twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய டைரக்டர் படத்தில் வில்லன்,4 மணி நேரத்தில் ஜெய்பூர் ஷூட்டிங், விதார்த் சிறப்பு பேட்டி

    |

    சென்னை : நடிகர்கள் விதார்த், கருணாகரன், லட்சுமி பிரியா, பிரேம், மாசூம் சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவான பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    Recommended Video

    Vidharth, Prem kumar & Masoom Shankar | மாமன்னன் படத்துல Vidharth க்கு முக்கிய Role |Filmibeat Tamil

    வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விதார்த்,மற்றும் போலீஸ் யூனிபார்மில் நடிகர் பிரேம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கான புரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் விதார்த், பிரேம், நடிகை மாசூம் சங்கர் ஆகியோர் நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    ஓடிடி.,க்கு வரும் பீஸ்ட்... எப்போ, எந்த தளத்தில் வருகிறது தெரியுமா ?

    சோஷியல் மீடியா குறித்து விழிப்புணர்வு படம்

    சோஷியல் மீடியா குறித்து விழிப்புணர்வு படம்

    கேள்வி: பயணிகள் கவனிக்கவும் படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?

    பதில்: இது குறித்து நடிகர் விதார்த் கூறுகையில், பயணிகள் கவனிக்கவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமானது, நான் சின்ன வயதில் இருக்கும் போது எங்கள் ஊரில் கோவிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் என்ற வாய்பேச முடியாதவரின் கதாபாத்திரம். அவர் எங்களது அப்பாவை பற்றி விசாரிக்கும்பொழுது நான் பிரமிப்பாக பார்ப்பேன். நான் சினிமாவிற்குள் நுழையும்போது, சீனிவாசன் போன்று ஒரு கதாபாத்திரத்தை நாம் செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றியது.

    எனது ஆசை இந்த படத்தில் நிறைவேறி விட்டது.

    எனது ஆசை இந்த படத்தில் நிறைவேறி விட்டது.

    இது ஒரு குடும்பபாங்கான படம். சோஷியல் மீடியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மொபைல்போனை பொறுத்தவரை நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. இதை பற்றி உணராமல் ஏற்படக்கூடிய எதிர்வினையை நாங்கள் படத்தில் காட்டியிருக்கிறோம் என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், நாம் ஸ்கிரிப்ட்டை உள்வாங்கி நடித்தால் போதும். நம்முடன் நடிக்கும் இணை நடிகரும், அவர்களுடைய ரோல் சரியாக பண்ணும்போது அனைத்தும் நன்றாக அமையும். எனக்கு மனைவியாக நடித்த லட்சுமி பிரியா மிக அருமையாக நடித்திருப்பார்கள். கருணாகரன், பிரேம், மாசூம் சங்கர் மற்றும் சின்ன சின்ன கேரக்டர்கள் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். நாங்கள் அனைவரும் சிறப்பாக செய்து வருவதால் தான் எங்களுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.

    பெருமையாக இருந்தது

    பெருமையாக இருந்தது

    கேள்வி:பிரேம், படத்தில் நடித்த விதார்த், லட்சுமிப்ரியா கதாபாத்திரம் குறித்து நீங்கள் கூற விரும்புவது:

    பதில்: நடிகர் விதார்த் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு ரொம்ப பயிற்சி எடுத்துக் கொண்டார். ஷூட்டிங்கின்போது, வாய் பேச முடியாத நிலைமையில் இருந்த இராமகிருஷ்ணன் என்பவரை அழைத்து வந்து பயிற்சி எடுத்தார். அவர்கள் இருவரும் சாதாரணமாக பேசிக் கொள்வதை நான் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருந்தது என்றார்.

    எதிர்வரிசையில் இருப்பவர்கள் நல்ல நடித்தால் மட்டுமே நமது நடிப்பும், காட்சியும் நன்றாக அமையும். அவ்வாறு நடிக்கும்போது போட்டி என்பது ஏற்படாது. இது ஒரு ஆரோக்கியமானது. எதிர்வரிசையில் இருப்பவர் சுமாராக நடித்தால் கூட, நாம் என்னதான் சிறப்பாக நடித்தாலும் நன்றாக வராது. இப்படத்தில் நடிகர் விதார்த், லட்சுமிபிரியா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

    டப்பிங் பேச வாய்ப்பு தரவில்லை

    டப்பிங் பேச வாய்ப்பு தரவில்லை

    கேள்வி:நடிகை மாசூம் சங்கர் உங்களுக்கு யார் டப்பிங் கொடுத்திருக்கிறார்கள்?

