»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

கோலிவுட் நடிகைகள் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நான் மனிஷா பற்றியும், சுஷ்மிதா சென்பற்றியும், எந்த விதமான குற்றச்சாட்டையும்மனமறிந்து சொன்னதே இல்லை. நான் நம்பிக்கை வைத்திருக்கும், அனைத்தின் மீதும்சத்தியம் செய்து சொல்கிறேன் - -அ-வை-யெல்-லாம் பத்திரிக்கையாளர்களின்ஜோடிப்பால் கற்பனையில் பிறந்த செய்திகள்.

இது போன்ற பத்திரிக்கைகளின் அதர்மச் செயல்களை நான் கண்டிக்கிறேன். தங்கள்இஷ்டம் போல எழுதுவதன் மூலம் தங்கள் பத்திரிக்கைகளின் பக்கங்களை நிரப்பிவிடமுடியும். ஆனால், இதன் மூலம் சினிமாத்துறையை நம்பியுள்ள என்னைப் போன்றநடிகைகளுக்கு எவ்வளவு பெரிய அநீதி செய்து வருகிறார்கள் என்பதை சிந்தித்துப்பார்ப்பதிலலை. அவர்கள் பிழைப்பு நடக்க வேண்டும் என்பது மட்டுமே குறி-யா-க-இருக்-கி-றார்--கள்.

எனக்கு அழகைக் கொடுத்தது ஆண்டவன். என் முக அழகையும், உடல் அழகையும்.நானே ஏன் குறைத்துக் கொள்ள வேண்டடும்.

நான் மனோதத்துவ ரீதியாக எண்ணிப் பார்ப்பதுண்டு.உலக அழகி பட்டம் பெற்றவள்என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, மற்ற நடிகைகள் குதர்க்கமாக ஒரு வார்த்தைகூடசொல்லிவிடாதபடி அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும்,

வலிமையான தேக அமைப்பு எனக்குக் கிடையாது. அற்பமான காதல்விளையாட்டுக்களில் ஈடுபடுகிற அளவிற்கு வலிமையான தேக அமைப்பு எனக்குக்கிடையாது

கோலிவுட் ஹீரோக்களோடு உங்களைச் சேர்த்துபல வதந்திகள் வருகிறதே?

அக்ஷய்கன்னா, சல்மான்கான்,மற்றும் என்னோடு நடிக்கும் ஹீரோக்களோடு என்னைஇணைத்து பத்திரிக்கைகளில் வெளிவருவது வதந்திகள்தான் உண்மையல்ல.

சல்மான்கான் குழந்தை உள்ளம் கொண்வர் என்னை நேசிப்பதாக நடிப்பார்.

காதல் பற்றி அழகியின் பார்வை என்ன?

எனக்கு காதலிக்கநேரம் இல்லை. எனக்கும் காதலிக்க ஆசைதான். காதல் மீதுநம்பிக்கை உண்டு. நட்பிலிருந்து மலர வேண்டும். ஒரே நாளில் மலர்ந்து விடாதுமெல்ல மெல்லத்தான் உருவாகும், அப்போது நிச்சயம் காதலிப்பேன்.

என் இதயத்தை கவர்வது விடக் கூடிய ஆண் எவரையும் நான் இது நாள் வரைசந்திக்கவே இல்லை. என்னைக் காதல் வலையில் சிக்க வைக்க நீண்ட அவகாசம்தேவைப்படும். காரணம் நான் பாதுகாப்பான குடும்பத்திலிருந்து வந்தவள்.

அன்பான பெற்றோர்கள், அவர்கள் அரவணைப்பும் என்னை அவவளவு எளிதில்வேறு பக்கம் திசை திருப்ப விடுவதில்லை. நான் எதிர்பார்க்கும் ஆணிடம் கன்னியம்இ-ருக்-க வேண்டும்.

சுஷ்மிதா சென், யுக்தா முகி, லாரா தத்தா பற்றி?

உலக அழகியாக தேர்வு பெற்ற ஒரு தகுதியால் நடிகையான எனக்கு, அடுத்தபடியாக,சுஷ்மிதா சென் வந்தார். யுக்தா முகி, லாரா தக்தா போன்றவர்கள், உலக அழகியாகதேர்வு பெற்று அந்த தகுதியைப் பெற்றுள்ளார்கள் அவர்களை நான் மகிழ்சியுடன்வரவேற்கிறேன். நல்ல சினிமா வாய்ப்புகள் வந்தால் சினிமா உலகிற்கு இவர்களும்வரவேண்டும் என்று வரவேற்கிறேன்.

கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் பற்றி சொல்லுங்களேன்?

இருவர், ஜீன்ஸ் படங்களைத் தொடர்ந்து கண்டு கொண்டேன், கண்டுகொண்டேன்என்னுடைய மூன்றாவது தமிழ் படம். முந்திய இரண்டு படங்களும் பம்பாயில் பெரியவெற்றியை பெறவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் நிச்சயம் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

படத்தின் பிரிவியூவிற்கு என்னை அழைத்திருந்தார்கள். என்னால் வர முடியாதசூழ்நிலை .நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால், கலந்து கொள்ளமுடியவில்லை. ராஜீவ் மேனன் டைரக்ட் செய்த விளம்பரப் படங்களில் நான்நடிக்கவில்லையே என்ற குறை இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது. ஒரு அற்புதமானமூவியாகவும், நல்ல கதையுள்ள படமாகவும், அவர் எடுத்திருக்கிறார். என்னைசிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்.

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கத் தொடங்கிய போதுஎன்னுடைய பொறுப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. இடையில் எனக்குக்கிடைத்த வெற்றியினால் என்னுடைய பொறுப்புகள் அதிகமாகிவிட்டதாகநினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாத் துறையில் உள்ள பலவிஷயங்களைத் தெரிந்தும், புரிந்தும் கொண்டும் விட்டேன். அதனால் என் மூலம்எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன் என்-றார் அந்-த ஊதாக்கண்-கள் மிளி-ர.

Read more about: beauty, cinema, iswarya rai
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil