு ஷாருக் ஸாரி!

அரசியலுக்கு ஷாருக் ஸாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil


நான் அழகில் மன்மதன், சுயநலம் படைத்தவன். அதனால் அரசியலை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கூறியுள்ளார்.

Click here for more images

டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் ஷாருக் கான் கலந்து கொண்டார். அவரிடம் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும், செய்தியாளர்களிடம் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தனர். அத்தனைக்கும் அசராமல் பதிலளித்தார் ஷாருக்.

அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஷாருக் பதிலளிக்கையில், ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை தலைமை தாங்கி, அதனை வழி நடத்திச் செல்ல பொதுமக்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உணர்வு இருக்க வேண்டும். ஆனால் அது என்னிடம் இல்லை.

அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் முதலில் அந்த எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது. எனக்கு அந்த எண்ணம் இல்லை.

மேலும் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தெரியாத துறைக்கு போக நான் விரும்பவே மாட்டேன்.

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி, விண்வெளி வீரராவீர்களா, என்ஜீனியர் ஆவீர்களா என்று கேட்கும் கேள்வியைப் போலத்தான் நான் பார்க்கிறேன்.

என்னைப் பொருத்தவரை எனது மனதில் நடிப்பும், சினிமாவும் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படி எப்படி வித்தியாசமாக நடிக்கலாம் என்றுதான் நான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அதை விட முக்கியமாக, நான் ரொம்பவும் அழகாக இருக்கிறேன். எனவே என்னால் அரசியலில் குதிக்க முடியாது என்றார்.

சினிமா விளம்பரங்களில் அழகான உடல் கட்டுடன் நீங்கள் இருப்பது போல வருகிறதே, அது உண்மையிலேயே உங்கள் உடல்தானா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஒருவர் கேட்டார்.

இதைக் கேட்டதும் ஷாருக், இக்கேள்வியை ஒரு பெண் கேட்டிருந்தால் டக்கெடன எனது சட்டையைக் கழற்றிக் காட்டியிருப்பேன். ஆனால் அதற்கு வழியில்லாமல் பண்ணி விட்டீர்களே என்று தனது ஸ்டைலில் பதிலளிக்க கூடியிருந்த அத்தனை பேரும் குலுங்க குலுங்க சிரித்தனர்.

இந்தக் கூட்டத்தில், பிரியங்கா காந்தியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: hindustan times shahrukhkhan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil