For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வயசாகியும் சில ஹீரோஸ் ரொமான்ஸ் அருவருப்பா இருக்கு.. நடிகர் மாதவன் ஓப்பன் டாக்.. வைரலாகும் பேட்டி!

  |

  சென்னை: வயசாகியும் சில ஹீரோக்களின் ரொமான்ஸ் அருவருப்பா இருக்கு என நடிகர் மாதவன் ஓப்பனாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

  வயசாகியும் சில HEROES ROMANCE ...அருவருப்பா இருக்கு | CLOSE CALL WITH MADHAVAN | FILMIBEAT TAMIL

  டிவி தொடரை விட்டு விட்டு அலைப்பாயுதே படத்திற்காக நடிக்க வந்த அனுபவங்களையும், தியேட்டரில் அவருக்கு கிடைத்த மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸையும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

  மாதவன், அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார்.

  எ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

  துப்பட்டாக்கள் பறந்தன

  துப்பட்டாக்கள் பறந்தன

  அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மாதவன், கலவையான விமர்சனங்கள் என அந்த படத்தின் போதே விமர்சிக்கப்பட்ட நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு செட்டிலாகி விடலாம் என்கிற தனது ஐடியாவையே கை விட நினைத்தாராம். ஆனால், தேவி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்க்கும் போது, மாதவனின் அறிமுக காட்சிகளுக்கு பெண்கள் எல்லாம் துப்பட்டா பறக்கவிட்டு கொண்டாடியதை பார்த்ததும், சென்னையில் வந்து செட்டில் ஆகி விட்டேன் என்றார்.

  அரசியலுக்கு வர ஐடியா இருக்கா

  அரசியலுக்கு வர ஐடியா இருக்கா

  ஏகப்பட்ட நல்ல விஷயங்களை விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் மாதவன். அவரிடம் அரசியலுக்கு வர ஐடியா இருக்கா என்ற கேள்வியை மறைமுகமாக கேட்டதும், உடனே புரிந்துக் கொண்ட அவர், அரசியலுக்கு வரணும்னா ரூல் பண்ணனும்னு வரக் கூடாது. சர்வீஸ் பண்ணனும்னு வரணும் என்றார்.

  அப்படியே விட்டுட்டு வரணும்

  அப்படியே விட்டுட்டு வரணும்

  அதுமட்டும் இல்லைங்க தலைவனா மாறணும்னா, எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக மட்டுமே இறங்கி வரணும். அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வச்சிக்கிட்டு நானும் அரசியல் பண்றேன் என மக்களை ஏமாற்றக் கூடாது. ஆக்சுவலா நான் ஒரு லீடர் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. இப்படி சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மக்களுக்காக வருவேனான்னும் தெரியல என வெளிப்படையாக பேசினார்.

  ரொமான்ஸ் படங்களில் நடிப்பீங்களா

  ரொமான்ஸ் படங்களில் நடிப்பீங்களா

  சாக்லேட் பாயாகவும், பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவனாகவும் இருந்த மேடி, ரன் படத்தில் ஷட்டர் இழுத்து சாத்துவது போல லவ் படங்களுக்கு ஷட்டர் இழுத்து சாத்தி விட்டாரே ஏன்? என்ற கேள்விக்கு, இப்படி வெள்ளை தாடி, வெள்ளை முடி எல்லாம் வச்சிக்கிட்டு எப்படி ரொமான்ஸ் பண்றதுன்னு நானே என்னை கேள்விக் கேட்டுக்கிறேன். நல்ல கதைகளை மட்டுமே தேர்வு பண்ணி நடிக்கிறேன் என்றார்.

  அருவருப்பா இருக்கு

  அருவருப்பா இருக்கு

  மேலும், சில ஹீரோக்கள் வயசான பிறகும் இளம் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்தால் அருவருப்பாத் தான் இருக்கு என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் மாதவன். டை அடிச்சிட்டு நடிக்கலாமே என்கின்றனர். ஆனால், வெளிய மட்டும் இல்ல உள்ளேயும் நரைத்து விட்டது என்று சொல்லி அனுப்பி வருகிறேன் என்றார் சிரித்துக் கொண்டே.

  அமேசானில் ரிலீஸ்

  அமேசானில் ரிலீஸ்

  இயக்குநர் ஹேமந்த் மதூக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஹாலிவுட் நடிகர் மேடிசன் நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் வரும் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த படத்தில் இசைக் கலைஞராக மாதவன் நடித்துள்ளார். நிச்சயம் ரசிகர்கள் ஒடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

  இன்னும் 2 படங்கள்

  இன்னும் 2 படங்கள்

  நடிகர் மாதவன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ராக்கெட்டரி படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. தமிழ் பிலிமி பீட்டுக்கு செம சூப்பராக பேட்டியளித்த மாதவன், அடுத்து அந்த படங்களின் வெளியீட்டின் போது ரசிகர்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.

  English summary
  Actor Madhavan gives a special interview for his upcoming movie Nishabdham (Silence). Also he talked lot about Politics, Romance movies and etc.,
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X