»   »  'மிருதன்' ஜெயம் ரவிக்கு பிடிச்ச ஸோம்பி படம் எது தெரியுமா?

'மிருதன்' ஜெயம் ரவிக்கு பிடிச்ச ஸோம்பி படம் எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

'மிருதன்' ஜெயம் ரவிக்கு பிடிச்ச ஸோம்பி படம் எது தெரியுமா?

சென்னை: மிருதன் படம் வெளியானதையொட்டி தனது ரசிகர்களுடன் ஜெயம் ரவி கலந்துரையாடல் ஒன்றை ட்விட்டரில் நிகழ்த்தினார்.


அதில் தனக்குப் பிடித்த படம், தனது ஆசை போன்ற பல தகவல்களை ரசிகர்களிடத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


#askmiruthan என்ற தலைப்பில் ஜெயம் ரவி ரசிகர்களிடம் உரையாடியதில் இருந்து ஒருசில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே காணலாம்.


நேரடித் தெலுங்கு

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நீங்கள் நேரடித் தெலுங்கு படத்தில் நடிப்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று ஜெயம் ரவி பதிலளித்தார்.


அதிகமாக யாரை

அம்மா, மனைவி இருவரில் யார் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்? என்ற மோகன் பார்த்திபன் கேள்விக்கு இருவருமே என்று ஜெயம் ரவி பதில் கூறினார்.


ஆளவந்தான்

ஆளவந்தான் படத்தில் உலகநாயகன் கமலுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியது எப்படி இருந்தது? என்று மானிடன் கேட்டதற்கு எனக்குக் கிடைத்த பாக்கியம் அது என்னை மெருகேற்றிக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.


சிறந்த சகோதரன்

உங்கள் சகோதரர் மோகன்ராஜா பற்றி கூறுங்கள் என்ற கேள்விக்கு எப்போதும் சிறந்த சகோதரர் என்று கூறியிருக்கிறார்.


ரஜினியாக

நீங்கள் காலையில் தூங்கி எழும் போது ரஜினியாக மாறினால் முதலில் என்ன செய்வீர்கள்? ராம்பீர் கேள்விக்கு முதலில் ஜெயம் ரவியை கூப்பிட சொல்வேன் என்று கூறியிருக்கிறார்.


ரெசிடெண்ட் ஈவில்

ரெசிடெண்ட் ஈவில்

ரெசிடெண்ட் ஈவில் தான் தனக்குப் பிடித்த ஸோம்பி படம், அமிதாப் சாருடன் நடிக்க வேண்டும் என்று மேலும் பல தகவல்களையும் ஜெயம் ரவி இந்த உரையாடலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


English summary
Actor Jayam Ravi Live Chat with His Fans Before Miruthan Release.This Chat Session He Shares about his Personnel Experience and Desires.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil