twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்! - சொல்கிறார் எஸ்பிபி மகன்

    By Shankar
    |

    SPB Charan and Sona
    சென்னை: மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் என்மீது சோனா பொய் புகார் கொடுத்துள்ளார், என தனது முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

    'மங்காத்தா' படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன் மேல் பாய்ந்த தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், ஆடைகளைக் களைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த புகாரில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் எஸ்பிபி சரண் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான்.

    'மங்காத்தா' படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

    நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார்.

    சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.

    அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.

    அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. என்னை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் தவறு செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    இன்று விசாரணை

    இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கஜிதா தீனதயாளன் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.

    அதைத்தொடர்ந்து விசாரணையை 20-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.

    சோனாவின் புகார் வீடியோ

    English summary
    In his anticipatory bail petition SPB Charan told that he was not abused Sona, but warned her not to tempting others sexually. The petition has been postponed and the public prosecutor will be filed the reply petition today in the court for Sona.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X