    பதில்: நடிகை தமன்னாவிற்கு டப்பிங் கொடுக்கும் பூமா தான் எனக்கும் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் உணர்வுகளை புரிந்து கொண்டு மிக அருமையாக டப்பிங் செய்திருப்பார். நான் இயக்குனரிடம் நான் டப்பிங் பேச முயற்சி செய்கிறேன் என்றேன். இயக்குனர் கூறுகையில், பூமா டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறியதுபோல் மிக அருமையாக வந்துள்ளது என்றார்.

    கேள்வி: நடிகர் பிரேம் உங்களுடைய கதாபாத்திரம் எப்படியிருந்தது?

    பதில்: நான் 10க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எந்தவொரு மிரட்டல் இல்லாமல் நடித்துள்ளேன். சோஷியல் மீடியாவால் பாதிக்கப்பட்டவரும், தெரியாமல் மாட்டிக் கொண்டவருக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்த்து வைக்கும் கதாபாத்திரம். இந்த கதையானது சோஷியல் மீடியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையாகும். எல்லா கேரக்டரும் சின்ன சின்ன பிரச்னைகளை சந்திக்கிறது என்றார்.

    நான்கு மணி நேரம்

    நான்கு மணி நேரம்

    கேள்வி:நடிகர் விதார்த், ஜெய்ப்பூர் ரயில் ஷூட்டிங் எப்படியிருந்தது?

    பதில்: ஜெய்ப்பூரில் ரயிலில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் எதார்த்தமானது அல்ல. ஏனெனில் நாங்கள் அனைவரும் சென்னையிலிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு காலை 5 மணிக்கு சென்றோம். 6 மணிக்கு ஷூட்டிங். ஏனெனில் ரயிலை நான்கு மணி நேரத்திற்கு மட்டும் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதாவது இந்த காட்சிகள் அனைத்தையும் நான்கு மணி நேரத்திற்குள் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தால் எங்கள் அனைவரிடமும் டென்ஷன் தான் இருந்தது. ஆனால் மனதில் டென்ஷன் இருந்தாலும், கூலாக நடித்து முடித்து விட்டு வந்தோம் என்றார்.

    கேள்வி உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை?

    கேள்வி உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை?

    பதில்: இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இருந்தபோதிலும் பகைவனுக்கு அருள்வாய் என்ற பாரதியின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்தது என்றார் நடிகர் விதார்த். ஆரோ...ஆரோ பாடலும் நன்றாக வந்துள்ளதாக நடிகர் பிரேம் கூறினார்.

    குட்டி தமன்னா

    குட்டி தமன்னா

    கேள்வி:மாசூம் சங்கர் உங்களுடைய போட்டோ ஷூட் பெரிதாக பேசப்படுகிறதே? எப்படி?

    பதில்: எனது போட்டோ ஷீட் கூகுளில் டிரெண்ட் ஆனது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. போட்டோ ஷூட் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை இப்படத்தில் சிறப்பாக செய்துள்ளேன். என்னை எல்லோரும் குட்டி தமன்னா என்றழைப்பது சந்தோஷம் என்றார்.

    தனித்துவம் வேண்டும்

    தனித்துவம் வேண்டும்

    கேள்வி: நடிகர் விதார்த் உங்களுடைய ஆசை என்ன?

    பதில்: பயணிகள் கவனிக்கவும் படத்தில் அனைவருடன் இணைந்து மற்றொரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது தான். நான் இதுவரை 27 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளேன். நான் அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்ததை எல்லோரும் பாராட்டினர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கூட 2 வில்லன் கேரக்டர்கள் வந்தது. ஒரே மாதிரியாக அமைந்ததால் நான் வேண்டாம் என்றேன். எந்த ஒரு கேரடக்ரும் தனித்துவமாக அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். பெரிய இயக்குனர் படத்தில் வித்தியாசமாக, பெரிய வில்லனாக விரைவில் நடிப்பேன் என்றார்.

    கூலான இயக்குனர்

    கேள்வி: பிரேம், படத்தின் இயக்குனர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இயக்குனரை பொறுத்தவரை ரொம்ப அமைதியானவர். அவருக்கு என்ன தேவையோ அதை வாங்கிக் கொள்வார். அவர் ஒரு சிறந்த எடிட்டரும் கூட. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும். இயக்குனர் எங்களை டென்ஷனாக்காமல் மிகவும் கூலாக படத்தை முடித்தார். கேமராமேன் பாண்டிகுமார் படத்தை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/cwMIje0SmMI இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர்கள் விதார்த், கருணாகரன், பிரேம், நடிகை மாசூம் சங்கர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..

    English summary
    I would like to Become a Villan in Big Director Movie Says Vidharth in Special interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X