»   »  என் பொறுமைக்கு பலன் கிடைச்சிடுச்சி! - நடிகை மகிமா

என் பொறுமைக்கு பலன் கிடைச்சிடுச்சி! - நடிகை மகிமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு.

அப்படி 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர்.

அவருடனான ஒரு சிறு உரையாடல்...

சாட்டை

சாட்டை

சாட்டை அறிமுகம் பற்றி..

பிரபு சாலமன், ஜான்மேக்ஸ் மைனாவுக்கு பிறகு எடுக்கிற படம்..அன்பழகன்னு புது இயக்குனர். சமுத்திரகனி, தம்பி ராமய்யான்னு நட்சத்திர நடிகர்கள். இத்தனை ஜாம்பவான்கள் ஓடுகிற ரேசில் நானும் ஓடினேன். நல்ல நடிகைன்னு பேர் கிடைச்சது. எவ்வளவோ நடிகர், நடிகைகள் அடையாளம் தெரியாமல் போகும்போது. என்னை பாராட்டி எழுதிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோருக்குமே நன்றி! அத்துடன் சாட்டை படத்தின் யூனிட் எல்லோருக்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்.

மறுக்கிறீர்களாமே

மறுக்கிறீர்களாமே

நிறைய படங்களில் உங்களை நடிக்க கேட்டும் நடிக்க மறுக்கிறீர்களாமே உண்மையா ?

நிறைய படங்களில் நடிக்கக் கேட்டது உண்மையே. நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. இப்பத் தான் படிப்பை முடித்தேன். மொசக்குட்டி, அகத்திணை ரிலீஸாகி விட்டது.

இப்ப விஜய் சேதுபதியுடன் மெல்லிசை, தினேஷ்சுடன் அண்ணனுக்கு ஜே, புரவி எண் என படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இப்ப கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறேன். பூரி ஜெகன்நாத் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ. வினோத் விஜயன்ங்கிறவர் இயக்கும் படம். ராஜீவ் ரவி காமிரான்னு எல்லோருமே ஜாம்பவான்கள். ஷூட்டிங் போயிட்ருக்கு.

பொறுமை

பொறுமை

பொறுமையா இருந்தா சாதிக்கலாம்கிற தேவ வாக்கின் மகிமையை உணர்ந்தவள். எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்க நான் தயாரில்லை. நடிச்சதுல எத்தனை படம் நல்ல படம்ன்னு கணக்கு பாக்குறவ நான். எனக்கு வயசு இருக்கு பொறுமையாக நின்னு சாதிப்பேன்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மகிமா.

English summary
Actress Mahima says that she is doing a movie in 5 languages directed by Poori Jagannath's brother.
Please Wait while comments are loading...