Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. சீரியல், சினிமா, அரசியல்.. லியோனியின் சிறப்பு பேட்டி!
சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக புதிய படம் ஒன்றையும் ஜீ தமிழில் சீரியல் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.
கோலங்கள் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அழியாத கோலமாக மாறிய தேவையானி மீண்டும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான கலைமாமணி திண்டுக்கல் லியோனி இந்த சீரியல் மூலம் நடிகராக சின்னத்திரையில் முதன்முறையாக அறிமுகமாகிறார். அவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

மாஸ்டர் தயாரிப்பாளர்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ ஜீ தமிழில் புதிதாக சீரியல் ஒன்றை தயாரித்து வருகிறார். அந்த சீரியலுக்கு புதுப்புது அர்த்தங்கள் என பெயர் வைத்துள்ளனர். நடிகை தேவையானி இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்துள்ளார். கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சீரியல் ஓளிபரப்பாகி வருகிறது.

மீண்டும் தேவையானி
தமிழ் சினிமாவில் நடிகையாக பல ஹிட் படங்களில் நடித்த தேவையானி சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம் மற்றும் ராசாத்தி என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். சில காலங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் மீண்டும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார்.

திண்டுக்கல் லியோனி
சில படங்களில் நடித்துள்ள பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி முதல் முறையாக இந்த சீரியலில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் துவக்க விழாவுக்கு போனவரை இயக்குநர் மேடையிலேயே நீங்களும் ஒரு ரோலில் நடிங்க என சொல்ல, தயாரிப்பாளர் சேவியரும் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த வாய்ப்பை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டதாக லியோன் இந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆலம்பனா, பன்னி குட்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளாராம் லியோனி.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்
திமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல ஆண்டுகளாக விளங்கி வரும் திண்டுக்கல் லியோனி, தேர்தல் நேரம் என்பதால், அரசியல் களம் குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார். எங்கே பார்த்தாலும் திமுகவுக்குத் தான் வரவேற்பு இருக்கிறது என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!