Don't Miss!
- News
உங்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கா - இபிஎஸ்க்கா? வந்து விழுந்த கேள்வி..ஒரு நொடி யோசித்து ஜிகே வாசன் சொன்ன பதில்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என் கிட்ட நிறைய சரக்கு இருக்கு.. சீக்கிரமே படம் இயக்க போறேன்.. நடிகர் பப்லு ஓப்பன் டாக்!
சென்னை: நான்கு சுவர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏகப்பட்ட படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது ஆபார நடிப்புத் திறமையால் அசத்தி வரும் நடிகர் பப்லுவின் சிறப்பு பேட்டி வெளியாகி உள்ளது.
அசாத்திய திறமைக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் பப்லு பிருத்விராஜ்.

தல அஜித் உடன் இணைந்து அவர் நடித்த அவள் வருவாளா படம் இன்று வரைக்கும் நடிகர் பப்லுவை தல ரசிகர்கள் கொண்டாட காரணமாக உள்ளது.
உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க ஏகப்பட்ட ஃபிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்து நடிகர் பப்லு செய்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் வொர்க்கவுட் புகைப்படங்களும் சமீபத்தில் வைரலாகின.
தல அஜித்தும் அவரது சகோதரியும் ஒரே கிளாஸ் மேட் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வரையிலும் நடிகர் அஜித் மற்றும் விஜய் தன்னை பார்த்தால் அவங்களாவே வந்து பேசுவாங்க.. அந்த அளவுக்கு அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என செம ஓப்பனாக பேசியுள்ள பேட்டி நம்முடைய ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.
இளம் பருவத்தில் பெண் ரசிகைகளை கவரவே வொர்க்கவுட் பயிற்சிகளை ஆரம்பித்ததாகவும் பின்னர் அது அப்படியே பிடித்துப் போக தற்போது வரை அதை தொடர்ந்து செய்து வருகிறேன் என்றும், தனக்கு இன்னமும் 34 வயது தான் அதை வெளியே யாரும் சொல்லிடாதீங்க என நடிகர் பப்லு பிருத்விராஜ் நகைச்சுவையாக பேசி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதளவில் கை கொடுக்காத நிலையில், தற்போது டோலிவுட்டில் அதிக அளவில் நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன் என்றும், சீக்கிரமே ஒரு படத்தை தயாரித்து இயக்கி அதில் ஹீரோவாகவும் நானே நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஹாட் அப்டேட்டை நடிகர் பப்லு கொடுத்துள்ளார்.
மர்மதேசம் சீரியல் மூலமாக சின்னத்திரை பக்கம் வந்த பப்லு பிரேமி, ரமணி வெர்சஸ் ரமணி, ராஜ ராஜேஷ்வரி, அரசி, அலைபாயுதே, கோகுலத்தில் சீதை, வாணி ராணி, கண்ணான கண்ணே, அன்பே வா என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து கலக்கி வருகிறார்.
நடிகர், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என ஏகப்பட்ட சரக்கு தன்னிடம் இருப்பதாகவும் விரைவில் அதனை பெரிய அளவில் திரைப்படம் ஒன்றை இயக்கி வெளிப்படுத்த காத்திருப்பதாகவும் இந்த பேட்டியில் நடிகர் பப்லு கூறியுள்ளார்.
1971ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு என இதுவரை 50 ஆண்டுகளாக நடிப்புத் துறையில் பல கஷ்ட நஷ்டங்களை தாண்டி இன்னமும் வேறூன்றி நிற்கிறார் பப்லு என்பதே அவர் செய்த மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர் பப்லு நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் வாணி ராணி சீரியலுக்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரேக் கொடுத்திருக்கிறது.
அந்த சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறித்தும், அந்த சீரியல் தொடர்பாக ஏகப்பட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை தன்னிடம் கேட்பதாகவும் மிகவும் சந்தோஷமாக வெளிப்படையாக பப்லு பேசும் இந்த பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!