Just In
- 48 min ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 1 hr ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 1 hr ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 1 hr ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
- Automobiles
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவர்ச்சி டிரஸ் போடுவேன்... பிக் பாஸ்க்கு கூப்பிட்டா போக மாட்டேன் - ஐஸ்வர்யா மேனன் ஜில் பேட்டி
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு கூப்பிட்டால் போக மாட்டேன் என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் கூறியுள்ளார். நான் அம்மா அப்பாவை விட்டு எங்கேயும் போக யோசிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3யில் லாஸ்லியா செம க்யூட் என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
தீயா வேலை செய்யணும் குமாரு உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். தமிழ்படம் 2வில் மிர்ச்சி சிவா உடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய பொண்ணு ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் மட்டுமல்லாது, மலையாள படம் மூலம் ஹிட் கொடுத்தார்.
இப்போது தெகிடி ஹீரோ உடன் ஒரு படத்தில் ரொமான்ஸ் செய்கிறார். டப்பிங் ஸ்டியோவில் பிசியாக இருந்த அவருடன் ஒரு எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ.

குடும்பம் எப்படி
கொங்குத்தமிழில் பேசும் இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். அம்மா, அப்பா, அண்ணன் என அனைவருமே படித்திருக்கிறார்கள். சினிமாவிற்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அண்ணன் டாக்டராக ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று குடும்பத்தைப் பற்றி உற்சாகமாக பேசுகிறார் ஐஸ்வர்யா.

சினிமா ஆர்வம்
சின்ன வயதில் இருந்தே டான்ஸ் ஆட பிடிக்கும். அதுதான் சினிமா மீதான ஆர்வத்தை துண்டியது. என்னை பல நடிகைகளுடன் கம்பேர் செய்திருக்கின்றனர். ஆனால் நான் ஐஸ்வர்யா மேனன் ஆக இருப்பதைத்தான் விரும்புகிறேன்.

கவர்ச்சி உடை
தமிழ் படம் 2 விற்கு பிறகு இப்போது அசோக் செல்வனுடன் சேர்ந்து திரில்லர் கலந்த ரொமான்ஸ் படத்தில் நடிக்கிறேன். ஊட்டி குளிரில் சூட்டிங் நடந்தது. நடுங்கிக் கொண்டே படத்தை எடுத்தனர். சூட்டிங்கில் நான் கவர்ச்சி உடை அணியமாட்டேன் என்று சொல்ல மாட்டேன். காட்சிக்கு எது தேவையோ அதற்கேற்ப ஒத்துக்கொள்வேன். படப்பிடிப்பில் எனக்கு வசதியான உடைகளை மட்டுமே அணிவேன் என்று கூறினார்.
பிக் பாஸ் ஒவியா
பேச்சு பிக்பாஸ் பக்கம் திரும்பியது. பிக்பாஸ் சீசன் 1 பார்த்தேன். ஓவியா எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டாவது சீசன், மூன்றாவது சீசன் பார்க்கவில்லை. ஆனால் இந்த சீசனில் லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி இருக்கிறார் செம க்யூட்டாக இருக்கிறார் என்று கூறினார் ஐஸ்வர்யா.

தியேட்டர்ல படம் பாருங்க
திரில்லர் கமர்ஷியல் படங்கள் பிடிக்கும். அதில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருஷம் என்னோட படம் ரிலீஸ் ஆகப்போகுது தியேட்டர்ல போயி பாருங்க என்று கூறி முடித்தார் ஐஸ்வர்யா மேனன். ரசிகர்களே ஐஸ்வர்யா மேனனுக்கு ஆதரவு கொடுங்க.