ரவி மோகன் அப்பா ஏன் வரல.. அம்மா அழ என்ன காரணம்?.. மாமியார் பார்த்த வேலை - தயாரிப்பாளர் பகீர்!

சென்னை: ஜெயம் ரவி நேற்று முன்தினம் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், அவர் மாமியாரால் எப்படி மாட்டிக்கொண்டார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஒரு தாயின் கண்ணீர் சொல்லும் கதை என பல விஷயங்களை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஜெயம் ரவி தயாரிப்புத் துறைக்குள் நுழைவது குறித்து பல விமர்சனங்களை முன்வைக்கிறார். "வளர்ந்து கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்களே வெளியேறிவிட்ட நிலையில், ஜெயம் ரவிக்கு என்ன தெரியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

Jayam Ravi New Production House Mother-in-law Controversy Kenisha
Photo Credit:

ரவி மோகன் ஒரு அன்பான, கனிவான மனிதர். 22 வருட சினிமா வாழ்க்கையில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை அவர் காதலிக்கத் தொடங்கியபோது, அவரது பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், சுஜாதா விஜயகுமாரின் குடும்பப் பின்னணி.

எடிட்டர் மோகன் சினிமா துறையில் ஜென்டில்மேனாக அறியப்பட்டாலும், சுஜாதா விஜயகுமார் குடும்பம் ஜெயம் ரவியைக் கட்டுப்படுத்த நினைத்தது. திருமணத்திற்குப் பிறகு, ஜெயம் ரவி மாமியார் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். அவருடைய சினிமா வாழ்க்கையை சுஜாதா விஜயகுமாரே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது.

ஜெயம் ரவி நடிக்க வேண்டிய படம், இயக்குநர், கதை என எல்லாவற்றையும் சுஜாதா விஜயகுமாரே முடிவு செய்தார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. ஒரு கட்டத்தில் அவரே தயாரிப்பாளராக மாறி, ஜெயம் ரவியை வைத்து படங்கள் எடுத்தும் அவை தோல்வியடைந்தன.

Jayam Ravi New Production House Mother-in-law Controversy Kenisha

மாமியார் மற்றும் மனைவியின் கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி சுமார் 10-12 வருடங்கள் இருந்தார். ஒரு கட்டத்தில், அந்தத் திருமண பந்தத்தை உடைத்துவிட்டு வெளியே வந்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் கோவாவுக்குச் சென்று கெனிஷாவைச் சந்தித்தார்.

கெனிஷா ஒரு ஆன்மீக மருத்துவர். அவர் ஜெயம் ரவியின் கஷ்டங்களைப் போக்கினார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. கெனிஷாவுக்கு உலக அளவில் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் ரவி மோகன் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு உதவக்கூடும்.

ரவி மோகனுக்கு படம் இயக்குவதில் அனுபவம் இல்லை. இருப்பினும், அவரே ஒரு படத்தை இயக்கப் போகிறார். அந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் யோகி பாபுவை வைத்து படம் எடுப்பது ஏன் என்று பாலாஜி பிரபு கேள்வி எழுப்புகிறார்.

ரவி மோகன் அம்மா மேடையில் கண்ணீர் விட்டது ஆனந்தக் கண்ணீரா அல்லது வேதனையா என்று தெரியவில்லை. அப்பா எடிட்டர் மோகன் ஏன் வரவில்லை? குடும்பத்தில் ரவி மோகன் - கெனிஷா உறவு தொடர்பாக விருப்பமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்கிறார் பாலாஜி.

ரவி மோகன் ஆபத்தான முடிவு எடுத்துள்ளார். தயாரிப்புத் துறையில் அனுபவம் இல்லாமல் அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, அவரை புதைகுழியில் தள்ளும் என்கிறார் பாலாஜி பிரபு. அறிமுக விழாவுக்காக நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் 50 லட்சம் வாடகைக்கு இடம் பிடித்து பல பிரபலங்களை அழைத்து விழா நடத்தினார். கெனிஷாவின் வெளிநாட்டு நண்பர்களுக்கு ஃபிளைட் டிக்கெட், 5 ஸ்டார் ஹோட்டல் என ரவி மோகன் ஸ்டூடியோஸ் திறப்பு விழாவுக்கே 4 கோடி செலவு செய்திருக்கிறார். ஏற்கனவே ரவி மோகன் வீடு ஜப்தி செய்யும் நிலையில், உள்ளது. அவரது சொத்துக்களையும் முடக்க வழக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர் எப்படி தயாரிப்பு நிறுவனம், இயக்கம் எல்லாம் செய்கிறார் என்கிற கேள்வியும் எழுகிறது. அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்களோ என்கிற சந்தேகமும் எழுகிறது. நல்ல உள்ளம் கொண்ட ரவி மோகன் சீக்கிரமே விழித்துக் கொள்வார் என பாலாஜி பிரபு பேசியுள்ளார்.

More from Filmibeat

Read more about: jayam ravi kollywood news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X