»   »  என் 'வீக்னஸ்' எனக்கு நல்லாவே தெரியும்: தனுஷ்

என் 'வீக்னஸ்' எனக்கு நல்லாவே தெரியும்: தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் வீக்னஸ் எனக்கு தெரியும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள விஐபி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தனுஷ். விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை கஜோலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சினிமா பற்றி தனுஷ் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிரபாஸ்

பிரபாஸ்

என்னால் பிரபாஸை போன்று எடையை ஏற்ற முடியாது. என் பலமும், பலவீனமும் எனக்கு நன்றாக தெரியும். நான் சாதாரண ஆட்கள் போன்று இருப்பதே என் பலம்.

பிரதிநிதி

பிரதிநிதி

சாலையில் செல்லும்போது என்னை போன்ற உடல்வாகுடன் பல ஆண்களை பார்க்க முடியும். நான் அவர்களின் பிரதிநிதியாக இருக்கவே விரும்புகிறேன்.

இந்தி

இந்தி

நான் பார்ப்பதற்கு இந்தி நடிகர்கள் போன்று இல்லை. அதனால் பாலிவுட் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ள காலம் ஆகும். நல்ல கதாபாத்திரம் உள்ள இந்தி படத்திற்காக காத்திருக்கிறேன்.

இயக்கம்

இயக்கம்

ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்த பிறகு பாலிவுட் திரையுலகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்தி படத்தை இயக்கவும் ஆவலாக உள்ளேன் என்றார் தனுஷ்.

English summary
Dhanush said that he knows his plus and minus. He added that he is looking forward to direct hindi movies also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil