twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு.. உடனே எழுதிட்டேன்.. காலங்களில் அவள் வசந்தம் படக்குழுவினர் கலகலப்பு!

    |

    சென்னை: அறம் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் அறிமுக நடிகர் கௌசிக் ராம், நடிகை அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.

    அனந்தம் திரைப்படத்தில் டயலாக் ரைட்டராக பணியாற்றிய ராகவ் மிர்தத், இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் இயக்குநர் ராகவ் மிர்தத், நடிகை ஹிரோஷினி ஆகியோர் நமது ஃபிலிம் பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்

    கீர்த்தி சுரேஷா? சமந்தாவா? ’அறம் 2’வில் யார் ஹீரோயின்.. இயக்குநர் கோபி நயினார் விளக்கம்!கீர்த்தி சுரேஷா? சமந்தாவா? ’அறம் 2’வில் யார் ஹீரோயின்.. இயக்குநர் கோபி நயினார் விளக்கம்!

    வாய்ப்பை தவற விடக்கூடாது

    வாய்ப்பை தவற விடக்கூடாது

    கேள்வி: ராகவ் மிர்தத், காலங்களின் அவள் வசந்தம் என்கிற தலைப்பு மிக அருமையாக உள்ளது. இதை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?

    பதில்: நான் டயலாக் ரைட்டராக இருந்து இந்த படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளேன். முதலில் எனக்கு ஹாரர், த்ரில்லர் படங்கள் இயக்குவதில் தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் ஒரு தயாரிப்பாளர் காதல் கதை இருந்தால் படம் பண்ணலாம் என்று கூறினார். அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த கதையை தயார் செய்தேன். கதையை எஸ்.கே.ஆர்டிஸ்ட் தயாரிப்பாளர் மதனிடம் கூறியபோது, நன்றாக இருக்கிறது படம் செய்யலாம் என்றார். படத்தின் தலைப்பை மதனின் நண்பர் ஜேம்ஸ் தான் வைத்தார்.

    காதல் குறித்த படம்

    காதல் குறித்த படம்

    கேள்வி: இப்படத்தில் உங்களை கவர்ந்த கதாபாத்திரம் எது?

    பதில்: எல்லோரும் காதல் குறித்த நிறைய படங்களில் சொல்லி விட்டார்கள். நிறைய பெரிய இயக்குநர்கள் அற்புதமான காதல் படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய காதல் குறித்து படம் எடுப்போம் என்று கருதினேன். இந்த படத்தில் வருகின்ற ராதை என்கிற கதாபாத்திரம் மாதிரி பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. அந்த கதாபாத்திரம் மிகவும் நன்றாக வந்துள்ளது. உண்மையில் இந்த படத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ராதை தான்.

    துடிப்பான பெண்

    துடிப்பான பெண்

    கேள்வி: நடிகை ஹிரோஷினிக்கு முத்தக்காட்சிகளில் நடித்துள்ளரா?

    பதில்: நடிகை ஹிரோஷினி ரொம்ப துடிப்பான பெண்ணாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் வரக்கூடிய காட்சிகள் ரொம்ப அழகாக இருக்கும். அதிலும் படத்தில் வரக்கூடிய லிப்ட் காட்சிகள் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கும். படத்தில் ஹிரோஷினிக்கு முத்தக்காட்சிகள் கிடையாது. ஏனெனில் கதைக்கு அது தேவைப்படவில்லை. நடிகை அஞ்சலி நாயர் கதைப்படி கதாநாயகனின் மனைவி என்பதால் முத்தக்காட்சிகள் தேவைப்பட்டது என்றார்.

    படத்தில் ஐந்து சீசன்

    படத்தில் ஐந்து சீசன்

    கேள்வி: உங்களுக்கு இப்படத்தில் பிடித்த வசனம் எது?

    பதில்: படத்தில் நிறைய வசனங்கள் நன்றாக வந்துள்ளது. அதில் எனக்குப் பிடித்த வசனம் ‘பட்டாம் பூச்சி சுதந்திரமாக பறக்கும் போதுதான் அழகு, அதை கூண்டில் அடைத்தால் அதை ரசிக்க முடியாது என்பது தான். மேலும் அவர் கூறுகையில், இந்தப் படத்தில் நாலு சீசன்ஸ் வருகின்ற மாதிரி தான் கதை அமைத்திருந்தோம். ஆனால் கோடை காலத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது மழை வந்ததால், கோடை மழைக்காலம் என்று ஒரு சீசன் சேர்ந்திருக்கிறோம் என்றார்.

    இளைஞர்களுக்கு பிடிக்கும்

    இளைஞர்களுக்கு பிடிக்கும்

    கேள்வி: நடிகை ஹிரோஷினி, காலங்களில் அவள் வசந்தம் படத்தில் நடித்தது குறித்து...

    பதில்: இயக்குநர் படத்தின் குறித்து கூறும்போது, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வருகின்ற நடிகை ஜெனிலியா கேரக்டர் மாதிரி என்றார். அவர்களை இமிடேட் பண்ணாத மாதிரி தான் நடித்திருக்கிறேன். அனு என்கிற கதாபாத்திரம் ரொம்ப கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கூடுதலாகவோ, ரொம்ப குறைவாகவோ இல்லாமல் நடுநிலையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நிறைய ஹாரர், த்ரில்லர் படம் வருகின்ற இந்த காலகட்டத்தில் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இளைஞர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். காதல் என்பது ஒரு இயற்கை உணர்வு, அதை திரைக்கதையாக சொல்கிற விதத்தில் தான் இந்த படத்தின் சிறப்பு. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/BhTMffmoiFA இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Produced by Aram Entertainment and directed by Raghav Mirdhat, Debutant Kaushik Ram, Actress Anjali Nair and Hiroshini are playing the lead roles in the film Kaalangalil Aval Vasantham. Raghav Mirdhat, who worked as a dialogue writer in the film Anantham, has taken the directorial avatar through this film. Here you can see the special interview given by director Raghav Mirdhat and actress Hiroshini to our Filmibeat channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X