For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இயக்குநர் முருகதாஸுக்கு பதிலா எனக்கு போன் வரும் .. பல முறை சிக்கி இருக்கேன்.. ஆடுகளம் முருகதாஸ்!

  |

  சென்னை: ஆடுகளம் படத்தில் தனுஷின் நண்பராக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் முருகதாஸ். அந்த படத்திற்கு பிறகு ஆடுகளம் முருகதாஸ் என்று புகழ்பெற்றார்.

  சினிமாவில் ஏற்படுகின்ற கஷ்டத்தை வெளியே செல்வது அழகல்ல என்று நடிகர் முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  தனது சினிமா அனுபவத்தை பற்றி பல ஸ்வாரஸ்யமான் விஷயங்களை நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

  வெந்து தணிந்தது காடு 2 வருமா? இசைவெளியீட்டுவிழாவில் கௌதம் மேனன் சொன்ன சூப்பர் தகவல்!வெந்து தணிந்தது காடு 2 வருமா? இசைவெளியீட்டுவிழாவில் கௌதம் மேனன் சொன்ன சூப்பர் தகவல்!

  என்னுடைய கடவுள்

  என்னுடைய கடவுள்

  கேள்வி: உங்கள் சினிமா பயணம் குறித்து...

  பதில்: எனது ஊர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். நான் சினிமாத்துறைக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. கில்லி படத்தில் இயக்குநர் தரணி என்னை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் வெற்றிமாறன், ஆடுகளம் படத்தில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இயக்குநர் வெற்றிமாறன் தான் என்னுடைய கடவுள். சினிமாவிற்கு வருவதற்கு முத்துசாமி கூத்துப்பட்டறையில் 7 வருடங்கள் பயிற்சி பெற்றேன் என்றார்.

  அனைத்தும் வெற்றி

  அனைத்தும் வெற்றி

  கேள்வி: உங்களுடன் கூத்துப்பட்டறையில் இருந்தவர்கள் யார்? யார்?

  பதில்: நடிகர் தினேஷ், விமல், விஜய்சேதுபதி ஆகிய அனைவரும் என்னுடைய பேட்ஜ் தான். நடிகர் பசுபதி, ஜார்ஜ் ஆகியோர் எங்களுடைய சீனியர். நடிப்பை யாரும் சொல்லித் தர முடியாது. கதாபாத்திரத்திற்கு உண்மையாக நடித்தால் மட்டுமே, அந்த காட்சிகள் நன்றாக வரும். அப்பொழுது தான் காட்சிகளும் இயல்பாக இருக்கும். நான் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளது என்றார்.

  பயங்கரமான ஆள்

  பயங்கரமான ஆள்

  கேள்வி: O2 படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: O2 படத்தில் நான் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் ரொம்ப திறமையானவர். பயங்கரமான ஆள். இந்த படம் வெற்றி பெறும் என்று ஏற்கனவே தெரிவித்தார். நடிகை நயன்தாரா நடிப்பில் பட்டை கிளப்பி இருப்பார் என்று கூறினார்.

  நோ ஒன்ஸ்மோர்

  நோ ஒன்ஸ்மோர்

  கேள்வி: விசாரணை2 படம் வந்தால் நீங்கள் நடிப்பீர்களா?

  பதில்: விசாரணை படத்தில் வசனம் பேசும்பொழுது யாராவது ஒன்ஸ்மோர் வாங்கி விடக்கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். ஏனென்றால் என்னால் அடி வாங்க முடியவில்லை. என்னை அடி பின்னி எடுத்து விட்டார்கள். விசாரணை2வில் நடிக்க சூழ்நிலை வந்தால் இயக்குநர் காலில் விழுந்து விடுவேன் என்றார் ஜாலியாக.

  அழகல்ல

  அழகல்ல

  கேள்வி: எப்பொழுது விருது வாங்குவீர்கள்?

  பதில்: விருது வாங்கும் அளவிற்கு நான் பெரிய ஆளாக இன்னும் வளரவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இன்னும் நடிக்கவில்லை. நடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நான் முதலில் ரொம்ப கஷ்டப்பட்டோம். இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டிற்கே கஷ்டம். கூத்துப்பட்டறையில் சேர்ந்த பிறகு தான், மூன்று வேளையும் சாப்பாடும், தங்கும் இடமும் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து நடித்து கொண்டே இருக்க வேண்டும். சினிமா என்றாலே கஷ்டம். அந்த கஷ்டத்தை வெளியே சொல்வது அழகல்ல என்றார்.

  சங்கடப்படுத்த விரும்பவில்லை

  சங்கடப்படுத்த விரும்பவில்லை

  கேள்வி: உங்களுடைய நெருங்கிய நண்பர் யார்?

  பதில்: எனக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உள்ளது. ஒரு சிலரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு, மற்றவர்களை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை. இருந்தாலும் நடிகர் விமல் நல்ல நண்பர் என்றார்.

  வாய்ப்பு கொடுங்கள்

  கேள்வி: உங்களுடைய லட்சியம் என்ன?

  பதில்: சில சமயங்களில் இயக்குநர் முருகதாஸ்க்கு வர வேண்டிய போன் கால் எனக்கு வரும். நானும் பேசுவேன். சில நேரங்களில் இந்தியில் கூட போன் வரும். இந்த சமயத்தில் இயக்குநர் முருகதாஸிடம் கேட்டுக் கொள்வது என்றால், நீங்கள் பேச வேண்டிய நிறைய போன் கால்களை நான் பேசியுள்ளேன். அதனால் உங்களது அடுத்த படத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. இனி வரும் படங்களில் வித்தியாசமாக நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/ldBYiuEsYRI இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  I wish to Act in AR Murugadas Direction, Says Aadukalam Murugadas in an Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X