For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாயோன் படத்திற்கு இளையராஜா இசையமைக்க அதிக நாட்கள்.... என்ன காரணம் என்று சொன்ன சிபி

  |

  சென்னை: நடிகர் சிபி சத்யராஜ், நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது மாயோன் திரைப்படம்.

  Recommended Video

  Sibiraj & Arun Mozhi Manickam | Maayon படத்தில் Ilaiyaraajaவின் பங்களிப்பு |*Interview

  சமீபத்தில் நடிகர் சத்யராஜ் தனது மகனுடன் தியேட்டர் சென்று இந்த படத்தை பார்த்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அது மட்டும் அல்லாமல் எனக்கு தெலுங்கில் இருக்கும் நடிகர்களின் அழகு குறித்த ரகசியங்கள் தெரியும் என்று மாயோன் படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ் தெரிவித்தார்.

  தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஹேமா.. கதறியழும் வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்! தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஹேமா.. கதறியழும் வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!

  பாம்பு தொடர்பு உண்டு

  பாம்பு தொடர்பு உண்டு

  கேள்வி: சிபி சத்யராஜ், மாயோன் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: மாயோன் திரைப்படம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நான் தொல்லியல் துறை அதிகாரியாக நடித்துள்ளேன். கிஷோர் இயக்கியுள்ள இப்படத்திற்கான திரைக்கதையை தயாரிப்பாளரும், நடிகருமான அருண்மொழி மாணிக்கம் எழுதியுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை நகரங்களில் நடத்தினோம். படப்பிடிப்பின்போது, ஒரு கதாபாத்திரத்திற்கு வர வேண்டிய நடிகர் வராத காரணத்தினால், தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவரே நடிப்பதாக ஒத்துக் கொண்டு அந்த கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளார். மாணிக்கம் என்பதற்கு எப்போதும் பாம்பு தொடர்பு உண்டு என்பது போல அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை ஒரு செண்டிமெண்ட் டச் கொடுத்து உள்ளார். சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற பாம்பு சென்டிமென்ட், இந்த படத்திலும் செயல்பட்டால் நன்றாக இருக்கும். பாம்பு என்ற வார்த்தை மற்றும் அதன் காட்சிகள் தற்போது யுனிவர்செல்லாக மாறியுள்ளது என்றார் சிபி.

  அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை...

  அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை...

  கேள்வி: தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், நீங்கள் இப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: கோவில்களின் தரிசனத்தை எல்லா வீடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறோம். கொரோனா காலக்கட்டத்தில் 7 நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டிய நிலையில், எதார்த்தமாக நான் இப்படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. இதற்கு முன்பு வெள்ளித்திரை என்ற படத்திலும் நண்பருக்காக நடித்து கொடுத்துள்ளேன் . அது தான் முதன் நடிப்பு அனுபவம்.படப்பிடிப்பின் போது, மாணிக்கத்தை நாங்கள் தோண்டி எடுக்கவில்லை. ஆனால் மாணிக்கம் போன்ற படத்தை கொடுத்துள்ளோம். இப்படத்தின் கதையானது அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது. நான் திரைக்கதையை எழுதியவுடன், கதைக்கு என்னவெல்லாம் தேவையோ அதை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக போஸ்ட் புரோடக்ஷன்போது அதிகமாக வேலை செய்தேன். தற்போது வரும் சில சினிமாக்களில் டப்பிங் மேட்ச் ஆவதில்லை. போஸ்ட் புரோடக்ஷனின்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உடன் இருந்து பணியாற்றினால் இது போன்ற தவறை தடுக்க முடியும் என்றார் அருண்.

  15 நாட்கள் கேட்ட இளையராஜா

  15 நாட்கள் கேட்ட இளையராஜா

  கேள்வி: சிபி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களில் உங்களுக்கு பிடித்தது?

  பதில்: சுத்தமான தமிழில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் படத்தின் துவக்கத்தில் தொல்லியல் துறையின் முக்கியத்துவம் மற்றும் அதில் நடைபெறும் தவறுகள் குறித்து நான் பேசுவது ரொம்ப பிடிக்கும் என்றார்.

  கேள்வி: இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தது குறித்து....

  பதில்: இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மாயோன் மணிவண்ணா என்ற பாடலை ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடியுள்ளனர். இப்பாடலை எங்கு வைக்க வேண்டும்? எப்படியிருக்க வேண்டும் என்று இளையராஜா தெரிவித்தார். அதற்காக திரும்பவும் ஷூட்டிங் செய்தோம். மற்ற படங்களுக்கு இசையமைக்க மூன்று முதல் நான்கு நாட்கள் இளையராஜா எடுத்துக் கொள்வார். ஆனால் இந்த படத்திற்கு 15 நாட்கள் தேவை என்றார். ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்கள் சேர்ப்பது அவருக்கு மிகவும் பிடித்து கொஞ்சம் அதிக நாட்கள் எடுத்து கொண்டார் உரிமையுடன். முழு மனதுடன் எங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.

  அழகு குறித்த ரகசியங்களை...

  அழகு குறித்த ரகசியங்களை...

  கேள்வி: கேமராமேன் சிவராம்பிரசாத் குறித்து, சிபி நீங்கள் கூற விரும்புவது...

  பதில்: இளையராஜா எப்படியோ அது போன்ற கேமராமேன் சிவராம் பிரசாத் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். தமிழில் முதன்முறையாக கேமராமேனாக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் ராஜமவுலி, மகேஷ்பாபு மற்றும் தற்போது வெளிவந்துள்ள அகண்டா போன்ற படத்திலும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் கதையானது இவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. மேலும் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் அழகு குறித்த ரகசியங்களை எனக்கு அவ்வப்போது தெரிவிப்பார். யோகா, தியானம் குறித்தும் தெரிவித்தார். இன்னும் சொல்லப்போனால் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தான்யா முக்கியத்துவம்

  தான்யா முக்கியத்துவம்

  கேள்வி: சிபி, நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

  பதில்: பொதுவாக திரைப்படங்களில் நடிகைகளை பாடலுக்காகவும், கவர்ச்சியாகவும் பயன்படுத்துவர். சமீபகாலமாக தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகும் படங்களில், நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே போன்று இப்படத்திலும் நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகைகள் நடிக்கும் படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படமும் ரொம்ப பிடிக்கும் என்றார் சிபி .

  ஸ்கிரிப்ட் படிக்க மாட்டார் சத்யராஜ்

  ஸ்கிரிப்ட் படிக்க மாட்டார் சத்யராஜ்

  கேள்வி: சபி உங்களின் சினிமாப் பயணத்தில், உங்கள் அப்பாவின் தலையீடு எந்தளவுக்கு இருக்கிறது?

  பதில்: நான் நடித்த லீ படம் வரைக்கும் அப்பாவின் இன்வால்மென்ட் இருந்தது. இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கும், அப்பாவிற்கும் சிறிய இடைவெளி உள்ளது. லீ படத்திற்கு பிறகு, அப்பா தலையிடுவதில்லை. அதற்கு பிறகு நான் நடித்த படங்களான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை போன்றவை நல்லபடியாக அமைந்தது. அப்பாவை பொறுத்தவரை அந்த கால கட்டத்தில் ஸ்கிரிப்ட் படிக்க மாட்டார். Narration மட்டும் பார்ப்பார். அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் பி.வாசு, மணிவண்ணன் போன்றோர் Narration மட்டும் செய்தனர்.

  இளம் இயக்குனர்கள் திறமை

  கேள்வி: நடிகர் சத்யராஜ்க்கு ( உங்க அப்பாவுக்கு )இயக்குநர் மணிவண்ணன் அமைந்தது போல், உங்களுக்கு யாரும் அமையவில்லை இன்று வரை என்று நினைத்தது உண்டா ?

  பதில்: அப்பாவுக்கு இயக்குநர் மணிவண்ணன் அமைந்தது போன்று எனக்கு அமையவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு வேளை இருக்கலாம். ஆனால் ஒரு சில இயக்குநருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன். குறிப்பாக நாணயம் பட இயக்குநருடன் நாய்கள் ஜாக்கிரதை படத்திலும், ஜாக்சன் துரை பட இயக்குநருடன் ரேஞ்சர் படத்திலும், சத்யா, கபடதாரி பட இயக்குநருடன் மற்றொரு படத்திலும் இணைந்துள்ளேன் . இன்னும் சொல்லப்போனால் எனக்கு Comfortable இயக்குநருடன் நான் பணியாற்றுகிறேன். மேலும் தற்போது வரும் இளம் இயக்குநர்கள் நிறைய திறமைகளுடன் வருகிறார்கள் என்றார் சிபி.

  இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=IDIWnzQQrNg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகர் சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  Ilayaraja Took More Time To Music for Maayon Movie Says Sibiraj
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X