»   »  மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நான்... இப்படிக்கு "இசை" சாவித்ரி!

மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நான்... இப்படிக்கு "இசை" சாவித்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை படத்தில் ஜெனிபராக நடித்து தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சாவித்ரி.

இந்தியில் சுலக்னா என்ற பெயரில் இம்ரான் ஹாஸ்மியோடு மர்டர் 2 படத்தில் நடித்தவரை, தமிழில் சாவித்ரி என்ற பெயரில் தனது இசை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படத்தில் சாவித்ரியின் நடிப்பைப் போலவே அவரது கிளாமரும் பேசப்பட்டது. இந்நிலையில் வார இதழ் ஒன்றிற்கு தனது கிளாமர் நடிப்பு குறித்து மனம் திறந்துள்ளார் சாவித்ரி. அதில் அவர் கூறியிருப்பதாவது :-

கிளாமரும் ஒரு அங்கம் தான்...

கிளாமரும் ஒரு அங்கம் தான்...

நடிப்புல கிளாமரும் ஒரு அங்கம் தான். அதுமட்டுமில்லாம கதைக்கு அது முக்கியமா இருந்ததால நான் பண்ணினேன்.

ஓகே தான்...

ஓகே தான்...

முதல் பாதி கதையில கிளாமரா நடிச்சது தான், இரண்டாம் பாதி கதையை ஜட்ஜ் பண்ண உதவிச்சு. அதனால அது ஓகே தான்.

மெல்லிய கோடு...

மெல்லிய கோடு...

எல்லை தாண்டி ஏதும் பண்ணலையே. நானும் வச்சிருக்கேன் ஒரு மெல்லிய கோடு. அந்த மெல்லிய கோட்டை தாண்டாமல் தான் நடிச்சிருக்கேன்.

சவாலான கேரக்டர்கள்...

சவாலான கேரக்டர்கள்...

இசை மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்புக்கு சவாலான கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன்.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

முதல்படம் எவ்வளவு முக்கியமோ அதே போல இரண்டாவது படமும் முக்கியம் தான். அதனால நல்ல கதைகளை எதிர்பார்க்கிறேன்.

முடிவு பண்ணவில்லை...

முடிவு பண்ணவில்லை...

தமிழ்ல சில கதைகள் வந்திருக்கு. இன்னும் முடிவு பண்ணலை' என்கிறார் சாவித்ரி.

சாவித்ரி தான்...

சாவித்ரி தான்...

இந்தியில் தொடர்ந்து சுலக்னா என்ற பெயரில் நடித்தாலும், தமிழில் சாவித்ரி என்ற பெயரையே தொடரப் போகிறாராம் இவர்.

English summary
The Isai film heroine Savitri has said that she is very clear in glamour roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil