ரஜினிக்கு போட்டியாக களமிறங்கிய ரீல் மகன்... கூலி வசூலை குறைக்குமா வசந்த் ரவியின் இந்திரா? ஓபன் பேட்டி!
வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இந்திரா' திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்கிறார் நடிகர் வசந்த் ரவி. இப்படத்தில் அவர் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார்.
சமீபத்தில் இப்படக்குழுவினர் அளித்த பேட்டியில், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனக்கு தமிழ் மொழி புதியது என்றும், வசனங்களை உச்சரிக்க நடிகர் வசந்த் ரவி உதவி செய்தார் என்றும் கூறினார். மேலும், ஒரு நல்ல நடிகருடன் நடிக்கும்போது, நம்முடைய நடிப்பும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார். இயக்குநர் படத்தை அழகாக வடிவமைத்துள்ளார் என்றும் கூறினார்.

நடிகர் வசந்த் ரவி பேசுகையில், "இந்த படத்தில் நிறைய உழைப்பை போட்டுள்ளோம். இப்படத்தில் டபுள் ஷிஃப்ட் முறையில் கூட வேலை செய்தோம். பல வருடங்களுக்கு பிறகு நான் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறேன். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி," என்றார்.
தயாரிப்பாளர் பேசுகையில், "சினிமாவை பொறுத்தவரை டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். 'இந்திரா' படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல வியாபாரம் செய்யும். படத்தின் இயக்குநர் கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளார்," என்றார்.
திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இது ஒரு சாதாரண பாப்கார்ன் திரைப்படம் அல்ல. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய ட்விஸ்ட்டுகள் உள்ளன. படத்தில் காதல், அழகான பாடல்கள், எமோஷன் என அனைத்தும் கலந்துள்ளன. ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாகவும் வில்லனாகவும் நடித்த வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படமும் பெரிய வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











