கரூர்ல போன 41 உயிர் திரும்ப வருமா.. விஜய் பக்கத்துல நிக்குறது நானில்லை.. இளவரசு ஓபன் டாக்!
சென்னை: சமீபத்தில் நடிகர் இளவரசு அவர்கள் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், அரசியல் தலைவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்றும், ஒரு தலைமுறை கருத்து என்ற பெயரில் எப்படி அத்துமீறுகிறது என்பதையும் பற்றி வெளிப்படையாக பேசியது பலரையும் கவர்ந்தது. அந்த பேட்டியில் இருந்து சில முக்கிய விஷயங்கள் இங்கே.
சமூக ஊடகங்களில் தன்னை பற்றி வரும் மீம்ஸ்களை பற்றி இளவரசு பேசுகையில், "விஜய்யுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரிகிறதா?" என்று ஒரு மீம் வந்ததை குறிப்பிட்டு, அது ஏசியா ஆனர் சினி சர்வீஸ் லைட்மேன் என்று கூறினார். மேலும், விஜய் பக்கத்தில் நிற்கும் நபர் நானில்லை. விஜய் இருப்பதாலே அங்கே அதை சுற்றி ஒரு வியாபாரம் ஓடுகிறது என வெளிப்படையாக போட்டுடைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் முக்கியம் என்றும், அதே நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதும் சுதந்திரம் தான் என்றார். மேலும், சமூக ஊடகங்களில் யார் யாரையோ தூண்டிவிட்டு காசு சம்பாதிக்கிறார்கள் என்றும், எலக்ட்ரானிக் மீடியா ஒரு பெரிய வணிகமாகிவிட்டது என்றும் கூறினார்.
நடிகர் தனுஷ் பற்றி இளவரசு பேசுகையில், தனுஷ் ஒரு சமூக சாடலோடு எழுதுவதாகவும், அவரின் வசனங்கள் ஒரு உணர்வை மொழி வழியாக வெளிப்படுத்துவதாகவும் கூறினார். குறிப்பாக, 'இட்லி கடை' படத்தில் தனுஷின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.
சினிமாவை தாண்டி சமீபத்தில் கரூரில் நடந்த ஒரு துயரமான சம்பவம் குறித்து இளவரசு தனது கருத்தை பதிவு செய்தார். பகுத்தறிந்து, எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யார் சொல்லியும் மாற வேண்டாம் என்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் பேசியதை மேற்கோள் காட்டி இருந்தார்.

தன்னுடைய அரசியல் சுய அறம் பற்றி பேசிய இளவரசு, "நான் உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கிறது தான் என் சுய அறம் அதுதான் அரசியல்" என்றார். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அது போதும் என்றும், அதுவே ஒரு சமூக அறம் என்றும் அவர் கூறினார்.
கரூரில் உயிரிழந்த 41 பேர் திரும்ப வரப்போகிறார்களா? எனக் கேள்வி எழுப்பிய இளவரசு, இனிமேல் ஒரு உசுரு கூட அப்படி போகக் கூடாது என்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். ஒருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை என்றும் அனைவர் மீதும் தவறு உள்ளதாகவும் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இளைஞர்கள் எதை செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை பகுத்தறிந்து செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கு எந்தவொரு தீமையும் நடக்காது என்றும் கூறினார்.
இட்லி கடை படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல்களை அள்ளிய இளவரசுவின் நறுக் பதில்களை வீடியோவாகவும் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications











