Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Exclusive : சூர்யா, விஜய்யை நினைத்து பெருமைப்படுகிறேன்: நடிகை சாந்தி கிருஷ்ணா மகிழ்ச்சி

சென்னை: விஜய் மற்றும் சூர்யாவின் இந்த வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவதாக நடிகை சாந்தி கிருஷ்ணா கூறியுள்ளார்.
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, மணல்கயிறு, சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட படங்களில் நடித்து 1980களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உலா வந்தவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த அவர், பின்னர் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து கேரளாவிலேயே செட்டிலாகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் சூர்யாவின் அக்காவாகவும், விஜய்யின் அண்ணியாகவும் அவர் நடித்திருப்பார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு கிரிஷ்ணம் படம் மூலம் அவர் தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார். பட புரோமோஷனுக்காக சென்னை வந்திருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். நம்மிடம் அவர் கூறியதாவது,
ராஜமவுலிக்கே 'நோ' சொன்ன வாரிசு நடிகை: காரணம்...

தமிழ் படங்கள் ஸ்பெஷல்:
"தமிழ் படங்கள் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். இன்றளவும் எனக்கு பெரிய அடையாளமாக இருப்பது பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் தான். அதனால் தமிழ் சினிமாவில் இருந்து நான் எப்போதும் விலகி இருந்தது இல்லை. தற்செயலாக தான் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. இதோ மீண்டும் வந்துவிட்டேன்.

கிரிஷ்ணம் படம்:
கிரிஷ்ணம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இது ஒரு ஜாலியான, அதேசமயம் உணர்வுப்பூர்வமான படம். முதல் பாதி முழுவதும் ஜாலியாக இருக்கும். இரண்டாம் பாதியில், அப்பா - அம்மா - மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் கதை. இந்த படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

இளைய தலைமுறை:
மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நிவின் பாலி, பகத்பாசில் என இளைய தலைமுறை நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. முன்பு நாங்கள் நடிக்கும் போது, இயக்குனர் அருகிலேயே இருப்பார். அதனால் பயத்துடனே நடிப்போம்.

பயபக்தி:
ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், இயக்குனர் எங்கோ அமர்ந்துகொண்டு ஆக்ஷன் சொல்கிறார். இப்போது விட, அப்போதைய சினிமா தான் எனக்கு பிடித்திருக்கிறது. அதில் தான் பயபக்தியுடன் வேலை செய்தோம்.

சூர்யாவின் வளர்ச்சி:
நேருக்கு நேர் தான் சூர்யாவின் முதல் படம். அதில் நான் அவருக்கு அக்காவாக நடித்தேன். விஜய், ரகுவரன் என அவர்களுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நான் அப்போது பார்த்த சூர்யா, இப்போது நிறைய வளர்ந்துவிட்டார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.
வில்லினாலும் ஓகே தான்:
நான் டாப் ஹீரோயினாக இருக்கும்போதே சீரியலில் நடித்து விட்டேன். தற்போதும் சீரியல் வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன். அது வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் ஓகே தான்", என்கிறார் சாந்தி கிருஷ்ணா.