»   »  புதிய சர்ச்சையில் மீரா!

புதிய சர்ச்சையில் மீரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Meera Jasmine

மலையாளப் படத் தயாரிப்பாளர் தம்பி ஆண்டனியின் துபாய் வீட்டை விற்று கொல்கத்தாவில் தான் பிளாட் வாங்கியதாக, ஆண்டனி கூறியுள்ள குற்றச்சாட்டை நடிகை மீரா ஜாஸ்மின் மறுத்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் நல்ல நடிப்புக்காக பேசப்பட்டாலும் கூட அவ்வப்போது சர்ச்சையிலும் அடிபட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் ஹீரோ பவன் கல்யாணுடன், தகராறில் ஈடுபட்டதாக மீரா மீது புகார் எழுந்தது.

அடுத்த நாளே, மலையாள தயாரிப்பாளர் தம்பி ஆண்டனி, மீரா ஜாஸ்மின் மீது பரபரப்பு புகாரை எழுப்பினார். அவர் 'கொல்கத்தா நியூஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். பிளஸ்ஸிதான் இப்படத்தைஇயக்குகிறார்.

மீரா செய்த தாமதத்தால், 6 மாதங்களாக இப்படப்பிடிப்பு இழுத்து வருவதாகவும், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் தம்பி ஆண்டனி புகார் கூறினார். மேலும் மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் அவர் மீரா மீது புகார் பதிவு செய்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் ஒரு பிளாட் வாங்க விரும்பிய மீராவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக துபாயில் இருந்த தனது வீட்டை விற்றதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் தம்பி ஆண்டனி.

ஆனால் இதை மீரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றிய இன்னும் ஒரு தவறான செய்தி இது. என் மீது எவ்வளவு சுலபமாக அவதூறைகள அள்ளி வீசுகிறார்கள் பாருங்கள்.

கொல்கத்தா நியூஸ் படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் தந்தார்கள் என்பதை அவர்கள் கூற முடியுமா? மலையாளத் திரையுலகில் எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நான் வாங்குகிற சம்பளம், துபாயில் உள்ள வீட்டின் மதிப்புக்கு சமமானதா என்பதை நீங்களே சொல்லுங்கள்?

நான் ஒரு பிளாட் வாங்கினேன். இல்லை என்று சொல்லவில்லை. நான் தங்குவதற்காக அந்த வீட்டை வாங்கினேன். ஆனால் யாருடைய பணத்திலும் அதை வாங்கவில்லை. எனது சொந்தப் பணத்திலிருந்துதான் அதை வாங்கினேன்.

நான் பிளாட் வாங்கியது குறித்து தயாரிப்பாளர் தம்பி ஆண்டனி கவலைப்படத் தேவையில்லை. முதலில் நான் கொடுத்த கால்ஷீட்டை சரியாக அவர் பயன்படுத்தட்டும். அதை விடுத்து தேவையில்லாத புகார்களை அவர் கூறக் கூடாது.

என் மீது துவேஷம் கொண்டுள்ள சில பத்திரிக்கையாளர்கள்தான் இப்படி அவதூறான செய்தியை, தயாரிப்பாளருக்காக பரப்பி விடுகின்றனர் என்றார் மீரா.

ஏற்கனவே மீராவுக்கு கொச்சி, பெங்களூர், சென்னையில் வீடுகள் உள்ளன. சமீபத்தில் கேரள மாநிலம் சோரனூரில் பெரிய பங்களா ஒன்றையும் அவர் கட்டி முடித்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் பிளாட் வாங்கியதாகவும், அதில் தயாரிப்பாளர் பணம் போண்டியானதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil