twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படத்தில் பஹத்ஃபாசிலுடன் சூப்பர் பாட்டு இருந்துச்சு...ஆனா தூக்கிட்டாங்க காயத்ரி வருத்தம்

    |

    சென்னை: விக்ரம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நான்கு மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளேன் என்று விக்ரம் படத்தில் நடித்த நடிகை காயத்ரி சங்கர் தெரிவித்தார்.

    விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" திரைப்படத்தில் இன்றளவும் "ப்பா" என்ற வசனம் மறக்க முடியாது. இதனை தொடர்ந்து , மாமனிதன் மற்றும் சில பெயரிடாத படங்களிலும் காயத்ரி சங்கர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி சங்கர் நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    சத்தமே இல்லாமல் நடக்கும் சம்பவம்.. பாஸ் நடிகரை தொடர்ந்து உச்சத்துக்கும் கதை ரெடி பண்ணும் இயக்குநர்!சத்தமே இல்லாமல் நடக்கும் சம்பவம்.. பாஸ் நடிகரை தொடர்ந்து உச்சத்துக்கும் கதை ரெடி பண்ணும் இயக்குநர்!

    என் பெயர் பிடிக்கவில்லை

    என் பெயர் பிடிக்கவில்லை

    கேள்வி: காயத்ரி சங்கர் என்பது உங்களது புனைப்பெயரா? சொந்தப்பெயரா?

    பதில்: காயத்ரி சங்கர் என்ற எனது பெயரை சிறுவயதிலிருந்தே எனக்கு பிடிக்காது. பெயரை மாற்ற வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. நான் சினிமாத்துறைக்கு வந்தபோது, எனது முதல்படத்தில் அஸ்ட்ராலஜி பார்த்து எனக்கு வேதா என்று பெயர் வைத்தனர். சிலர் என்னை வேதா என்று அழைக்கும்போது கூட நான் திரும்பியதில்லை. அதனால் சொந்தப்பெயரே எனக்கு நிலைத்து விட்டது.

    பிறவிப்பலன்

    பிறவிப்பலன்

    கேள்வி: கேள்வி: உங்களது சினிமாப்பயணம் குறித்து நீங்கள் ரீவைண்டு செய்ய விரும்புவது?

    பதில்: நான் +2 முடித்து விட்டு சினிமாத்துறைக்கு வந்தேன். 10வருடம் ஆனது தெரியவில்லை. சினிமாவிலேயே வாழ்ந்து விட்டேன். நான் நடித்த ரம்மி, பொன்மாலை பொழுது, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் ஆடியோவை நடிகர் கமலஹாசன் தான் வெளியிட்டார். கமலஹாசனுடன் நடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். விக்ரம் படத்தில் காம்பினேஷன் அமையவில்லை. அவருடன் நான் நடித்து விட்டால் நடிகை என்ற பிறவிப்பலனை அடைந்து விட்டதாக கருதுவேன் . மேலும் விக்ரம் படத்தில் அவருடன் நான் நடிக்கவில்லை. ஏனென்றால் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் ஷூட்டிங் நடந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஷூட்டிங் நடைபெற்றது. யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. விக்ரம் படத்தில் மாநகரம் ஸ்டைல் காட்சிகள் போன்ற கதாபாத்திரங்கள் அமையப்பெற்றிருக்கும் என்றார்.

    பாடல் காட்சி நீக்கம்

    பாடல் காட்சி நீக்கம்

    கேள்வி: விக்ரம் படத்தில் உங்களுக்கும் & பகத்பாசிலுக்கும் இடையேயான பாடல் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து கூற விரும்புவது?

    பதில்: எனக்கும் பகத்பாசிலுக்கும் ஒரு பாடல் காட்சி இருந்தது. படத்தின் டூரெஷன் காரணமாக ,மற்றும் தவிர்க்க முடியாத சில பல காரணத்தினால் இந்த பாடல் காட்சி நீக்கப்பட்டு விட்டது. நீக்கப்பட்ட பாடல்கள் யூடிப்பில் வருவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. சாண்டி மாஸ்டருடன் இணைந்து முதன்முறையாக இப்படத்தில் பணியாற்றினேன். இதற்கு முன்பு விருது வழங்கும் விழா ஒன்றில் பணிபுரிந்துள்ளேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்த சிட்டிவேஷனில் இந்த மாதிரி பாடல் வந்தா நல்ல இருக்கும் என்று நாம் எல்லோரும் நினைப்போம். ஆனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நினைப்பது வேறொரு தளம். அதற்கு எதிராகவே சிந்திப்பார். இந்த சிட்டிவேஷனில் வேறு ஒரு மாதிரி பாடல் வேண்டும் என்பார். லோகேஷ் கனகராஜ் கிட்ட கூட நல்ல பெயர் வாங்கி விடலாம். ஆனால் அவரது அசோசியேட் இயக்குநர் சத்யாவிடம் வாங்குவது கஷ்டம் . விக்ரம் படத்தில் நான் பேசும் வசனம் தான் படத்திற்கு திருப்பு முனையாக அமையும். விக்ரம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நானே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் பேசியுள்ளேன். எனக்கும் பகத்பாசிலுக்கும் ஒரு பாடல் காட்சி இருந்தும் படத்தில் வரவில்லை என்பது மிகுந்த வருத்தமே இருந்தாலும் மனதை தேற்றி கொண்டே ஆக வேண்டும் .

    கனவுப்படம் எது?

    கனவுப்படம் எது?

    கேள்வி: மாமனிதன் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன் திரைப்படமானது எனது கனவுப்படம். இப்படத்திற்கு இளையராஜா & யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள். இளையராஜா இசையில் நடிப்பது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றார்.

    கேள்வி: உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது?

    பதில்: எனக்கு பிடித்தப்படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தேன். அப்படத்தை இயக்கிய ரத்தீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.இனி வரும் இயக்குநர்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நிறைய அழுகை சீன்களில் நடித்து விட்டேன். இனிமேல் அது போன்ற சீன்கள் வேண்டாம் என்பதே.

    பத்தினி குறும்படம்

    பத்தினி குறும்படம்

    கேள்வி: நீங்கள் நடித்த குறும்படம் குறித்து கூற விரும்புவது?

    பதில்: நான் நடித்த பத்தினி குறும்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகை என்பதற்கு அடுத்து புரோமோஷன் இயக்குநர் தான் என்று கிடையாது. நான் ஒரு குறும்படத்தை இயக்கும்போது, சிலர் என்னை பற்றி கூறுகையில், இயக்குநராக ஆன பிறகு உனக்கு நன்றாக நடிப்பு வருவதாக கூறினர் .ஐந்து நிமிடத்தில் ஒரு கதையை என்னால் குறும்படத்தில் சொல்ல முடியும் என்றால் நான் எதற்கு 3 மணி நேர சினிமாவை எடுக்க வேண்டும். பொதுவாக நான் ஒரு சோம்பேறி . சோ இப்போதைக்கு நடிப்பு மட்டுமே அதிக ஆர்வம் இயக்கம் இல்லை .

    மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும்

    மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும்

    கேள்வி: உங்களது ஆசை என்ன?

    பதில்: பஹீரா படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்துள்ளேன். நாயகியை தாண்டி எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமையும்போது கண்டிப்பாக நான் செய்வேன். அது போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தை பஹீரா படத்தில் ஏற்று நடித்துள்ளேன். இப்படி கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதே எனது ஆசை.

    கேள்வி: உங்களை அழகாக காட்டிய கேமராமேன் யார்?

    பதில்: மலையாளப்படம் ஒன்றில் நடிக்கும்பொழுது மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும் என்றனர். எப்படி வரப்போகிறதோ என்று பயந்தேன். ஆனால் அப்படத்தின் கேமராமேன் ராகேஷ் ஹரிதாஸ் என்னை அழகா காட்டினார். விக்ரம் படத்திலும் கேமராமேன் என்னை அழகாக காட்டியுள்ளார் .அது மட்டும் இல்லாமல் விக்ரம் படத்தில் நாங்கள் எல்லாம் டென்ஷன் இல்லாமல் நடிப்பதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் மகேந்திரன் & ஸ்பெஷல் மேற்வர்வை செய்த டிஸ்னி மட்டுமே என்றார் காயத்ரி .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/Jt2ahqNjWJM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், நடிகை காயத்ரி சங்கர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    I Had a Duet with Fahadh Faasil but removed from vikram movie Says Actress Gayathri
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X